திருநங்கைகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகள் இந்தியாவில் மிகவும் முற்போக்கானவை. திருநங்கைகள் நலக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும். இதன் வரிசையில், தமிழ்நாடு காவல்துறை நடைமுறை விதிகளில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.
திருநர் , தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் இதர குயர் மக்களை தேவையில்லாமல் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது; சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டும்!.
அதாவது விதி 24-பி க்குப் பிறகு சட்டத்திருத்தம் 24-சி உடன் சேர்க்கப்படும். இந்த விதியின் நோக்கம் திருநர்கள் , தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தின் நலனுக்காக பாடுபடும் நபர்களை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தவோ வேறு வகையில் தொந்தரவோ செய்ய கூடாது!.
மாறாக சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி எந்த விசாரனை செய்யும் காவல்துறையின் உரிமையை இது உள்ளடக்காது.!
– கிரன் குமார்
