போர்:
அரை கட்ட போர் நடந்து முடிந்து
ஜீன் 4ல் முழுகட்ட போரும் நிறைவடைய இருக்கும் இந்த வேளையில் உங்கள் அனைவரையும் இந்த இதழின் மூலம் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமூகநீதியையும்,சமத்துவத்தையும்,சகோதரத்துவத்தையும் சுமந்து நிற்க கூடிய இந்திய கூட்டணிக்கும் ,RSS சித்தாந்தக் கொள்கைகளை சுமந்து நிற்க கூடிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் நடக்கும் பெரும் போர்தான் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல்.
சுறுக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சமூகநீதியை சுமந்து நிற்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் RSS கொள்கைகளை சுமந்து நிற்க கூடிய பாஜக கூட்டணிக்கும் நடக்கும் பெரும் புரட்சிதான் 2024 நாடாளுமன்ற பொது தேர்தல்.சரியாக 1952ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் ஆனது நடக்கத் தொடங்கியது.அன்றில் இருந்து இன்று வரை நடந்து முடிந்த தேர்தல்கள் எல்லாம் வேறு ஆனால் 2024 பொதுத்தேர்தல் என்பது சற்று வித்தியாசமானது.ஆயுதம் ஏந்தாமல்,ரத்தம் சிந்தாமல் நடக்க கூடிய பெரும் புரட்சிதான் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தல்.
அப்படிபட்ட பெரும் புரட்சியில் காங்கிரசு கட்சி 25 அறிக்கைகளை மக்களின் நலனுக்காக அறிவித்தது ,
அதேபோல பாஜகவும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
காங்கிரசு வெளியிட்ட அறிக்கையில் LGBTQIA+ நலனுக்காக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.ஆனால் எதிரணியின் அறிக்கையில் அவர்கள்(LGBTQIA+)பற்றிய நலன் கருதி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
காங்கிரசு கட்சி வெளியிட்ட அறிக்கையை பற்றிய தகவல்களை தான் இந்த கட்டுரை பேச போகிறது.
தேர்தல் அறிக்கை:
LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்க சட்டம்(காங்கிரசு 2024 தேர்தல் அறிக்கை)
LGBTQIA+ நல சங்கங்கள்:
பாலினம் மாறும் குழந்தைகள் தன்னுடைய 4 வயதிற்குள் அவர்களுடைய பாலினத்தை (திருநங்கைகளாக/திருநம்பியர்களாக ) அறிந்து விடுகிறார்கள் என்பது ஆய்வுகளின் கூற்று ஆனால்
பெரும்பாலான குழந்தைகள் 7 வயதிற்கு மேல்தான் அதை பற்றிய சிறிய புரிதலை பெருகின்றனர். தன்னுடைய பாலின மாற்றத்தை அறியும் குழந்தைகள் அவர்களின் மனதிற்கு ஏற்றார்போல பாலினத்தை மாற்றிக்கொண்டு சமூகத்தில் பயணிக்க விரும்புகின்றனர்.அப்பொழுது அவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.அவர்களுடைய பெற்றோர்களுக்கு குழந்தைகளின் பாலின மாற்றம் தெரிய வரும் நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அந்த குழந்தைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.சிலப் பெற்றோர்கள் அவர்களுடைய பாலின மாற்றத்தை புறிந்து கொண்டு ஆதரிக்கின்றனர் ஆனாலும் அவர்கள்(மாற்றுப் பாலினத்தோர்) ஏதோ பாவம் செய்து விட்டது போலவே இந்த சமூகம் அவர்களை எதிர் நோக்குகிறது.
வீட்டில் ஆதரவு தராத பெற்கறோர்களை எதிர்கொள்ளும் மாற்றுப் பாலினத்தோர் வீதியில் தூக்கி வீசப்படுகின்றனர் ,இந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் மாற்றுப் பாலினத்தோர் அவர்களுக்கான பாதுகாப்பை தேடி வீதிக்கு வரும் பொளுது அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சங்கம் தான் LGBTQIA+ நல சங்கம்.
இந்த சங்கங்கள் ஆணில் இருந்து பெண்ணாக மாறும் திருநங்கைகளுக்கு ஏற்ற அறுவைசிகிச்சைக்கும்,மார்பக பெருக்க அறுவை சிகிச்சைக்கும் பெண்ணில் இருந்து ஆணாக மாறும் திருநம்பியர்களுக்கு ஏற்ற அறுவை சிகிச்சையும் ,மாற்பக குறைப்பு அறுவை சிகிச்சைக்கும் உதவி செய்து,மருத்துவ பாதுகாப்பு வழங்கி அவர்களுக்கு தங்கும் இடம் வழங்கி அவர்களை பாதுகாப்பது தான் நல சங்கம் ஆற்றும் உதவிகளாகும்.இன்னும் இச் சங்கங்கள் செய்யும் பணிகள் எண்ணில் அடங்காதவைகளாகும்.
LGBTGIA+ நல சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் :
மேற்கத்திய நாடுகளில் பெரும் அளவில் மாற்றுப் பாலினத்தோருக்கு ஆதரவு தரும் படியாகதான் சட்டம் இருக்கும் . மேற்கத்திய நாட்டு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் இயற்கையின் தற்செயலால் ஏற்படும் பாலின மாற்றத்தை புறிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தரும் பெற்றோர்களாக தான் அதீக அளவில் காணப்படுகிறார்கள்.
அந்த குழந்தைகளை அவர்களே மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு மருத்துவ பாதுகாப்பையும் சமூக பாதுகாப்பையும் வழங்குகின்றனர்.
அன்றைக்கு சர்வாதிகாரத்தை கையில் தூக்கிய அமெரிக்காவே LGBTQIA+ நல சங்கத்திற்கு அங்கீகாரம் கொடுத்த நாடுகளில் ஒரு நாடாகும்
அந்த வரிசையில்
-மால்டா
-தென் அமெரிக்கா
முதலிய நாடுகள் எல்லாம் திருநங்கைகள் நல சங்கங்களை ஆதரித்த நாடுகளாகும்.
தங்களுடைய பாலினத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் மாற்றுப் பாலினத்தோர் மால்டா நாட்டின் LGBTQIA+ நல சங்கங்களை அணுகும்போது மாற்றுப்பாலினத்தோர் மால்டாவின் குடியுரிமை பெற்றவராக இருந்தால் அவர்களுக்கான காகித பணிகள் எழிதில் முடிந்துவிடும்.அதாவது விதிமுறைகள் குறைவு.இதே குடியுரிமை அற்றவராக இருந்தால் அவர்களுக்கான காகித பணிகள் சற்று கூடுதலாக இருக்கும்..
மால்டாவிற்கு நேர்மாறாக தென் அமெரிக்கா சங்கம் பாலினத்தை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு கடினமான விதிமுறைகளை கொண்டதாக செயல்முறைகளை அமைத்திருக்கும்.
விதிமுறைகள் கடினம் என்றாலும் அங்கே மாற்றுப்பாலினத்தோர் அங்கீகரிக்கப்படுகின்றனர் என்பதே மன நிறைவுதான்.
கல்வி நிலையங்களில் அவர்களுக்கு படிக்கும் வாய்ப்பை வழங்கி வரும் நாடுகளாகவும் அமெரிக்கா,மால்டா,இந்திய ஒன்றியத்தின் ஒரு மாநிலமான தமிழ்நாடும் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறது..அதற்கு கண்முன் சாட்சியாக விளங்குவது தான்
சென்னையை சேர்ந்த திருநங்கை நிவேதா
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வரலாற்றின் பக்கங்களில் பொன் மகுடம் சூட்டி இருக்கிறாள் அன்பு தங்கை நிவேதா என்பது சற்று கூடுதல் மகிழ்ச்சி.
LGBTGIA+ நல சங்கங்களை அங்கீரப்பதன் மூலம் நாடு எதிர்கொள்ளும் சிக்கல்கள்:
திருநங்கைகள் நல சங்கங்களை அங்கீரப்பதில் உள்ள சிக்கல்கள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அவர்கள் பாதிக்கப்படாமல் மனித உரிமைகளை அனுபவிக்க விரும்புகின்றனர். ஆனால் பல்வேறு நாடுகளில் அவர்கள் பெண்கள் அல்லது இரண்டாவது பால் மக்கள் திருமணம் செய்வதை தடுக்கும் விதமாக அமைகிறது.குறிப்பாக அரசு, கட்சிகள், சமூகங்கள் என பல்வேறு தறப்புகளால் எதிர்க்கப் படுகின்றனர்.எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் இன்றைக்கு அமெரிக்கா மால்டா முதலிய நாடுகள் எப்படி அங்கீகாரம் கொடுத்ததோ அதே போல இனி வரும் நாட்களில் நிச்சயமாக இந்தியாவிலும் LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தந்து உள்ளது காங்கிரசு கட்சி.
சாணிக்குவியல் மேல் கட்டப்பட்ட இந்தியா( ஒரு திருநங்கையின் மனக்கசப்பின் வரிகள்) என்ற நிலை மாறி இந்திய ஒன்றியத்தில் மாற்றுப்பாலினத்தோர் முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டு சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படும்.அதற்கு நாம் உறுதுணையாய் நிற்போம் என்றபடி விடைபெறுகிறேன்.
-சு.சுகநிலவன்
