நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு அகாடமி விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வடக்கு கரோலினாவை சார்ந்த Afro Latin அமெரிக்கன் இனத்தில் பிறந்த அரியானா டிபோஸ் வென்றார். இதன் மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் குயர் நபர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
இது அவரது முதல் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை மற்றும் வெற்றியாகும். “வெஸ்ட் சைட் ஸ்டோரி” என்ற இசை சார்ந்த திரைப்படத்தில் (musical film) அனிதாவாக நடித்ததற்காக டிபோஸ் இவ்விருதைப் பெற்றுள்ளார்.
இந்த பாத்திரத்திற்காக டிபோஸ் முன்பே “கோல்டன் குளோப்” , “பாஃப்டா” மற்றும் “ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட்” விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியனா திபோசே ஆஸ்கர் 2022 விருது வாங்குகையில் சிறப்புரை ஆற்றியவதாவது: நான் என்னை உணர்ந்து வெளிவந்த Queer பெண்ணாவேன் என்னுடைய சரும நிறம் எதுவாக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. என்னுடைய எண்ணமெல்லாம் என்னுடைய கலையின் மீது மட்டுமே இருந்தது. இதனால் தான் இந்த நிமிடத்தை நான் கொண்டாடிக் கொண்டு இருக்கிறேன். யாராவது உங்களிடம் உங்களது தனித்துவம் என்னவென்று கேட்டால், நீங்கள் கூறுங்கள், என்னுடைய நிறம் என்பதை.
– கிரன் குமார் & ப்ரியா
