பேராளுமை கிரேஸ் பானு
சார் என் புள்ளைய பாதிலே ஸ்கூல விட்டு நிறுத்தாதிங்க அவன் நல்லா படிக்கனும் படிச்சா அவன் மாறிருவான் சார் ,கொஞ்சம் இரக்கம் காட்டுங்க தயவு செஞ்சு, என்று அந்த வாத்தியார் வூட்டுல எங்கம்மா இரவு 9.30 மணிக்கு கெஞ்சிட்டு இருக்காங்க.நானும் எங்க அண்ணனும் கூட இருக்கோம்.
வாத்தியாரோ இந்த தடவை கொஞ்சம் இரங்கி வந்து சரி நான் ஸ்கூல சேத்துக்குறேன் ஆனால் உங்க புள்ள காலைல லேட்டாதான் வரனும் யார்கிட்டேயும் பேச கூடாது, கிளாஸ் உள்ளே போகக்கூடாது அதே மாதிரி சாயாங்காலம் சீக்கிரமே கிளம்பிரனும் யாருக்கும் இவன் ஸ்கூலுக்கு வந்துட்டு போறானு தெரிய கூடாது அவ்ளோ சைலண்டா வந்துட்டு போகனும்.இதுக்கெல்லாம் சரினா இவன வர சொல்லுங்கனு வாத்தியார் சொல்ல கொஞ்சம் கூட எந்த எதிர்ப்பு தெரியாம எங்கம்மா சரிங்க சார்னு தலையாட்டுராங்க.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சின்ன கிராமத்தில வாழ்ந்து வரும் பானுவின் அம்மா பல சாதிய ஒடுக்குமுறைகளின் மத்தியில தன்னோட குழந்தைகள் நாலு பேரையும் இந்த சமூகத்தில் இருந்து உயர்த்த பாடு படுராங்க.
அதுநாள் வரை நல்லாதான் போயிட்டு இருந்த வாழ்க்கையில பானுவை விட்டு எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக கூட விலகாமா மொத்தமா எல்லோரும் போயிட்டாங்க . பானு பெரிசா ஒன்னும் தப்பு பன்னல நான் திருநங்கைனு எல்லார்கிட்டயும் தெரியப்படுத்தினாங்க.
நான் ஒரு திருநங்கை என்று சொன்ன ஒரு காரணத்துக்காக தான் கூட பழகியிருந்த எல்லோரும் மொத்தமா பேசாம போவாங்கன்னு பானு எதிர்பார்க்கவே இல்லை.
இந்த மாதிரி ஒரு கசப்பான சூழ்நிலையில தன்னோட குழந்தைப் பருவத்தைக் கடந்த பானு அவுங்க வாழ்க்கையில கருப்பு பக்கமா அதனை குறிப்பிடுராங்க.
பள்ளியில் நடந்த ஒடுக்குமுறைகளையும் சமூகம் தான் மேல விதிச்ச ஒடுக்குமுறைகளையும் தாங்க முடியாத பானு பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திராங்க.
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத பானு மனநல காப்பகத்துல சேர்க்கப்படுராங்க.
அங்க என்ன தான் பல கொடுமைகளையும் பல கஷ்டங்களையும் அனுபவித்திருந்தாலும் பானுவோட வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு திருப்பம் அங்க தான் நிகழ்ந்தது.
அங்க பல புத்தகங்கள் கூட இவங்க பேச ஆரம்பிச்சாங்க இந்த உலகத்தில நான் மட்டும் இப்படி கிடையாது நிறைய பேரு என்ன மாதிரி இருக்காங்க அப்படின்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க.
அம்பேத்கர் ,பெரியார் ,மார்க்ஸ் மூன்று தலைவர்களும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் அவர்கள் ஒன்று சேர்க்கிறது அவங்களோட சமத்துவக் கொள்கை தான்.
அவங்களைப் பத்தி படிச்ச பானு தன்னோட வாழ்க்கையில அடுத்த கட்டத்தை அடைய தயாரானாங்க.
என் சமூகம் ஏன் கடையில காசு வாங்கிகிட்டு பாலியல் தொழிலை செஞ்சுட்டு வாழுறாங்க .அவங்களுக்கே உண்டானதா இந்த வேலைகள் என சிந்திக்க ஆரம்பிச்சாங்க கண்டிப்பா இதனை மாற்றி காட்டுவேன் என்னால முடிஞ்ச அளவுக்குனு மனதில் உறுதியோட நகர்ந்த பானு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அல்வா கடை ஆரம்பித்து தன்னோட வாழ்க்கையை ஓட்டுவத பார்க்கும்போது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திச்ச பானுவுக்கு ஒரு புத்துணர்ச்சியாக அது அமைந்தது.
பானுவ தன்னோட மகளாக தத்தெடுத்துக்கிட்ட அவங்க பானு கேட்ட மாதிரியே படிப்பை தொடர உதவி செஞ்சாங்க.
பள்ளிப்படிப்பை கடந்த பானுவால புரோபஷனல் கோர்ஸ படிக்க முடியல.
திருநங்கைகள் கல்லூரி படிப்பை படிக்க முடியாதுனு விதிமுறை இருந்ததால கோர்ட்டுக்குப் போய் திருநங்கைகளும் ப்ரொபஷனல் கோர்ஸ் படிக்கலாம் அப்படிங்கற நீதிமன்ற தீர்ப்பை போராடி வாங்கி தன்னோட இன்ஜினியரிங் படிப்பை முடிச்சாங்க.
இந்தியாவின் முதல் திருநங்கை இன்ஜினியர் அப்படிங்கற ஒரு பெயரும் அவுங்களுக்கு கிடைச்சுச்சு.
ஆனா மற்றும் மத்தவங்களுக்கு பார்க்க அது வெறும் பெயராக இருக்கும் ஆனால் திருநங்கை சமூகத்தில இது மிகப்பெரிய சாதனைதான் .
சரிதான் படிப்பு முடிச்சாச்சு அரசு வேலையில் சேரனுனு நினைக்கும் பொழுதும் அங்கேயும் ஒரு தடைகல். அரசு தேர்வுகளில் திருநங்கைகளுக்கு இடமில்லை என்ற விதிமுறையும் இருந்தது அதனை எதிர்த்து பானுவோட சேர்ந்து ஐந்து திருநங்கைகள் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வாதாடி இறுதியில் அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.
ஆமாம் இவங்க போராடி வாங்கின அந்த தீர்ப்பு தான் இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா உருவாக காரணமாக அமைந்தது.
மேலும் இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவ மாணவி பானு மகள் தான்.
பானு 12 திருநங்கைகளை தத்தெடுத்து அவர்களை நல்ல வேலையில் அமர்த்துனதும் மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய திருநங்கை சாதனையாளர்களை உருவாக்கணுனு தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்காங்க.
திருநர் சமூக மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் தனி இட பங்கீடு கேட்டு போராடி வராங்க.
நீதிமன்றம் மூலமும் இதுக்கு தீர்வு கிடைக்குனு சட்ட போராட்டமும் நடத்தி வராங்க.
LGBTQ+ மக்களுக்கு மத்தியில இருக்க சாதிய வேற்றுமைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக அந்த மக்களிடையே வேற்றுமைகள் களைய தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
சமூகத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி பல முறை சிறை சென்ற பானு குறிப்பாக நீட் தேர்வை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்டு சிறையில் பல கொடுமைகளையும் அனுபவித்து சிறையில் இருந்து விடுதலை பெற்ற நாள் முதல் மீண்டும் இந்த மக்களுக்காக போராடி வருகின்றார்.
பானு இந்த சமூகத்தில் திருநங்கைகளை சக உயிர்களாக அனைவரும் மதிக்க வேண்டும் அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் ஜாதி மத இன மொழி வேற்றுமை அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என பல இடங்களில் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்காங்க.
இவரின் கட்டுரைகள் அனைத்தும் திருநங்கை கிரேஸ் பானுவின் கட்டுரைகள் என்று புத்தகமாக வெளிவந்து இருக்கு.
அதுமட்டுமில்லாம பல விருதுகளையும் வாங்கியிருக்கும் திருநங்கை கிரேஸ் பானு அவர்கள் கல்விதான் பெரிய மாற்றத்தை உருவாக்கும் அதனால திருநங்கைகள் அனைவரும் கல்வியை மட்டும் விட்டுடாதீங்க கல்வியை தொடர்ந்து ஒரு ஆயுதமா வச்சு வாழ்க்கையில முன்னேறுங்கள் அப்படின்னு உறுதிபடக் கூறி மக்களுக்காக பணியாற்றி வரும் கிரேஸ் பானு அவர்களை பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறது.
– அருண் தர்ஷன்
