எந்த ஒரு சுயநலமும் இல்லாம பொது வாழ்க்கையில ஈடுபடுறவங்களுக்கு விருதுகள் எப்பொழுதும் அவங்க தொடர்ந்து செயல்பட நல்லாவே மோட்டிவேட் பண்ணும்.

அதே நேரம் அவுங்க பன்ன சாதனைக்கு பரிசாகவும் விருதுகள் கிடைக்கும் .

அந்த மாதிரி தான் இந்திய அரசும் அவங்களுக்கு பத்மஸ்ரீ அவார்ட அறிவிச்சு இருந்தது.

அந்த விருதை வாங்குவதற்காக அவங்க டெல்லி போயி காத்திரூந்தாங்க.

அவங்க பெயர் சொல்லி கூப்பிடும் போது எழுந்து எல்லாரையும் பணிவா வணங்கிகிட்டு அந்த விருதை குடியரசு தலைவர் கையால வாங்கிக்கிறாங்க .

மஞ்சம்மா என்கின்ற ஒருத்தங்களுக்கு அந்த விருது ஏன் குடுத்தாங்கன்னா கர்நாடக நாட்டுப்புற கலைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்காக பாராட்டும் விதமாக இந்திய அரசு பத்மஸ்ரீ அவார்ட மஞ்சம்மாவுக்கு கொடுத்துச்சு.

மஞ்சுமா யாருன்னா மஞ்சம்மா ஜோபதி என்ற ஒரு கன்னட நடிகை.
அவங்க நடிகர் மட்டும் இல்ல ஒரு திருநங்கை .கர்நாடக மாவட்டத்தில நாட்டுப்புற கலை துறையில இவரோட பங்களிப்பு ரொம்ப அளப்பரியது என்று சொல்லலாம்.

1964 ஆம் வருஷம் பிறந்த மஞ்சுநாத செட்டி எப்படி மஞ்சுநாதா ஜோகதி ஆனாங்கன்னா அவங்களோட கிராமத்துல ஒரு சடங்கு இருக்கு.

ஜோகபா என்று ஒரு சடங்கு.

அந்த சடங்கு எங்க நடக்குமா ஹோஸ்பேட் அப்படிங்கிற ஒரு கோவிலுக்கு முன்னாடி நடக்கும். அந்த சடங்கோட நம்பிக்கை என்னன்னா அந்த சடங்க பண்ணிக்கிறவங்க கடவுளையே கல்யாணம் பண்ணிகிற மாதிரி நம்புறாங்க.

அந்த கடவுளே கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் அவங்க எல்லாராலயும் ரொம்ப மதிப்போடு நடத்தப்படுகிறார்கள்.

அது மாதிரி தான் மஞ்சமா செட்டி மஞ்சமா ஜோக்தியா அன்னைக்கு அறியப்பட்டார்கள்.

மஞ்சமா ஜோக்தி 16 வயசுல பெண் மாதிரி நடந்துக்குறாங்கனு அவங்க குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாங்க.

என்னடா பண்றதுன்னு வாழ்க்கையில யோசிச்சிட்டு இருந்த அவங்க புடவையை கட்டிக்கிட்டு நெத்தியில பொட்டு வச்சுக்கிட்டு தெருக்களையும், பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயும் எல்லார்கிட்டயும் கையேந்தி காசு வாங்க ஆரம்பிச்சாங்க .

 

அந்த மாதிரி ஒரு நாள் ஒரு பஸ் ஸ்டாண்ட்ல நாட்டுபுறக்குழுவை சேர்ந்த அப்பாவையும் பையனையும் பார்த்த நம்ம மஞ்சம்மா நாட்டுபுறகலை பத்தி இன்னும் தெரிஞ்சுக்கறதுக்காக அவங்க ரெண்டு பேரோட சேர்ந்து ஒரு வருஷம் அந்த கலையை கத்துக்குறாங்க .

ஒரு வருஷத்துக்கு அப்புறம் கால்வா என்பவரோட ஜோகதீக் குழுவிற்கு மஞ்சள் மாவை இன்ட்ரோ பண்றாங்க.

பாட்டு மட்டுமே பாடிட்டு இருந்த மஞ்சமா அன்ணையில் இருந்து ஒரு நாட்டுப்புற நடன கலைஞரா மாறிப்போனாங்க .

கர்நாடகல பெல்லாரி மாவட்டத்தில் கல்லுகம்பா கிராமத்துல அனுமந்தையா ஜெயலட்சுமிக்கு பிறந்த மஞ்சுநாத செட்டி டான்ஸ் குழுவுல சேர்ந்ததிலிருந்து மஞ்ச நாத ஜோக்தியா எல்லாருக்கும் தெரிய வருது.

இவரோட 16 வயசுல அவங்க பேமிலியை விட்டு வெளியேற்றப்பட்ட மஞ்சமா ஜோக்தி அதன் பிறகு தன்னுடைய வாழ்க்கையில எதையாச்சும் ஒன்னை சாதிக்கணும்னு வெறித்தனமா அவங்க கத்த கலைய எல்லார்கிட்டயும் கொண்டு போய் சேர்க்க ஆரம்பிக்குறாங்க.

அதை பார்த்த கர்நாடகா அரசாங்கம் அவர்களுக்கு 2010 ஆம் வருஷம் கர்நாடகா அரசின் உயரிய விருதான ராஜ் யோத் சவ விருதை மஞ்சமாவுக்கு வழங்குவார்கள்.

மஞ்சமாவோட வாழ்க்கையில முதல் விருது அது தான் .

அதன் பிறகு ஒரு நல்ல நடிகராக இருக்க மஞ்சமா ஜோக்தி நிறைய பாடல்கள் பாடி இருக்காங்க .

பல கலை வடிவங்களில் ரொம்ப தனித் திறமை பெற்ற இவங்க கர்நாடக மாநிலத்துக்குள்ளேயும் வெளியேயும் பல நூறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
நம்ம மஞ்சமா ஜோக்திய கர்நாடக ஜனபட அகாடமி மெம்பரா சேர்த்துக்கிறது.

 

கொஞ்ச நாள்ல அவங்களோட திறமையை பார்த்த அந்த அகாடமி அந்த நிறுவனத்தோட தலைவரா கர்நாடக கவர்மெண்ட் ஆள நியமிக்கப்படுகிறார்.

இதன் மூலம் மாநிலத்தில் கலை நிகழ்ச்சிக்கான சிறந்த நிர்வாக திறமையா செயல்பட்டாங்க.

கலை நிகழ்ச்சிகளுக்கான நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய முதல் திருநங்கை என்ற ஒரு பெருமையும் பெற்றாங்க .

அதன்பிறகு தான் அவங்களோட வாழ்வு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எல்லாருக்குமே தெரிய வருது.

திருநங்கைகள் பெயரில் இருந்த பல தப்பான எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமா மக்கள் கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுச்சு .

இவங்க சார்ந்து இருக்க நாட்டுப்புற கலைகளை நிறைய பேரு விரும்பி பார்க்க ஆரம்பிச்சாங்க.
வீட்டை விட்டு வெளியேற்ற பற்று துவண்டு போகமா வாழ்க்கையில செயிச்சு இன்னைக்கு பத்மஸ்ரீ அவார்ட் வாங்கிய மஞ்சம்மா ஜோக்தியை பாழ்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறது.

மேலும் படிக்க

Comments

  • Avatar

    கார்த்திக்சேஷா

    28/10/2022 at 1:17 காலை

    மனம் பூரிப்பு அடைகிறது, இன்னும் எத்தனையோ சகோதரிகளுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் நாம் மூளை முடுக்குகளில் எல்லாம் கொண்டு சேர்க்க எத்தனிக்க வேண்டும்!

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன