தன்பால் ஈர்ப்பாளர்களின் பொற்றோர்களுக்கு போப்பாண்டவர் வலியுறுத்தல்.

கடந்த 26 ஜனவரி 2022, புதன்கிழமை அன்று வாடிகன் நகரின் போப்பாண்டவர் பிரான்சிஸ் தனது உரையில் தன்பால் ஈர்ப்பாளர்களின் பெற்றோர்கள் அவர்களைக் கண்டிக்காமல் அவர்களுக்கு ஆதரவாய் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார்

கத்தோலிக்க மதம் உட்பட பல மதங்களில் LGBTQ சமூகம் நீண்ட காலமாக ஓரங்கட்டப்பட்ட
நிலையில், போப்பாண்டவரின் இந்த முற்போக்கான கருத்துக்களை மக்களால் வரவேற்கப்படுகின்றன.

மேலும் 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பிரான்செஸ்கோ என்ற ஆவணப்படத்தில் “தன்பால் ஈர்ப்பாளர்கள் ஒரு குடும்பத்தில் இருக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்களும் கடவுளின் குழந்தைகள்’ என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் அவருடைய கருத்தை கூறியுள்ளது வரவேற்கத்தக்கது!.
(Source: NDTV)

– கிரன் குமார்.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன