மனநலம் என்பது சுமை, பாரம், இன்பம், மகிழ்ச்சி போன்ற பலதரப்பட்ட தனிநபர் உணர்வுகள் மற்றும் அவர்களின் தனித்தன்மையை எடுத்துரைக்கும் ஒரு பகுதி. LGBTQIA+ மக்களின் மனநிலையை அனைவரும் வித்தியாசமான ஒன்றாக பார்ப்பதுண்டு.
எப்படி என்றால், எனக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அவரவர் மகிழ்ச்சியடைந்து கொள்வார்கள்.
இப்படி பல கோணங்களில் நாம் யோசிக்கும்போது, மனநலம் என்பது எப்பொழுதும் இன்பம்/சிரிப்பு/ மகிழ்ச்சி போன்றவற்றை சுற்றியே பேசப்படுகிறது.
பொதுவாக “ ஆரோக்கியம்” – என்ற ஆங்கில சொல்லின் பொருள் உடல் நலம், சமுதாய நலம், இடம் சார்ந்த நலம் மற்றும் மனநலம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது. உலக சுகாதார அமைப்பின்(WHO) படி எந்த ஒரு மனிதன் ஆயினும் அவர் இந்த மூன்று வகையான உடல், மன மற்றும் சமூக நலம் போன்றவற்றில் எந்த தடையும் இல்லை என்றால் மட்டுமே அவர் நலமாக இருக்கிறார் என்று கருதப்படுகிறது.

இப்படி பல தரப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் எடுத்துரைத்தாலும் இந்த மனநலம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் உதவியாக உள்ளதா இல்லை பாரமாக உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

LGBTQIA + மக்களின் ஊக்கமே அவர்களின் தனித்துவமான வாழ்க்கை கொள்கைகள் தான். வாழ்க்கையில் பணம், மக்கள், மாக்கள், இடம், பொருள், வசதி வாய்ப்புகள் என்று பல விடயங்கள் அமைந்தாலும் சில நேரங்களில் அவர்களின் தனிமை அவர்களை கொல்லும் மனரீதியாக.

மற்றவர்களைப் போல இல்லாமல் LGBTQIA+ மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகம். LGBTQIA+ மக்கள் அளிக்கும் அன்பும் பாசமும் எல்லையற்றது. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல், அன்பு, பாசம் இவை எல்லாம் ஆழ்கடலின் ஆழம் போன்றது. அதே போல்தான் சொல்லப்படாத சோகங்களும், மெல்லப்படாத வார்த்தைகளும், கேட்கப்படாத கேள்விகளும் துயரப்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ளவில்லை.

மனிதராக பிறந்த நாம் சமூகத்தில் எப்படி இருக்கிறோம், எப்படி செயல்படுகிறோம் என்பதை நாம் முழுவதும் புரிந்து கொள்ளவில்லை.
எப்பொழுதும் மற்றவர்களின் பார்வைக்காக மட்டுமே செயல்பட தொடங்கி , நாம் நமக்காக செயல் பட வேண்டும் என்பதை மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட சமூகத்தில் மற்றவர்களைப் இழிவுபடுத்தி, கேலி, கிண்டல் செய்து அதில் வரும் வருமானத்தை எதிர்பார்த்து நம் கால்களின் பயணம் தொடங்கிவிட்டன. அலைகடல் போல் தத்தளிக்கும் LGBTQIA+ மக்களின் மனதை எப்பொழுது நாம் புரிந்து கொள்ள போகிறோம்.
அறிஞர்கள் கூறியதைப் போல் வார்த்தைகளால் காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவார்கள் போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலின ஈர்ப்புடையவர்கள் மற்றும் திருநங்கைகள் அதிக அளவு மன உளைச்சலை அனுபவிக்கின்றனர். உள் மன உளைச்சல் எதிர்மறையான மனநல விளைவுகளுக்கு வழிவகுக்கும், அதே நேரத்தில் சமாளிக்கும் உத்திகள் மற்றும் சமூக ஆதரவு இந்த எதிர்மறை விளைவுகளை எதிர்க்கலாம்.

LGBTQIA+ மக்களின் நாம் வைத்திருக்கும்
நியாயமற்ற கருத்துக்களும், யூகங்களும், அவர்கள் தங்களுக்கு மிகவும் அடிப்படையான சுகாதார தேவைகளை அணுகுவதில் கூட கட்டுப்படுத்துகிறது. உள்நிலை களங்கத்தை (சுய களங்கம்) அனுபவிக்கும் LGBTQIA+ நபர்களை, தாங்கள் உடல்நல பராமரிப்பு வழங்குநர்களிடமிருந்து மரியாதை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் அல்லது வேறுபாலினத்தவர்களைப் போன்ற சுகாதார அணுகலுக்கு தகுதியற்றவர்கள் என்று நினைக்கலாம்.
இழிவுபடுத்துதல், பாகுபாடு மற்றும் மனநலப் பாதுகாப்புப் சேவைகளை அணுகுவதற்கான தடைகள் ஆகியவற்றின் விளைவாக LGBTQIA+ சமூகங்கள் இன்னும் குறிப்பிடத்தக்க மன உளைச்சல் மற்றும் மனநலச் சவால்களை அனுபவிப்பதாக முடிவுகள் காட்டுகின்றன.
அனைத்து மக்களையும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துவதற்கான அவர்களின் நெறிமுறைக் கடமையை சுகாதார வழங்குநர்கள் ஒப்புக்கொண்டு செயல்படுத்தினால், LGBTQIA+ நபர்களின் மனநல ஏற்றத்தாழ்வுகளைப் போக்க இது உதவும்.

-தொடரும்

எழுத்தாளர் :
Dr. ரவி சங்கர். B
சமூக நல மருத்துவர்
பங்களிப்பு:
Dr. தீபிகா பிரியலஷ்மி. A
மருத்துவர்

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
[mc4wp_form id="1139"]

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன