பேராளுமை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ சர்மிளா
சரித்திரம் தன் மேல் மீண்டும் ஆழ் ஊன்றி பொன் எழுத்துகளால் பொறித்துக்கொண்ட மற்றுமொரு பேராளுமை!
இந்திய துணைக் கண்டத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் மதிப்பிற்குரிய சத்ய ஸ்ரீ ஷர்மிளா அவர்கள்!…
திருநங்கைகள் எல்லா துறைகளிலும் ஆளுமை செலுத்தி வரும் நிலையில் மற்றுமொரு மைல் கல்லாக நீதி துறையிலும் தடம் பதித்து விட்டனர் என்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடையமாக உள்ளது.
தமிழ் நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர், திருநங்கை சத்ய ஸ்ரீ ஷர்மிளா அவர்கள் 2004 முதல் 2007 தன் சட்டப் படிப்பை முடித்திருந்தாலும், பல்வேறு காரணங்களால் தன்னை கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது, ஆனால் எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து போராடி தனக்கான ஓர் உயரத்தை பெற்றிருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை, அவர்கள் தன்னை தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக சமீபத்தில் பதிவு செய்து கொண்டார்.
நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமை பெற்ற அவர்கள் இன்னும் அதிக வெற்றிகளை பெற்று நல் உயரங்களை அடைந்து நீதியரசராக வர வேண்டும் என்பது எங்கள் எதிர்ப்பாக உள்ளது. திருநர் சமூகத்தில் இன்னும் அநேகர் அவர்களை ஒரு முன்மாதிரியாக கொண்டு பல்வேறு துறைகளில் சாதிப்பார்கள் என்ற புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. ஒன்றுபட்ட சமநோக்கு சமுதாயம் உருவாக இது போன்ற நிகழ்வுகள்
ஆதிப்புள்ளியாக அமையட்டுமே!…
பேராளுமை திருநங்கை சத்ய ஸ்ரீ ஷர்மிளா அவர்களுக்கு அணியம் சார்பாக அகம் நிறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மரக்கா