அணியம் அறக்கட்டளை
வழங்கும்

பால்மணம் மின்னிதழ்

பால்புதுமையின மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் மின்னிதழ் பால்மணம் ஆகும். இதில் அவர்கள் சந்திக்கும் சமூக இடர்களையும் அதற்கான தீர்வுகளையும் நாம் காணலாம். அதுமட்டுமில்லாமல் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த மேடையை இது உருவாக்கும்.

அணியம் அறக்கட்டளை பெருமையுடன் முன்னெடுத்திற்கும் பால்மணம் என்ற மாத மின்னிதழில் கீழ்க்கண்ட பிரிவுகளின்  கீழ் செய்திகள் சேகரிக்க  எழுத்தாளர்கள்  வரவேற்கப்படுகிறார்கள்

மேலும் அவர்கள் பால்புதுமையினராக(LGBT+) இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை வழங்கப்படும்

விருப்பமுள்ள எழுத்தாளர்கள் தங்களின் சுயம் வெளியுலகிற்கு வெளிப்படுத்த விரும்பவில்லையெனில் புனைபெயர் கொண்டு அவர்களின் படைப்புகள் வெளியிடப்படும்

இம்மின்னிதழில் கீழ்க்கண்ட பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன

திண்ணை 

  பால்புதுமையின மக்களின் நேர்காணல் இப்பகுதியில் வெளியிடப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையும் கடந்துவந்த பாதைகளையும் இது எடுத்தியம்பும்.

அச்சாணி

    பால்புதுமையின மக்கள் சமூகத்தில் சாமானியர்களின் இடர்களை எவ்வாறு காண்கிறார்கள் என்றும்  அதில் அவர்களது கருத்துக்களையும் ஆதரவையும் எவ்வாறு அளிக்கின்றனர் என்பதையும் இப்பகுதி விளக்கும்

ஜோல்னா 

     பால்புதுமையின மக்களின் கலைத்திறனை வெளிக்கொணரவும் அதை ஊக்குவிக்கவும் இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கதை கவிதை போன்ற அவர்களின் படைப்பை நாம் ருசிக்கலாம்

ஆராய்ச்சிமணி 

   பால்புதுமையின வல்லுனர்களின் ஆராய்ச்சி கட்டூரைகளும், குயர் மக்களுக்கான வழிகாட்டுதலும் இதில் இடம்பெறும்

தண்டோரா 

    குயர் மக்களுக்கு நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளும் நிகழ்ச்சிகளும் இதில் வெளியிடப்படும். அவர்களின் திறனை உலகறிய செய்ய இது ஒரு தூண்டுகோலாக அமையும்

கொட்டகை 

   பால்புதுமையின மக்களுக்கென உருவாக்கப்பட்டு தன் பணியை செவ்வனே செய்யும் குழுக்களின் பணியை இது எடுத்தியல்பும்.அவர்களுக்கான வழிகாட்டுதல் எப்படி நடக்கிறது என்பதையும் இது விளக்கும்.

பேராளுமை

LGBTQIA+ மக்களுக்காக களத்தில் இறங்கி செயல்பட்டுவரும் போராளிகளைப் பற்றிய கட்டுரை

திரைபிரிகை

LGBTQIA+ மக்களுக்காக உருவாக்கப்படும் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம் உள்ளடங்கிய கட்டுரைகள்.

 

உங்கள் படைப்புகளை பால்மணம் மின்னிதழ் முகவரிக்கு அனுப்பவும்.

paalmanam@gmail.com