ஒன்னும் இல்ல ஒரு 15 நாள் கழிச்சு வந்து பாருங்கமா.

ஏன் டாக்டர் எனக்கு ஆல்ரெடி கவுன்சிலிங் கொடுத்து இருக்கீங்க
இப்ப ஏன் 15 நாள் இன்னும் லேட்டா வர சொல்றீங்க.
என்னோட ரிசல்ட் என்ன ஆச்சு எதா இருந்தாலும் ஒப்பனா பேசுங்க.
நான் பயப்படமாட்டேன் தைரியமான ஆள் தான்.
இல்லம்மா அது வந்து நீங்க இன்னும் தைரியமா இருக்கணும்.
நீங்க வாழப்போற கொஞ்ச நாள்ல இங்கு அடிக்கடி வர்ற மாதிரி இருக்கும் உங்களுக்கு எச்ஐவி பாஸிடிவ்னு ரிசல்ட் வந்து இருக்கு.

ஓ அப்படியா டாக்டர் அப்படின்னா இன்னும் நான் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன்.
ஒரு 1.5 வருஷம் .
சரி டாக்டர் நான் வரேன்
நான் அடுத்த வாரம் வந்து உங்களை பார்க்கிறேன்.

தன்னோட வாழ்க்கை வெறும் ஒன்றரை வருஷம் தான் இருக்கு அப்படின்னு தெரிஞ்சாலும் அதை நினைச்சு பீல் பண்ணாம வீட்டுக்கு நடந்து போன நூரு போய் வீட்டு கதவ தொறந்து தன்னோட 3 குழந்தைகளை பார்த்தவுடனே மனசு உடைஞ்சு அவளையும் மீறி அழுகை ஆரம்பிக்கிறாள்
சாக போறதை நினைச்சு அழாமா நான் போயிட்டா இந்த மூன்று குழந்தைகளை யாரு பார்த்துப் பாங்கனு.
இருந்தாலும் அவள் மனது இவர்கள் வெறும் டாக்டர் தானே அந்த கடவுள் ஒன்றும் இல்லையே.
வந்துருப்பது வெறும் தொற்று நோய் தானே.இதற்கேன் நான் துவண்டு போய் மூலையில உக்கார்ந்துருக்கனும்.
கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி அதனை எதிர்கொள்வோம் ஆனால் நமக்கு வந்திருப்பது நம்ம மூலம் வேற யாருக்கும் போயிட கூடாதுனு உறுதியாக இருந்தார்..

டைலரிங் துறையில் வேலை பார்த்து தனது மாத வருமானத்தை சமாளித்து வந்த நூரிக்கு திருநங்கைகள் மத்தியில நிறைய எதிர்ப்பு வந்து உயிரோடு தீயில் எரிக்க வந்தவங்கள நோக்கி இவுங்க எழுப்புன கேள்வி அடுத்த கட்டத்த நோக்கி இவங்கள நகர்த்த ஆரம்பிச்சது.
Dr உஷா ராகவன் மூலமா GH வாலண்டியராக பணி செய்ய ஆரம்பிச்சு தன்னோடு வாழ்க்கையை தொடங்கி
ஒரு NGoல சேர்ந்து மக்கள் பணியாற்றி தனக்கு மாதிரி வேற யாருக்கும் இந்த கொடிய நோய் தாக்கிட கூடாதுன்னு இதைப் பத்தி மக்களிடையே விழிப்புணர்வு பண்ணனும் அப்படின்னு டாக்டர் ஷீலா மூலம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு களப்பணியாளரா தன்னோட அடுத்த கட்ட பணியை தொடங்கி பல மக்களுக்கும் திருநங்கைகளுக்கும் இதை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தி அவுங்க யாரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுட கூடாதுனு தீவிரமாக களப்பணியில் இருந்துட்டு வராங்க.

இவருக்கு உறுதுணையாக இருந்த ஜோசப் வில்லியம்ஸ்
என்பவர் ஆண், பெண், திருநங்கை என 26 பேர் கொண்ட Indian postive network என்ற குழுவை அமைத்து அந்த குழு மூலம் பல சேவைகளை செய்து எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வினை திருநங்கைகள் இடமும் மக்களிடமும் கொண்டு சேர்த்து தொடர்ந்து களப்பணியில் இருக்கிறார்.

அதன் பின் 2003 ஆண்டு முதல் தனது நெருங்கிய தோழிகளான செல்வி,இந்திரா, பழனி ஆகிய மூவரின் நினைவாக SIP memorial trustவை அமைத்து அதன் பின் தனது சேவைகளை தொடர்ந்த நூர் அம்மா அவர்கள் ஒரு கட்டத்தில் சோழப்புரத்தில் 5 கிரவுண்ட் இடம் வாங்கி சுமார் 200 குடும்பங்கள் பயனடையும் வகையில் கட்டடம் ஒன்றை கட்டி வருகிறார்.

திருநங்கைகள்,HIV பற்றின விழிப்புணர்வுகள் குறைந்து வருகிறது அதனால் அந்த துறை சார்ந்த சங்கங்கள் நிறைய நிதி பெற்று தெரு நாடகம் போன்ற விழிப்புணர்வை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தன்னிடம் வளர்ந்த 52 பேர் படிப்பு வேலை என வாழ்வில் ஒரு இடத்திற்கு அமர வைத்துள்ளார்.
என்னதான் voter id, ration card, passport என்கின்ற அங்கீகாரம் திருநங்கைகளுக்கு கிடைத்திருந்தாலும் எத்தனை திருநங்கைகள் தனது சொந்த வீட்டில் அப்பா அம்மா குடும்பம் என்று வசிக்கிறார்கள் என்ற கேள்வியினை சமுதாயத்தை நோக்கி வீசுகிறார்.

தனது குழந்தை திருநங்கை என்று தெரிந்த பின்பும் அதனை பெற்றோர்கள் மனதார ஏற்று அவர்கள் சமுதாயத்தில் மனிதர் போல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து மனித மனங்களில் கொண்டு சேர்ப்பேன் என கூறி போராடி வரும் நூரி அம்மா அவர்களை பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறது.

-அருண் தர்சன்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன