பேராளுமை திருநங்கை ரியா
தேர்தல் முடிவுகள் வந்தவண்ணம் இருந்தன. எப்பொழுதும் நடைபெறும் தேர்தல் போல் அந்தத் தேர்தல் இல்லை. இந்தத் தேர்தலில் பல மாற்றங்கள் மக்கள் மனதில் இருந்தது.
ஆனால் தமிழகத்தின் பெரிய கட்சி இந்த முறை வென்றே ஆக வேண்டும், ஆட்சி பீடம் ஏற வேண்டும். அதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வாகை சூட வேண்டும். இதுதான் அந்தக் கட்சியின் நிலைப்பாடு. இந்தத் தருணத்தில் அந்தக் கட்சி, திருநங்கை ஒருவரை வேட்பாளராக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் வாய்ப்புக் கொடுத்தைப் பற்றி அனைவரும் ‘ஆகா ஓகோ’ என்று பேசுவார்கள். ஆனால் ஓட்டு என்று வரும் போது, களத்தில் பல பிரச்சனைகள் வரும். பல எதிர்ப்புகள், அதையும் தாண்டி மக்கள் நம்மளை போன்றதோர் மனித உயிர் அவர், அவரும் நம்மைப் போன்றே சகமனுசி என்றெல்லாம் நினைத்தால் மட்டுமே தேர்தலில் அவருக்கு வாக்களிப்பார்கள்.
ஒரு பக்கம் கட்சி, ஒரு பக்கம் மக்கள். இவர்களின் நிலைப்பாடுகளின் மத்தியில் ரியா வென்றாரா? மக்கள் அவரை ஏற்றுக்கொண்டார்களா? இரண்டுமே நடந்தது. அவர் தேர்தலில் வாகை சூடினார். அவரின் வெற்றி மக்கள் என்றாவது மாறுவார்கள் என்று திருநர் சமூகம் நினைத்து வைத்த நினைப்புக்கு வீண் போகவில்லை.
மக்கள் மனதை வெல்ல கட்சி மட்டும் காரணம் அல்ல. அவர் 15 ஆண்டுகளாக செய்யும் மக்கள் பணியே காரணம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் தனது குழந்தை திருநங்கை என தெரிந்தால், இந்தச் சமூகத்திற்குப் பயந்து அவர்கள் மீது நடத்தப்பட்ட தீண்டாமை ஏராளம். அது போலவே சீனிவாசம்பாளையத்தில் அவர் துரத்தி அடிக்கபட்டார்.
கூலி வேலை செய்யும் அன்பரசனுக்கு மட்டும் இதனை பற்றிப் புரிதல் ஏற்படுத்த யாருமில்லை. சரி நண்பர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என ஆசைப்பட்ட அவருக்குக் கிடைத்தது ஏமாற்றமே. பள்ளியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவர் வாய்ப்புகள் தேடி செல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவரை ஏற்றுக்கொள்ள மும்பையில் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் திருநங்கை என்பவர் மானுடமே என்று புரிய வைத்தனர்.புது சொந்தங்கள் கிடைத்தனர்.
ஆனால் அவரைப் போன்றோர், இன்னும் எத்தனை மக்கள் ஆதரவு இல்லாமல் இருப்பார்கள் என்ற எண்ணம் அவரை நிம்மதியாக இருக்க வைத்துவிடவில்லை. எனது சமூகத்திற்காக உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்து மக்களை சந்திக்க ஆரம்பித்தார் ரியா.
அதற்கு மேலும் ஊக்கமளித்தது போல், கலைஞர் கருணாநிதி திருநங்கை என பெயர் மாற்றம் செய்தது, நமக்காக இந்த அரசும் உதவி செய்ய முன் வந்துள்ளது என முழு வீச்சாக சமூகத்தில்
களப்பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.
சமூகம் கட்டமைத்த அனைத்துத் தடைகளையும் தாண்டி, வாழ்வில் உயரலான்னு நினைச்சு சினிமா துறையில் எதாச்சும் வாய்ப்பு தேடி போனாங்க. அங்க நடிகர்களை கொண்டாட மட்டும் தான் ரசிகர்கள் இருந்தாங்க. திறமை இருக்கும் தன்னைப் போன்றோக்கு வாய்ப்பு இங்கே கிடைக்காது போலன்னு திரும்பி வந்த நம்ம ரியா, கொரோனோ நலத்திட்ட உதவிகளுக்கா 6 லட்சம் நிதி வசூல் செய்து மக்கள் பணியாற்றி இருக்காங்க.
தொடர்ந்து மக்களுக்கு சேவை புரிந்து வரும் ரியா அவர்கள், இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி கொண்டு, தன்னோட திருநங்கை சமூகத்தில் இருந்து வென்ற ஒரு அரசியல் அந்தஸ்து வெற்றியாக தான் நாம் பாக்கணும்.
திருநங்கை சமூகத்தில் இருந்து அரசியல் அந்தஸ்து பெற்ற நமது ரியா அவர்களை பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறது.
-அருண் தர்ஷன்