நள்ளிரவு மூணு மணி இருக்கும் அடுத்த நாள் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தேன். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் தூங்கி விடுவேன் என்று பிரசவம் வாய்த்த பூனை போல அங்கும் எங்கும் நடந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு அலறல்

ஐயோ அம்மா யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்களேன்

குடிகாரர்கள் சூழ் விடுதியில் இது போன்ற அலறல்கள் சாதாரணமானவை தான் என்று நான் கண்டுகொள்ளவில்லை. போகப் போக அலறலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது கீழ்தளத்தில் கேட்ட அலறல் முதல் மாடியில் மூலையில் இருக்கும் எனக்கும் கேட்டது. இருந்தாலும் எனக்கு ஒரு பயம் அதனாலேயே நான் அறையில் சென்று கதவைப் பூட்டிக் கொண்டேன். மறுநாள் காலை விடுதி அல்லோல கல்லோலமாக இருந்தது.

டேய் வாடா யாரை போட்டு அடிச்சுட்டாங்க டா மூஞ்சி ஃபுல்லா ரத்தமா பிழைக்கிறது ரொம்ப கஷ்டமாம் !

அவனுக்கெல்லாம் ஆகணும் டா அவன் பண்ணு கொடுமைக்கு இதெல்லாம் ரொம்ப கம்மி சாவுட்டும் நாயி…..ஒன்பது நாயி!!!

****************************************************************************************

நான் இந்த கல்லூரியில் மூன்றாம் வருடம். இவர் பத்து வருடங்களாக இந்த விடுதியில் வார்டனாக இருக்கிறாராம்.இவர் நடை உடை பேச்சு பாவனை அனைத்தும் பெண்மையை சுமந்து கொண்டிருப்பதால் இவரை அனைவரும் ஒம்போது வார்டன் என்று கூப்பிட ஆரம்பித்தனர். இப்படி கூப்பிட்டு கூப்பிட்டு இவரது உண்மையான பெயர் என்று யாருக்கும் தெரியாமல் போனது . நிறைய சண்டை நடக்கும் விடுதியில். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின் உள்ள முயற்சிப்பது, அனுமதி இல்லாமல் வண்டிகளை ஓட்டுவது,சிகரெட்டு, மது பாட்டில்கள் போன்றவற்றை வாங்குவது என பல லீலைகளில் மாணவர்கள் ஈடுபட்டு வார்டன் இடம் மாட்டிக் கொண்டனர். வார்டன்  அவ்வளவு மோசமான ஆள் இல்லை இருந்தாலும் சில சமயங்களில் கல்லூரி நிர்வாகத்தை சமாளிப்பதற்காக கடுமையாக நடந்து கொள்வது உண்டு. இதனாலே விடுதியில் வார்டனுக்கும் மாணவர்களுக்கும் சண்டை நடக்கும். வார்டனின் முன்னே அவரை ஒன்பது வார்டன் பொட்ட வார்டன் போன்ற அநாகரிகமான வார்த்தைகளை பிரயோகித்து சண்டையிடுவர்.அப்போதும் கூட வார்டன் அவரது குரலை உயர்த்தாமல் தாழ்ந்த குரலிலேயே பேசுவார். மேலும் இவர்கள் பேசும் பேச்சுக்கள் எல்லாம் அவர் காதில் கேட்டுக் கொள்வதுமில்லை. ஒருமுறை வார்டனின் குடும்பக் கதையை கூறினார்கள். இவர் விவாகரத்து ஆனவர் எனவும் இவரது மகள் ஹாஸ்டலில் படிக்கிறார் எனவும் அதற்காகத்தான் இங்கு வேலை செய்கிறார் என்று பலவிதமான தகவல்கள் ஒரு காலத்தில் பரவின. இவற்றின் உண்மை தன்மை யாருக்கும் தெரியாது நான் வார்டனிடம் அவ்வளவு ஆக பேசியது இல்லை.எனக்கும் அவருக்கும் பெரிதாக உரையாடல்கள் எதுவும் இருந்தது இல்லை என்ற போதிலும் அவரின் அபிமானம் கொண்ட ஒரு மாணவனாக நான் இருந்தேன். நான் எப்போது லேட் ஆக போனாலும் என் நண்பர்கள் கூறுவார்கள். உனக்கென்னப்பா நீ வார்டனோட பெட்டு உன்னை மட்டும் உள்ள விட்டுருவாரு நாங்க அப்படியா உன் பெயரை வைத்துக்கொண்டு  தான் நாங்க உள்ள போகணும்  இப்படிப்பட்ட வார்டனுக்கு இந்த மாதிரி ஆன செய்தி என் மனதிற்குள் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது குற்ற உணர்ச்சி மேலோங்க தொடங்கியது ஒருவேளை நான் கீழே சென்று பார்த்திருந்தால் என்னால் காப்பாற்றி இருக்க முடியுமோ என்று. இங்க பாரு ஆதி உலகத்துல நடக்குற எல்லா தப்பான விஷயத்தையும் உன்னால தடுக்க முடியாது என்று என் நண்பன் கூறியது என் மனத்தை ஒரு விதத்தில் ஆசுவாசப்படுத்தினாலும் அந்த உணர்ச்சி என்னை விட்டு போகவில்லை. வார்டன் இல்லாத விடுதி ஒரு விதத்தில் அமைதியாக இருந்தது

 

****************************************************************************************

.

ஏன் பா எத்தனை வாட்டி சொல்றது வண்டி ஹாஸ்டல்ல அனுமதிக்க மாட்டாங்க ஒருவாட்டி வார்னிங் குடுத்தாச்சு அதுக்கப்புறம் எடுத்துட்டு வந்தா என்னப்பா.

 

 

 

டேய் இது என் வண்டி நான் எப்போ வேணா எடுத்துட்டு  போவேன்  நீ யாரு கேக்க?

 

 

 

 போ அப்படியா இது உன் வண்டி தான் ஆனா சாவி என்கிட்ட மட்டும் இருக்கட்டும்

 

 சார் சாவியை கொடுங்க.

 

உங்க அம்மா அப்பாவை கூட்டிட்டு வா நானே சாவியை தரேன்

 

 

டேய் பொட்ட வார்டன் ஒழுங்கா சாவியை தந்துவிடு இல்லன்னா மூஞ்சில கிழிச்சுருவேன்

 

 

 உன்னால முடிஞ்சத பண்ணிக்கோப்பா.

 

********************************************

 

எனக்கு வலிக்குது என்ன கொஞ்சம் விடு….விடு !!

கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ இல்ல!

எனக்கு வலிக்குது என்ன விடு ஆதி ப்ளீஸ்!

யூ நோ வாட் யூ ஆர் சச் ஏ டர்ன் ஆஃப் என்று கூறி என்னை தள்ளி விட்டான்

 

கீழே இருந்த கண்ணாடி துண்டு என் முட்டியை கீறியது. ஆதி… ஆதித்யா செங்கல்வராயன்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது கல்லூரியில் இசைக்குழுவின் பாடகருக்கான தேர்வு நடந்து கொண்டிருந்தது. தேர்வு குழுவில் ஆதியும் அவரது நண்பர்களும் இருந்தனர். பொதுவாக அது மருத்துவக் கல்லூரி என்பதால் சீனியர்கள் ஜூனியர்களை ஏளனமாகவும் மரியாதை குறைவாகவும் நடத்தினர்.   நான் மரியான் படத்திலிருந்து எங்க போன ராசா என்ற பாடலை பாடினேன். பாடி முடிப்பதற்கு முன்பே நடுவில் இடைவெளி செய்து இதெல்லாம் ஒரு வாய்ஸ் என்று  கூறியது மட்டுமல்லாமல் என் உருவத்தை வைத்து கேலி செய்து வெளியே அனுப்பினர் என்னால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் எனது குரலை குறை கூறியது கூட எனக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால் உருவக் கேலியை என்னால்  ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தாழ்வு மனப்பான்மையின் உச்சத்துக்கு சென்றேன்.

இந்த சம்பவத்துக்கு பிறகு சீனியர்களை கண்டால் தலையை குனிந்து கொண்டு மறைந்து கொண்டுமே சென்று கொண்டிருந்தேன். தீபாவளி விடுமுறை முடிந்து விடுதிக்கு திரும்பினேன் வரும் வழியில் ஆதியை நான் கண்டேன். அவனாகவே என்னிடம் வந்து பேசினான். சாரிடா தம்பி அன்னைக்கு ஏதோ விளையாட்டுக்காக உன்னை கிண்டல் பண்ணிட்டோம் நீ உண்மையிலே நல்லா தான் பாடுன என்று அவன் கூறியவுடன் என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓவென்று கதறி அழ ஆரம்பித்தேன் அப்பொழுது அவருடைய மென்மையான கைகள் என் தோளில் மீது படர தொடங்கியது இதுவரை நான் கண்ட ஆண்களின் கைகள் ஒருவித சொரசொரப்புடன் இறுக்கமாக இருக்கும் கட்டிட வேலையில் செங்கல் சுமந்து என் அப்பாவின் கைகள் இறுக்கமாகவே இருக்கும் அந்த இறுக்கத்திலும் ஒரு இணக்கம் இருக்கும். நான் பத்தாவது படிக்கும்போது என் சயின்ஸ் டியூஷன் சார் என்னுடைய கால் சட்டையுள் அவருடைய கைவிரல்களை பதித்த போது அவர் கையில் இருந்த மருக்கள் என் தொடையை கீறியது மரவட்டை ஊறியது போன்ற ஒரு உணர்வை என்னுள் ஏற்படுத்தியது. ஆனால் ஆதியின் கைகளின் மென்மையான சாமந்தி பூவின் இதழால் வருடுவது போல இருந்தது. அவன் விரல் என் மேல் பட்டதும் மணமகனை பார்த்து இதழ் விரிக்கும் மணமகளை போல உணர்ந்தேன். ஒரு நட்ட பெருங்காட்டில் நீல நிற மான் ஒன்று வசித்து வந்தது.அதனை கண்டு முதலை அதன் மேல் மையல் கொண்டது. ஒரு நாள் இரவு பெய்த பெருமழையில் அதன் நிறமெல்லாம் வெளுக்கத் தொடங்கியது அதனை கண்ட முதலைக்கு பெரும் ஏமாற்றம். அவன் மான் ; நான் முயல்.

 

********************************************************************

 

என்னுடைய நண்பன் பிபினுக்கு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் இன்டன்களுடன் நல்ல பழக்கம். அவன் அவர்களிடம் பேசி சேகரித்து வந்த செய்தி என்னவென்றால் வார்டனுக்கு பலத்த அடி மற்றும் வார்டனை அடித்தவர்களை கேமரா கொண்டு பிடிக்க முயற்சி  செய்ய நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரியவந்தது. பல்வேறு வதந்திகளுக்கு பின் வார்டனை அடித்தது சீனியர் ராஜா என்ற செய்தி வெளிவந்தது. சீனியர் ராஜா மற்றும் அவரது நண்பர்களின் பெயர் நோட்டீஸ் போர்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ஒட்டப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்பில் ஒரு வாய்ஸ் நோட் பரவலாக பரவத் தொடங்கியது. அது ராஜாவின் குரல்

 

ஹாய் நண்பர்களே உங்களுக்கே இது நம்ம வார்டன் ஒன்பது பையன்னு. அவரு என்கிட்ட ரொம்ப நெருக்கமா இருக்க பார்த்திருக்காருன்னு என்னுடைய நண்பர்களுக்கு தெரியும். அவரோடு நான் பேசும் பொழுது என்னை தவறான இடங்களை தொடுவது, குளியலறையில் குளிக்கும்போது பின் தொடர்வது போன்ற பல வேலைகளில் ஈடுபட்டார் நான் படிப்பில் கவனம் செலுத்தியதால் இதனை எல்லாம் கண்டு கொள்ள முடியவில்லை. ஒருநாள் நைட் அவருடைய அறைக்கு என்னை அழைத்து என்னுடன் தவறான செய்கையில் ஈடுபட ஆரம்பித்தார். எனக்கு அது பிடிக்கவில்லை என்று நான் பலமுறை சொன்னேன் .ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை அவரை நான் கோபத்துடன் எட்டி தள்ளியபோது என்னிடமிருந்த என்னுடைய வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டு தர மாட்டேன் என்று சண்டை போட்டார். பிறகு மீண்டும் மீண்டும் தவறாக நடக்க முயற்சித்ததால் நான் அவரை அடித்து அறையில் வைத்து பூட்டி வைத்து ஓடி விட்டேன். இதனால் என்னை காலேஜ் மேனேஜ்மென்ட் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.நண்பர்களே நீங்களே சொல்லுங்க யார் மேல தப்பு என்று. உங்களுக்கே தெரியும்…இந்த வார்டன் எப்படிப்பட்ட ஆளுன்னு! என்கிட்ட மட்டும் இல்ல என்னோட நண்பர்களிடமும் தப்பா நடக்க முயற்சித்து இருக்காரு. ஒரு பெண்ணுக்கு நடந்தால் மட்டும் பெரிய பிரச்சினையாகிற உலகத்துல ஆணுக்கு நடக்கிற யாரும் பெரிய விஷயமா பாக்குறது கிடையாது எனக்கு இதுக்கு மேல என்ன சொல்லணும் தெரியல நன்றி வணக்கம்!

 

இந்த வாய்ஸ் ரெக்கார்டிங் கேட்டவுடன் ஹாஸ்டல் மாணவர்கள் அனைவரும் கொந்தளித்து போனர். வார்டனின் அறைக் கதவை உடைத்து அவருடைய பொருட்களை எல்லாம் வெளியே வீசினர். நான் கூட வார்டன் மிகவும் நல்லவர் என நம்பினேன். அவர் இவ்வாறு செய்தது எனக்கு மிகப்பெரும் ஏமாற்றமாக அமைந்தது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது அன்று நள்ளிரவு நான் கேட்ட கூக்குரல் வார்டன் உடையது தான் என்று. ஆனால் கீழே சென்று எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நான் போகவில்லை. அவ்வாறு நான் போகாமல் இருந்தது நல்லது தான் இல்லையென்றால் ஒரு அப்யூசருக்கு ஹெல்ப் பண்ணி இருக்கியே என்று சொல்லி பழி என்மீதும் இருந்திருக்கும். கல்லூரி முழுக்க இதனை பற்றிய பேச்சாகவே இருந்தது. அனைவரும் ராஜாவுக்கு ஆதரவாக வாட்ஸ் அப் குரூப் பதிவுகளை பரப்ப ஆரம்பித்தனர்.  இந்நிலையில் வார்டனின் உடல்நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதாக வரும் செய்தியை கேட்டவுடன் மாணவர்களின் கோவம் மிகவும் அதிகமாகியது.

****************************************************************************************

சார் இதுவே ஒரு பொண்ணுக்கு நடந்திருந்தால் போலீசை கூட்டிட்டு வந்து பிரச்சனை பண்ணி இருப்போம் பையனுக்கு நடந்ததால் அலட்சியமா இருக்கீங்களா

 

இங்க பாருங்க எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் மேனேஜ்மென்டால ஒரு முடிவு எடுக்க முடியாது

 

எந்த உலகத்துல சார் இருக்கீங்க அந்த பெண்ணோட வாக்குமூலம் மட்டும் இருந்தாலே போதும் கோர்ட்ல நீங்க என்ன இப்படி பேசுறீங்க உடனடியா அந்த ஒன்பது சாரி சார் .வார்டர்ன நீங்களா வேலையை விட்டு தூக்கணும்

 

தம்பி இங்க பாருங்க உங்கள மாதிரி எடுத்தோம் கவுத்தோன்னு முடிவு எடுக்க முடியாது .ஒரு வாரம் டைம் குடுங்க நான் உங்க விசாரணை பண்ணிட்டு முடிவ சொல்றோம்.

 

 

அப்போ அதுவரைக்கும் ராஜாவோட சஸ்பெண்ஷனோட கேன்சல் பண்ணுங்க .

இவ்வாறாக பேசி  ராஜா உடைய சஸ்பெண்ட் ஆர்டர் கேன்சல் ஆகியது மாணவர்கள் அனைவரும் ராஜாவை கொண்டாடினர். இந்த நிகழ்வுக்கு முன் ராஜா வெறும் குடிகாரன் தான். அவனுக்கு அவ்வளவு பெரிய மரியாதை எல்லாம் கிடையாது. முதல் இரண்டு வருடங்கள் நன்றாக படித்தவன் மூன்றாம் வருடத்தின் போது குடிக்கு அடிமை ஆகினான். இதனால் மூன்றாவது வருடம் கோட்டை விட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு சரி செய்து இப்பொழுது நான்காவது வருடம் படிக்கிறான் . இப்படிப்பட்ட ராஜா இந்த நிகழ்வினால் உண்மையிலேயே ராஜாவாக ஆகினான்

************************************ ******************************************************************************************

 

 

என்ன தைரியம்…..அந்த வார்டனுக்கு அந்தப் பொட்ட நாய்க்கு!! எங்கிருந்து இவ்ளோ கொழுப்பு வந்துச்சு…போய் நாலு சாத்து சாத்திட்டு அவன் வண்டி சாவியை வாங்கிட்டு வா இருங்கடா !!!

 

 

டேய் நில்லுடா இந்த நேரத்துல எங்கடா போற?

 

*********************

பிறகு ஒரு வழியாக இசை குழுவில் சேர்ந்தேன். ஆதியும் என்னுடன் பேசத் தொடங்கினான் மற்ற நண்பர்கள் இருக்கும் போது அவன் என்னிடம் பேச மாட்டான். ஆனால் நான் அவனோடு தனியாக இருந்தால் நன்றாகவே பேசுவான். அவனுடன் சில சமயம் தனியாக செலவு செய்ய வேண்டும் என்பதற்காகவே கல்லூரி முடிந்தவுடன் பரப்பரவென ஓடுவேன். அவனோடு பேசும் இந்த ஐந்து நிமிடம் இல்லையென்றால் அந்த நாளை முழுமை பெறாத ஒரு ஃபீலிங் இருக்கும். இது நட்பா? காதலா? என்று கேள்வி எல்லாம் என் மனதிற்குள் அப்போது இல்லை அவனோடு இருக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அன்று அவனுடைய 22 ஆவது பிறந்தநாள். அவனுக்காக வெள்ளி மோதிரம் ஒன்றை பரிசாக தந்தேன் அதனை கண்டவுடன் அவன் என்னை கட்டி அணைத்து முத்தமிட்டான் கன்னத்தில்.நான் மேலே கூறப்போவது மிகையானதாக இருந்தாலும் காதல் ஒரு மனிதனுக்கு வந்து விட்டால் அது அவனின் குருடாகவும் செவிடாகவோ ஒரு பெரும் முட்டாளாகவும் மாற்றக்கூடும். ஆம் அவர் முத்தம் கொடுத்த இரண்டு நாளாக நான் என் முகத்தை தண்ணீர் கொண்டு கழுவவில்லை. ஆதிக்கும் அதே குழுவில் முன்னணி பாடகியாக இருந்த ஷோபனாவுக்கும் காதல் தொடர்பு இருப்பது கல்லூரிக்கு தெரியும். இதனால இவர்கள் கல்லூரியின் ஹாட் கப்பில் ஆக இருந்தனர்.அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்ற எண்ணம் கூட என் மதியை மறைத்து விட்டது. அவனை என்னால் காணாமல் இருக்க முடியவில்லை.அவனை காணாது இருக்கும்போதெல்லாம் அவன் மேல் உள்ள மையல் பித்தாக  மாறியது. பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை காதல் ஜோடிகள் இருவரும் பிரிந்து விட்டனர் . இவர்கள் பிரிந்து அதற்கான காரணம் பல்வேறு வதந்திகளாக கல்லூரியை உலா வரத் தொடங்கினர் அவற்றுள் ஒரு வதந்தி எனக்கு மிக்க மன மகிழ்ச்சியை கொடுத்தது அது என்னவென்றால் ஆதி ஒரு தன் பால் ஈர்ப்பாளர் என்ற செய்தி.

 

அன்று இசைக்குழுவில் பயிற்சி எல்லாம் முடிந்து விட்டு அனைவரும் அறையை விட்டு கிளம்பினர். ஆனால் நான் என் மொபைல் போனை அங்கே வைத்து விட்டேன். அதனை எடுக்க செல்லும் போது ஒரு அழுகுரல் யார் என்று உள்ளே சென்று பார்த்தால் அது ஆதி.

ஆதி சார் எதுக்கு அழுவுறீங்க என்று நான் கேட்டவுடன் அவன் என்னை கட்டி அழைத்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தான். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அவன் என்னை கட்டி அணைத்த சுகத்தை அனுபவிப்பதா இல்லை அழுகின்ற மனிதனுக்கு ஆறுதல் சொல்வதா என்று இரு எண்ணங்களுக்குள் குழம்பி போய் இருதலைக்கொள்ளி எறும்பு ஆனேன். திடீரென அவன் அழுகுரலின் அடர்த்தி குறைந்தது அவன் கைகள் என் தோளின் மீது கொண்ட அழுத்தம் அதிகரித்தது. இருவரும் முகத்தினிடை காற்று பரவக்கூடிய அளவுக்கு தான் இடைவெளி இருந்தது. தொலைவில் இருந்து கண்ட ஆதியை இவ்வளவு அருகில் பார்த்து எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனின் கண்களை பார்க்க…….அவன் கண்களை பார்க்கும் தைரியம் கூட இல்லாத நான் தலை கவிழ்ந்து நிற்க இரண்டு உதடுகளும் முத்தங்களை பரிமாறிக் கொண்டன. இதை யாரு ஆரம்பிச்சானு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியல . அது அவனா ஆரம்பிச்சதுன்னு நான் அந்த வலையில விழுந்த மாதிரியும் தோன்றும். ஆனா வலையில விழற அளவுக்கு நான் சிறு பிள்ளையா நான் நினைத்திருந்தால் அவனை உதறிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்க முடியும். ஆனால் நான் அதை செய்யவில்லை. இந்த முத்தக்காட்சி நடந்த அடுத்த ஒரு நிமிடத்திற்கு நானும் பேசவில்லை அவனும் பேசவில்லை. திடீரென அவன் ஏதும் சொல்லாமல் கிளம்பிவிட்டான். எனக்கு ஒரே மன குழப்பம் நான் என்னை நானே குறை சொல்லிக் கொண்டேன் இதற்கெல்லாம் நான் தான் காரணம் என்று. அவன் பேசுவானா என்ற குழப்பம் ஒரு பக்கம் ஆதியின் உதடுகளை நான் நுகர்ந்து விட்டேன் என்ற கர்வம் ஒரு பக்கம். இரண்டு எண்ணங்களும் என்னை இரவில் தூங்கவிடாமல் செய்தது. அடுத்த ஒரு வாரம் ஆதி என்னுடன் சரியாக பேசவில்லை நீ ஏன் என்கிட்ட பேச மாட்ற அப்படின்னு கேட்க கூட எனக்கு தைரியம் இல்லை.அவன் பேச மாட்டான் அதுக்கு நான் தான் காரணம் என்று கொடுத்த வலி மிகவும் கொடுமையானது. என்னால் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை அன்று ஏதோ தைரியம் வந்தது செல்போனை எடுத்து ஆதிக்கு கால் செய்தேன்.

சொல்லு

ஆதி சார் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்

 என்னன்னு சொல்லு

நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்

 சரி என்னோட ரூமுக்கு வா

இந்த வாக்கியத்தை கேட்டவுடன் எனக்குள் இருந்த பயம் மிகவும் அதிகமானது.என்னதான் ஆதி மிக நல்லவனாக இருந்தாலும் அவனும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தானே . ஒரு மருத்துவக் கல்லூரி சீனியர் ஜூனியர்களை செய்யும் பாடுகள் ஏராளம். இது மற்ற கல்லூரிகளை விட மிகவும் விசித்திரமான சிஸ்டம். இங்கு ஜூனியர்கள் சீனியர்களை பெரும்பாலும் சார்ந்து இருக்க வேண்டும் இப்படி இருக்கையில் நான் அவனின் முத்தமிட்டதை கொண்டு அவன் என்னை தண்டிக்கப் போகிறான் என்று நினைத்தேன். அவன் அறைக்குள் சென்ற அழுத்த நொடி கதவைத் தாழ்த்திட்டு என் உடல் மேல் பாய தொடங்கினான் எனக்கு ஆதியும் மிகவும் பிடிக்கும் ஆனால் அவ்வாறு என்னை தொட்டது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் தொடையைக் கீரிய மேத்ஸ் டியூஷன் சார் என்னை தொட்டது போல இருந்தது. அப்போது எனக்கு தெரியவில்லை  ஆதிக்கு  தேவை நான் அல்ல அவன் உணர்ச்சிகளை எல்லாம் கொட்டி தீர்க்க ஒரு குப்பைத் தொட்டி தேவைப்பட்டது அதுதான் என் உடல்.

************************************ ***************************************************************

 

சார் நான் போன  அப்போ பையன் செமையா குடிச்சிருந்தான்.அவன் கான்ஷியஸ் ஸ்டேட்ல இல்ல. ஒரு குடிகார சொன்னத ஒரு க்ளைமா வச்சுட்டு நாம எப்படி சார் வார்டன் மேல ஆக்சன் எடுக்கிறது?

 

நீ வேற சும்மா இருக்கியா அந்த ஆள பாத்தாலே தெரியலையா அவன் அப்படிப்பட்ட ஆளுதான்னு . போதா குறைக்கு ஸ்டுடென்ட்ஸ் வேற வந்து போராட்டம் பண்ணுவோம் என்று சண்டை போடுறாங்க.

 

என்ன சார் இப்படி சொல்றீங்க ? அவர் இந்த ஹாஸ்டலுக்கு பத்து வருஷமா வார்டனா இருக்காரு. அவர் மேல எந்த ஒரு பிளாக் மார்க்கும் இல்லை. இப்படி அவர் மேல காரணமே இல்ல ஆக்ஷன் எடுத்தா அது தப்பா தெரியலையா சார் ?

இதுதான் தினேஷ் நாட்டில் பிரச்சனையே இதுவே ஒரு பொண்ணுக்கு நடந்திருந்தால் இந்த இடத்துக்கு போலீஸ் உள்ள வந்திருக்கும் பையனுக்கு நடந்த ஒரே காரணத்துனால தான் அலட்சியமா இருக்கும். என்னைக்காச்சும் அப்யூஸ் பண்ண பொண்ணு கிட்ட போயி இவன்தான் நான் யூஸ் பண்ணாததுக்கு என்ன ஆதாரம்  கேட்டு இருக்க முடியுமா? பசங்களுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துகிட்டு இருக்கு. தினேஷ் நீங்க எந்த உலகத்தில் இருக்கீங்க எனக்கு தெரியல!! இந்த மாதிரி ஆளுங்கள வார்டனா போட்டவங்கள சொல்லணும். அப்புறம் தினேஷ் கேள்விபட்டேன். வார்டன் உனக்கு தூரத்து சொந்தம் என்று அதனால நீ இந்த பிரச்சனையில தலையிடாத நான் பாத்துக்குறேன் சார்.

 

 ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் அவரு ரொம்ப நல்லவரு சார். இங்க வரா வேலைய வச்சு தான் அவர பொண்ண படிக்க வைக்கிறார் அந்த பொழப்புல மண்ணள்ளி போடாதீங்க சார் ப்ளீஸ் .

 

என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் தயவு செஞ்சு நீங்க தலையிடாதீங்க   

************************************ ****************************************************************************************************************************** ****************************************************************************************************************************** ******************************************************************************************

 

 

டேய் மச்சான் நீதான் வார்டனோட பெட் ஆச்சு தலைவன் உன்கிட்ட அப்படி இப்படி எல்லாம் பண்ணி இருக்கானா?

 

எனக்கு அந்த கேள்வியை கேட்டவுடன் தலைக்கு மேலே கோபம் ஏறியது.

 

டேய் இங்க பாருடா என்கிட்ட வார்டன் இப்படி நடந்து இருந்தா அவன் குஞ்ச கடிச்சு காரி துப்பிருவேன் இந்த மாதிரி ரெண்டு மூணு நாய்ங்க இருக்கறதுனால தான்  ஒட்டுமொத்த கம்யூனிட்டி பாதிக்கப்படுது. நீ போற பஸ்ல உன் தொடைய ஒருத்தன் தொட்டு தடவுறவன்  ஒட்டுமொத்த சமூகத்தோட பிரதிபலிப்பு அல்ல. அதே பஸ்ல இன்னொரு ஆண் ஒரு பெண்ணை தப்பா தொட்டுட்டு தான் இருக்கான். பேட் டச்  இஸ் பேட் டச் அது யாரு பண்ணாலும் தப்புதான் இதை நீ முதல்ல புரிஞ்சிக்கோடா  

 

என்னவோ சொல்ற போடா!

******************

 

 ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது இல்லை நான் நன்றாக இருந்தது என நம்பிக் கொண்டிருந்தேன். அவன் உடலை தீண்டும் போதெல்லாம் அது அவருடைய காதல் வெளிப்பாடு என நம்பிக் கொண்டிருந்தேன். அவன் என்னோடு உடலுறவு கொள்ளும் போது ஆணுறைகளை பயன்படுத்த மாட்டான்.முதல் இரண்டு முறை அமைதியாக இருந்தேன்.மூன்றாவது முறை எனக்குள் ஏதோ தடுத்தது .

ஆதி  காண்டம் ட்ரை பண்ணலாமா?

வாட்  உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா

எனக்கு அதற்கு மேல் அந்த உரையாடலை எப்படி எடுத்துச் செல்ல என்று தெரியவில்லை. நம்பிக்கை என்னும் வார்த்தை எவ்வளவு ஆழமானது என்றால் அவன் என் மீது வைத்திருக்கும் காதல் குறைந்து போய்விடும் என நான் அவனை எதிர்த்து கேள்வி கேட்பதே நிறுத்தி விட்டேன். அவன் கூப்பிடும் போதெல்லாம்  நான் அவனுடன் சென்று இருக்கிறேன்.  இதனால் படிப்பில் எனது கவனம் குறைந்ததுமதிப்பெண்களும் சரிய  தொடங்கியது.  இதனைப் பற்றி எல்லாம் எனக்கு அப்போது பெரியதாக கவலை இல்லை. அந்த அளவுக்கு ஆதியின் மேல் நான் பித்து கொண்டிருந்தேன்  உன் காதல் ஒருவனது மூளையை எவ்வளவு மழுங்கடிக்கச் செய்யும் என்றால் ஒருத்தனின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையை வைக்க செய்யும். நான் ஆதியை எவ்வளவு நம்பினேன் என்றால் அவன் என்னை காதலித்தால் எனவும் அவன் மற்ற வேறு யாருடனும்  உடலுறவு வைத்துக் கொள்ள மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இதனைப் பற்றி வெளியில் இருப்பவர்கள் யாருக்கும் எதுவும் தெரியாது.

ஆதி நம்ப ரெண்டு பேரும் ஏன் எச்ஐவி டெஸ்ட் எடுக்க கூடாது எனக்கு பயமா இருக்கு

 

உனக்கென்ன பைத்தியமா நான் என்ன பல பேரோட படுத்துட்டு இருக்கிறது தான் வேலையா இன்னொரு வாட்டி இந்த மாதிரி பேசினா உனக்கு அவ்வளவு தான் மரியாதை.

 

ஒரு நாள் அவனது அறைக்கு சென்றேன் அங்கு ஒரு ஜூனியர் மாணவரின் ஐடி கார்டு இருந்தது. இது எப்படி இங்கே வந்தது என கேட்டேன் அதற்காக ஏதேதோ பதில் கூறி மழுப்பினான். ஆனால் அவன் எதனையோ மறைக்கிறான் என எனக்கு தெரிந்தது. பிறகு நான் அந்த ஜூனியர் மாணவனை தேடி பேசினேன் அவன் மிகுந்த பயத்துடனும் பதட்டத்துடனும் இருந்தான். நான் அதைப்பற்றி அவனிடம் கேட்கும் போது தான் தெரிந்தது. அவன் என்னிடம் நடந்து கொண்டதைப் போலத்தான் இவனிடம் நடந்து கொண்டுள்ளான். எனக்கு இவன் இன்னொருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதெல்லாம் பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் இவனிடமும் அவன் ஆணுறையை பயன்படுத்தாமல் உடலுறவு செய்துள்ளான் என்பதை கேட்டவுடன் என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவன் ஒரு மருத்துவ மாணவன் இவனே இப்படி பயமில்லாமல் அறிவிலியாக இருக்கிறான் என்பது எனக்கு மிகுந்த கோபத்தை தந்தது. ஆனாலும் நான் அவனை எதிர்கொண்டு ஏன் இப்படி செய்தாய் என கேட்க முடியவில்லை. எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை என்னால் முடிந்த அளவு அவனைப் பார்க்காமல் இருக்க முயற்சித்தேன் ஆனால் அதுவும் என்னால் முடியவில்லை இப்பொழுது எல்லாம் அவன் மீது துளிகூட காதல் இல்லை அவன் என்னை எப்படி உடல் பசியை தீர்த்துக் கொள்ளும் இயந்திரமாக பார்த்தானோ நானும் அவனை அவ்வாறு பார்க்க தொடங்கினேன்.

******************

கல்லூரி நிர்வாக கமிட்டி கூடியது.

சார் இந்த ஹாஸ்டல் வார்டன் விஷயத்தில் என்ன முடிவு செஞ்சிருக்கீங்க சார் அந்த பையன் சொல்ற மாதிரி அந்த வார்டன் ஒரு மாதிரியான ஆளு தான்

சரி சரி அப்போ சஸ்பெண்ட் ஆர்டர் ரெடி பண்ணுங்க

சார் உங்களை பார்க்க ஒரு பொண்ணு ரொம்ப நேரமா வெளியில வெயிட் பண்ணிட்டு இருக்கு.

சார் நா ராஜா ஓட கேர்ள் பிரண்ட் உங்களிடம் முக்கியமா ஒரு விஷயம் காட்டணும் இந்த ரெக்கார்டிங் கேளுங்க.

 

ஏண்டா இப்படி குடிச்சு குடிச்சு உடம்பைக் கெடுத்துக்கிற. வார்டன் மேல இப்படி அநியாயத்துக்கு பழி போடுறியே இது உனக்கே நல்லா இருக்கா

 

நீ யாருடி இதெல்லாம் சொல்ல நான் நினைச்சா எது வேணா பண்ண முடியும் என்கிட்ட குரல ஒசத்தி பேசினா அந்த ஒன்பது வார்டன் நாய் இப்போ வேலை விட்டு தூக்க போறாங்க நீ இதே மாதிரி என்கிட்ட பேசிட்டு இருந்தா உன்னோட போட்டோஸ் எல்லாத்தையும் நான் நெட்ல போட்டுருவேன் ஒழுங்கு மரியாதையா அமைதியா இரு.

 

இந்த ரெக்கார்டிங்கை கேட்ட சூப்பர்வைசர் நீண்ட நேரம் அமைதியில் ஆழ்ந்திருந்தார்.

****************************************************************************************

 

இரண்டு மாதங்கள் ஆகின

எனக்கு மிகுந்த பதட்டம். டெஸ்ட் ரிசல்ட் என்ன வரும் என்று மிகுந்த யோசனைக்குப் பின் உறையை பிரித்துப் பார்த்தேன். டெஸ்ட் நெகட்டிவ் என பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதை கண்டவுடன் பெருமூச்சு விட்டேன். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச காண்டம் ஒரு பெட்டியில் நிறையாக அடுக்கி வைத்திருப்பார்கள். நான் அதிலிருந்து பத்து காண்டங்களை எடுத்துக் கொண்டேன் செல்லும் வழியில் வார்டனை பார்த்தேன்.

 

வார்டன் சார் உங்க பேர் என்ன?

அறிவழகன் டா ஏன்?

முதல் முறையாக அவருடைய உண்மையான பெயரை அறிந்தேன்.

 

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன