சட்டத்தினும் வலியது காதல்!!

ஆம், தன்பாலீர்ப்பாளர்கள் திருமணம் இன்னும் இந்தியாவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் காதல் மலராமலா போய்விடும். அப்படியொரு காதல் பூத்து திருமணத்துக்கு வெகு அருகில் வந்து நிற்கிறது. சுரபி மித்ரா, பரோமிதா முகர்ஜி-யின் காதல் கதை தான் அது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட இவ்விருவரும் பேசி, பழகி, நாளடைவில் காதலாக மாறி, சில வாரங்களுக்கு முன்பு பெற்றோர் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நாக்பூரில் நடந்தேறியுள்ளது. கூடிய விரைவில் கோவாவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

பரோமிதா முகர்ஜி இதைப்பற்றி தெரிவிக்கும்பொழுது, தன் தந்தைக்கு தன்னுடைய பாலீர்ப்பு குறித்து 2013-ஆம் ஆண்டே தெரியும் எனவும், தன் தாயாரிடம் சில நாட்களுக்கு முன்னர் வெளிப்படுத்திய பொழுது அவருக்கு மெல்லிய அதிர்ச்சி ஏற்படினும் தன் மகிழ்ச்சியறிந்து தனக்கு உற்ற துணையாய் இருப்பதாய் கூறினார். இது போன்ற ஒரு சில நிகழ்வுகள் தான் ஒடுக்கப்பட்டு நலிந்து கிடக்கும் LGBTQIA+ சமூகத்திற்கு புதுத்தெம்பாய், தூரத்தில் ஒளியாய் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

பரதன்.
நன்றி: ஒன்இந்தியா தமிழ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன