மதங்களுக்குள்ள இருக்க கடவுள்களை உயிர்பிச்சு வைப்பதற்காகவே மனிதனுக்கு பல விதிமுறைகள் போடப்பட்டது.
ஆனா அந்த விதிமுறைகள் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிய வண்ணம் இருந்திருக்கலாம்.
மதத்தை காப்பாற்றுவதற்காக கடவுள் சொன்ன விதிமுறை எல்லா காலத்திற்குமே பொருந்தும் அப்படிங்கற ஒரு பிற்போக்கான சிந்தனையாள பல வருஷத்துக்கு முன்னாடி சொல்லி வச்ச எல்லாத்தையும் இப்பயும் பின்பற்றி வருவதெல்லாம் மனிதனை மனுஷனா வாழ விடாமல் பண்றதுக்கு இருக்க ஒரு தடை.
ஒரு மனுஷன் தன்னுடைய வாழ்நாளில் பிறரை துன்பப்படுத்தாமல் வாழ்ந்து சாகணும்.
இதுதாண்டி ஒரு மனுஷனுக்கு எந்த ஒரு கடமையும் தேவைப்படுவதை கிடையாது .
ஆனால் இந்த மதங்கள் எல்லாம் அப்படியா இருக்கு.
தினமும் கடவுளை வணங்க வேண்டும் கடவுளை வணங்காம இருக்கவன் பேய் மனுஷனே கிடையாது.
அவன் மிகவும் கேலிக்குரியவன்.
இப்படி தீண்டாமைகளை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். இதெல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு நிகழும் ஒரு பெரிய பிரச்சனை.
இது தாண்டி ஒரு குயர் மக்களுக்கு மதம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தெரியுமா? குர்ஆன்ல இருக்க சில வார்த்தைகள்னால இஸ்லாம் சமூகத்தில் இருக்கும் தன் பாலினஈர்ப்பாளர்களை மிகவும் கொச்சைப்படுத்துதல் மட்டும் இல்லாம தீண்டாமை கடைபிடிக்கிறதுனு பல ஒடுக்குமுறை நடந்துட்டு இருக்கு.
அரபு நாடுகளில் பின்பற்றப்படும் சட்ட நடவடிக்கை எல்லாம் ரொம்ப கொடூரமான ஒன்னு.
ஒரு மனுஷன் பசிச்சா சாப்பிட போறான் காதல் வந்தால் காதலிக்க போறான் இதெல்லாம் எந்த ஒரு கடவுளாலையும் நிப்பாட்ட முடியாதோ
அது மாதிரி தான் ஒரு குயர் மக்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யப் போறாங்க .அதை அந்த கடவுளே தடுக்கவே முடியாது.
அதுனாலதான் தண்டனை கொடுத்து குயர் மக்களின் சுதந்திரத்தை பறிச்சுட்டு வாராங்க.
மதங்கள் எல்லாமே நாட்டில் வாழும் பல குயர் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி இருக்கு.
பெரும்பாலும் தன் பாலின திருமணங்களை அனுமதித்தே நடத்தி வரும் கிறிஸ்தவ மதம் இப்பொழுது high கோர்ட்டில் ஒரு கேஸ் போட்டு இருக்காங்க .
தன்பாலின திருமணங்கள் குடும்ப சங்கிலி என்ற பாதையை உடைக்குது.அதுனால் அதனை தடை செய்யனும் இப்படி வழக்கு பதிவு செய்திருக்காங்க.
அப்பாடா நம்மளுக்கு ஒரு காரணி கிடைச்சுருச்சுனு மதநூலை நிரூப்பிக்க இஸ்லாமிய ஜமாத் அமைப்புகளும் சேர்ந்து அதுல மனு போட்டுருக்காங்க. இஸ்லாமிய ஜமாத் அமைப்புகள் தான் தன் பாலின அல்லது சேம் செக்ஸ் மேரேஜ் முழுக்க முழுக்க எதிர்க்கிறது இஸ்லாம் தான்.
முஸ்லிம்கள் ரொம்பவே குர்ஆனை பின்பற்றியதால் வந்த விளைவுதான். இதனை மேலோட்டமா பார்க்கும்போது குர்ஆன் தான் நாங்க பின்பற்றோம் என்ற முறையில் மதவாதியாக பிரதிபலிக்கிறீங்க ஆனா அதுல ஒவ்வொரு குயர் மக்களோட வாழ்வாதாரம் இருக்குன்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.அவுங்க உடல் மற்றும் மனதில் இருக்கும் மாற்றம் பத்தி கொஞ்சம் கூட கவலை படாமாயும் புரிஞ்சுக்காமயும் இருக்காங்க.
அவர்கள் நிறுவ முயல்வது மதம் என்ற கற்பிதம் மட்டும் தான்..
இந்த வழக்குக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸும் தன்னோட சப்போர்ட்ட தெரிவிச்சிருக்காங்க .
இவ்வளவு நாள் பின்பற்றி வந்த அனைத்து விதிமுறைகளையும் இவங்க மீருறாங்க .
மதம் மற்றும் கடவுள் சொல்லும் எந்த ஒரு கட்டளையும் இவங்க பின்பற்றவில்லை.
இவர்கள் சுதந்திரம் என்ற பெயரில் ரொம்ப அட்வான்ஸா போறாங்க அதனால வருங்காலத்தில் குடும்ப அமைப்பே இல்லாம போயிடும் அப்படிங்கற ஒரே ஒரு ஸ்டேட்மெண்ட் வைத்து கேஸ் போட்டு இருக்காங்க .
அந்த கேஸ விசாரணைக்கு ஹை
கோர்ட் எடுத்துக்கிட்டாங்க.
இந்த உலகத்தை பொறுத்த வரை ஒரு ஆண்குறியும் பெண்குறியும் இணைந்து சேர்ந்து பிறந்த ஒரு குழந்தை தான் குடும்பம் என்ற வரையறை.
அந்த மூன்று பேர் வாழ்றது மட்டும் தான் வாழ்க்கை அப்படின்னு நினைச்சிட்டு இருக்காங்க .
உண்மையாக பார்த்தா அப்படி கிடையாது .
குடும்பம் என்பது கூடி வாழ்வது .
அந்த கூடி வாழ்ந்தல்ல ஆணும் பெண்ணும் சேர்ந்து மட்டுமே வாழ வேண்டும் என்று கட்டாயம் கிடையாது .ஒரு ஆணும் ஆணும் காதலில் திருமண பண்ணி கூடி வாழும் பொழுது அதே நிலைமை தான் தொடர போகுது அதே குடும்ப சங்கிலி தான் இருக்க போகுது.
இவங்க மேற்கோள் காட்டுவது என்னன்னா இவங்க ரெண்டு பேரும் எப்படி குழந்தை பெத்துக்குவாங்க எதிர்கால சந்ததிகள் அழிந்துவிடும் எதிர்கால சந்ததியினரை அழிஞ்சிடும் .
ஆனால் பல நூறு வருஷமா தன் பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்துட்டு இருக்காங்க.
பல திருமணங்கள் மறைமுகமாக நடைபெற்று இருக்கு .
பல மன்னர் வாரிசுகளும் தன் பாலின ஈர்பாளராக இருந்து இருக்காங்க.
எந்த ஒரு அடிப்படை தகவலும் தெரியாம அடிப்படை புரிதல் இல்லாம இவங்க தடை கேட்டு கேஸ் போட்டு இருக்கிறது குயர் மக்கள் வாழ்வை வருங்காலத்தில் ரொம்பவே பாதிக்க போகுது .
ஒரு மதத்துக்காக மனிதனை அடிமையாக்க நினைக்கிறது அந்த மதத்திற்கு செய்யுற புண்ணியமுனு நினைக்குறாங்க.
பலரின் கண்ணீரில் அந்த புண்ணியத்தை வரையறுக்க போறாங்க.
