இது வரை : நமது கதையின் நாயகன் ஆதவனும் அவன் அத்தை மகன் இளவேனிலும், சொந்தகாரர் திருமணத்தில் சந்தித்துக்கொண்டனர், அங்கு ஆதவன் தனக்கு ஆண்கள் மேல் தான் விருப்பம் உள்ளது என இளவேனிலிடம் மனம் திறக்க, இளவேனில் LGBT பற்றியும் இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் தற்போதைய நிலையை பற்றியும், தானும் LGBT பிரிவில் இருப்பதாகவும் எடுத்து கூற, ஆதவன் தன் வாழ்கை துனை எப்படி இருக்க வேண்டும் என பேசிக்கொண்டிருந்துவிட்டு, பந்தியில் சாப்பிட சென்றனர்….
இனி…
ஆதவனும் இளவேனிலும் பந்தியில் சாப்பிட அமர்ந்த பின் ஒருவன் ஒவ்வொரு ஐட்டங்களாக பரிமாறிக்கொண்டிருந்தவன் அதே வழியா சென்ற வேறு ஒருவனை பார்த்து
“டேய் சத்யா அந்த சாம்பார் பக்கட் எடுத்துட்டு இங்க வா” என அழைக்க அவனும் சாம்பார் பக்கட்டுடன் வந்து இலையில் ஊற்ற, மண்டப வாசலில் மேள சத்தம் திடீரென கேட்டதால் சற்றே பயந்து அதை வெளி காட்டினான் ஆதவன்.
சாம்பார் ஊற்றிக்கொண்டிருந்த சத்யா, “ஒன்னும் இல்லை தவில் காரங்க அடிக்கிறாங்க, திடீர்னு கேட்டதும் பயந்துடீங்களா” என கேட்டதும் தான் ஆதவன் நிமிர்ந்து சாம்பார் ஊற்றும் சத்யாவை நேருக்கு நேர் பார்த்தான். ஆதவனுக்கு அந்த சத்யா என்ற பெயர் தன் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை கொண்டுவந்திருப்பதாய் மெல்ல உணர்ந்தான்.
இவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கையில் ஆதவன், பரிமாறும் சத்யா வை மெல்ல நோட்டம் விட்டான், சத்யா, அதிக பட்சம் சத்யாவை விட 2 வயது அதிகமாக இருக்கும், பார்த்தவுடன் பிடிக்கும் வகையாகஇல்லாவிட்டாலும், பார்க்க பார்க்க பிடிக்கும் வகை அழகான சின்ன கண்கள், அதில் ஓளி வீசும் கூர்மையான பார்வை, கொஞ்சம் பூசினாற்போன்ற தேகம், கருப்புக்கும் கலருக்கும் நடுவில் ஒரு மாநிறம், அகண்ட நெற்றி அதில் நடுவே வைத்திருந்த சிறிய சந்தன கீற்று, அழகோ அழகு, இருந்தாலும் உதடு மட்டும் சற்றே சிகப்பு கலந்திருந்தது தனி கவர்ச்சி, எப்பொழுதும் சிரித்த முகமாக இருப்பது சத்யாவின் தனிசிறப்பு. தலை முடி மன்மதன் சிம்புவை போல இருந்தது, இவை அணைத்தையும் ஆதவன் சாப்பிடும் வேகத்தை குறைத்து சத்யாவையே அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான், இன்னும் கூறப்போனால் வெண்பொங்கலுடன் சேர்த்து சத்யாவையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ஆதவன்.
இதை பற்றி எதுவும் கண்டுகொள்ளாதவாறு இளவேனில் சாப்பாட்டில் புகுந்து ரவுண்டு கட்டிக்கொண்டிருந்தான். கல்யாண பந்தலில் மீண்டும் ஒரு போட்டோ சூட்டும் மிச்சம் மீதி சடங்குகளும் நடந்துகொண்டிருந்தது, ஆதவனும் இளவேனிலும் கை கழுவிட்டு ஒரு ஐஸ்கிரீமுடன் வந்து மண்டபத்தில் ஒரு பக்கமாக அமர்ந்தனர்.
ஆதவன், “என்ன டா பயங்கர பசி போல, ஒன்னுமே பேசாம சாப்பாட்டுலையே உன் முழு கவனமும் இருந்துச்சேனு கேட்டேன்”
“ஆமா டா, என் இலையில இருந்ததோட சேர்த்து, எதிர்ல சாப்பிட்டுகிட்டு இருந்த ஒரு பொண்ணையும் பார்த்தேன், நீ பரிமாறினவங்களை பார்த்து ஜொல்லுவிட்டியே அதையும் பார்த்தேன்”
அதன் பிறகு இவர்கள் பேச்சு அடுத்து கல்லூரி சேர்வது பற்றி உலக விஷயங்கள், சினிமா, சீரியல், பாடல்கள் என பேச்சு எங்கேங்கோ சென்றுகொண்டிருக்க மண்டபம் காலி செய்யும் வேளை வந்தது. ஆதவனும், இளவேனிலும் கட்டி அணைத்துக்கொண்டு பிரியாவிடை பெற்றனர்.
திருமணத்திற்க்கு சென்று வந்ததிலிருந்து அவன் அம்மாவே வியந்து போகும் அளவுக்கு கொஞ்சம் கலகலப்பாக கணப்பட்டான், வீட்டில் அம்மாவிடமும் அப்பாவிடமும் நிறைய குறும்புகள் செய்து விளையாடிக்கொண்டிருந்தான்.
ஒரு மாத காலத்திற்க்கு பின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஆதவன் எதிர் பார்த்து போலவே அவனது மதிப்பெண்கள் சுமாராகத்தான் வந்திருந்தது. ஒரு வாரம் கழித்து
ஆதவன், “அப்பா நீங்க மனசுல என்னதான் நினச்சுட்டு இருக்கீங்க,”
அப்பா, “என் மனசுல ஆயிரம் இருக்கும் ஏன் குறைஞ்சது ஐநூறாவது இருக்கும், அதுல உனக்கு என்ன வேனும்”
“ரிசல்ட்டு வந்து இப்ப மார்க்கும் வந்தாச்சு, அடுத்து எந்த படிப்பு எந்த காலேஜ் சேத்தலாம்னு ஏதாச்சும் தோனுச்சா?”
“அதே தான் நானும் கேக்குறேன் ரிசல்ட்டு வந்து ஒரு வாரம் ஆகுது, இது பத்தி என்னிக்கு எங்கிட்ட பேசுவேனு காத்துகிட்டு இருந்தேன்”
அம்மா, “அது தான் இப்ப கேட்டான் இல்லை சொல்லுங்களேன்”
அப்பா, “அதுக்கு என்னை எதுக்கு இழுக்குறே, ஆதவன் தான் சொல்லனும், அடுத்து என்ன படிக்கிறதுனு நீதான் சொல்லனும் உன் இஷ்டம் தான், இது படி அது படினு நான் சொல்ல மாட்டேன், உனக்கு என்ன வரும்னு நீ தான் சொல்லனும்”
“அப்பா இது தெரிஞ்சா நானே சொல்ல மாட்டேனா எதுக்கு உங்ககிட்ட கேக்குறேன், தெரியாம தானே கேக்குறேன்”
“இந்த பாரு படிக்க போறது நீ தான் நான் இல்லை, ஏதோ நான் இருக்குறவரைக்கும் சோறு போடுவேன் அதுக்கு அப்புறம் நீ தான் உன்னை பார்த்துக்கனும் அதுக்கு ஏது படிச்சா நல்லா இருக்கும்னு நீ தான் யோசிக்கனும்”
அம்மா, “ஏங்க அது குழப்பா இருக்குனு தானே கேக்குறான் நீங்க தான் சொல்லுங்களேன்”
“ஆமா பா, அட்லீஸ்ட் எனக்கு சாய்ஸ் ஆவது கொடுங்க” என கூற ஆதவன் அப்பா, அம்மா என மூவரும் பலவிதமாக சிந்தித்து இறுதியில் கேட்ரிங்க் படிப்பது என முடிவெடுத்து அதே ஊரில் உள்ள கலைகல்லூரில் கேட்ரிங்க் பிரிவில் சேர்ந்தான்.
ஒரு மாதம் கழித்து கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியது. புதிய இடம், புதிய ஆட்கள், விதியாசமான கல்லூரி வகுப்புகள் என சென்றுகொண்டிருக்கும் நேரம். ஒரு நாள் மாலை கல்லூரிவிட்டு வீட்டிற்க்கு வந்து பொழுது இளவேனிலும் அவனது அப்பாவும் வந்திருந்தனர். ஆதவனுக்கு ஒரோ மகிழ்ச்சி ஒரே அதிர்ச்சி
ஆதவன், “டேய் இளா… இப்படி இருக்கே எப்ப வந்தே? என்ன திடீர்னு?”
ஆதவன் அம்மா இளவேனிலை பேச விடாமல், “இப்ப தான் டா வந்தா, அதும் உன்னை பார்க்க தான் வந்திருக்காங்க, இனி இவனும் நம்ப வீட்டுல தான் இருக்க போறான்”
“என்ன மா சொல்லுறே எனக்கு ஒன்னுமே புரியலை”
இளவேனில், “ஏன் மாமா வீட்டுக்கு வந்தா முகம் கை கால் கழுவ மாட்டியா? (என பேசிக்கொண்டே ரூம்முக்குள் அழைத்துச்சென்றான்) உனக்கு புரியுற மாதிரி நான் சொல்லுறேன், எனக்கு இங்க பக்கதது ஊர்ல தான் காலேஜ் அட்மிஷன் கிடைச்சிருக்கு”
“என்ன கோர்ஸ் எடுத்திருக்கே?”
“CA அதாவது Charted Accountant சேர்ந்திருக்கேன்”
“அதுகொஞ்சம் கஷ்டம் இல்லை, மொத்தம் எட்டு செமஸ்ட்டர் ஒரு செமஸ்ட்டர் ஒரு பேப்பர் பெயில் ஆனா கூட மறுபடியும் முதல் செம்ஸ்ட்டர்ல இருந்து படிக்கனும்னு கேள்விபட்டேனே”
“கஷ்டப்படமா எதும் கிடைக்காது இல்லை, ஆமா நீ கேட்டரிங்க்னு தான் படிக்கனும்னு எப்படி?”
“அதுவா இதை நான் தான் முடிவு பன்னினேன், அப்பா எங்கிட்டயே அந்த சாய்ஸ் கொடுத்துட்டாரு”
“பராவாயில்லையே, ஆனா எங்க அப்பா எனக்கு அந்த சாய்சேகொடுக்கலை, இது தான் இங்க தான்னு முடிவு பன்னிட்டாரு, ஆனா எனக்கு ஃபேசன் & காஸ்டியூம் டிசைனிங்க் இல்லை விசுவல் கம்யூனிகேசன் தான் படிக்கனும்னு ஆசை, ம்ம்ம்ம் நாம ஆசை பட்டது எங்க கிடைக்குது”
“சரி எங்க நம்ப வீட்டுல தானே தங்குறே?”
“நல்லா எங்க அப்பாகிட்ட சொல்லு, சொல்ல சொல்ல கேக்காம ஹாஸ்ட்டல் தான் சேர்ப்பேனு அடம்புடிக்கிறார், நீயாச்சும் கொஞ்சம் சொல்லேன் டா”
ஹாலுக்கு செல்ல அங்கு ஆதவனின் அப்பாவும், அம்மாவும் இளவேனிலை, தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பதற்க்கு அவன் அப்பாவிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்க
இளாவின் அப்பா, “இல்லைங்க, அவனுக்கு ஏற்கனவே பெறுப்பு இல்லை, எல்லாம் கண்டது கண்ட இடத்துல போட்டு வைப்பான், நாங்களாவது அவனை அதட்டுவோம், நீங்க அதும் சொல்ல மாட்டிங்க, அவனுக்கு பொறுப்பு வரனும் அவனை அவனே பார்த்துக்கனும்னு தான் ஹாஸ்ட்டல சேர்த்துருக்கேன் நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க, வீக் எண்டுல வேனா இங்க வந்துக்கட்டும்”
இதற்க்கு மேலும் யாரும் எதுவும் பேசமுடியவில்லை, இளவேனிலும் அவன் அப்பாவும் கிளம்பிவிட்டனர்.
அன்றைய இரவு ஆதவன் தன் படுக்கையில் படுத்து யோசித்துக்கொண்டிருந்தான், 5 வயதில் பள்ளி செல்ல ஆரம்பித்த பொழுது ஒரு ஆட்டு குட்டியை பார்த்து பயந்து ஓடிவந்த ஆதவனை, பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தான் அதே 5 வயது இளவேனில். ஐந்து வயதில் ஆரம்பித்த அந்த நட்பும் பாசமும், போன மாதம் தன் பெரிய அத்தை மகன் திருமணத்தில் தன் உணர்வுகளை அறிந்துகொள்ள உதவியாய் இருந்து வரை இளவேனிலுடன் கிடைத்த அணுபவங்களை யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது. சட்டென உதயமானது அந்த “சத்யா” வின் ஞாபகம்
ஆதவன் தனக்கு தானே பேசிக்கொண்டான் “இந்த ரிசல்ட்டு, காலேஜ் அட்மிசன் டென்சன்ல இந்த சத்யாவ நான் சுத்தமா மறந்தே போய்ட்டேன், அவனை பத்தி தெரிஞ்சுக்க சினிமா ஸ்டெயில்ல மறு வீடு போகும் போது எங்க அத்தை பையனோட மாமனார்கிட்ட லைட்டா பேச்சு கொடுத்தேன், அந்த பரிமாற வந்த பசங்க யாரு என்னு எனக்கு ஏதே காலேஜ் பசங்கனு சொன்னாரு எனக்கும் ஞாபகம் இல்லை, ஆனா இப்ப மறுபடியும் கேட்டா சந்தேகம் வரும், அதனால இனி நாம போகும் போதும் வரும் போதும் எங்கியாவது கண்ணுல தென்படுறானானு கவனிக்கனும்” என தனக்கு தானே பேசிக்கொண்டிருக்க.
ஆதவன் அம்மா, “என்ன டா ஆச்சு உனக்கு ஒரு வாரம் தான் காலேஜ் போன அதுக்கே இப்படியா”
ஆதவன் அப்பா, “எப்படியா?”
“அங்க பாருங்க அவன் தனக்கு தானே ஏதோ பேசிக்கிட்டு இருக்கான்”
ஆதவன் அப்பா, “அட போடி இது எல்லாம் காலேஜ் பசங்க விவகாரம், இதுல நாம பெரியவங்க எல்லாம் தலையிட கூடாது டீசண்ட்டா ஒதுங்கிக்கனும், இப்ப நான் போய் தூங்குறேன், நீ உன் டீவி சீரில் எல்லாம் பார்த்து முடிச்சிட்டு தான் வந்து படுப்பே இல்லை?”
“மனுஷனுக்கு போகுது பாரு புத்தி, காலேஜ் படிக்குற வயசுல பையன் இருக்கான், அரை கிழவன் ஆகியாச்சு….” என பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ரூமுக்குள்ளிருந்து
“நான் தூங்கி அரை மணி ஆச்சு இன்னுமா பேசிகிட்டு இருக்கே”
அன்றைய இரவு அத்தோடு முடிந்தது. அடுத்து வந்த 3 நாட்களும் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் நடக்கவில்லை, நான்காம் நாள் மாலை ஆதவன் வீட்டு லேண்ட் லைன் போன் அடிக்க, எடுத்து பேசியது ஆதவன், (குறிப்பு: கதையின் பின்னனி 2000 ஆம் ஆண்டு நடப்பது போல இருப்பதனால் அன்றைய கால கட்டத்தில் இருந்த வசதிகளை மட்டுமே, கதையினில் இருக்கும்)
மறுமுனையில் இளவேனில், “டேய் ஆதவா நான் இளா பேசுறேன் டா”
“நல்லா இருக்கியா, காலேஜ்ல சேர்ந்துட்டியா? ஹாஸ்டல்ல சேர்ந்தாச்சா? எங்கிருந்து பேசுறே?”
“நல்லா இருக்கேன் டா இன்னிக்கு தான் நான் சேர்ந்தேன் முதல் நாள் கிளாஸ்ம் போயாச்சு, இது காலேஜ் பக்கத்துல ஒரு பொட்டிகடை இருக்கு அங்க ஒரு பூத் இருக்கு அங்கிருந்து தான் டா பேசுறேன், என் ஹாஸ்ட்டல் போன் நெம்பர் குறிச்சுக்கோ, தினமும் 7 மணி போன் பன்னு நான் போன் பக்கத்துலயே காத்துக்கிட்டு இருப்பேன், இப்ப தான் அப்பாகிட்ட பேசினேன்”
“எல்லாம் ஓக்கேவா, முதல் நாள் கிளாஸ் எப்படி இருந்துச்சு”
“எனக்கு ஒன்னும் புரியலை, உன்னை மாதிரி நான் ஆர்ட்ஸ் குரூப்பா இருந்தா பரவாயில்லை நான் படிச்சது கம்பியூட்டர் சயின்ஸ், ஒன்னும் புரியலை, இன்னும் என்ன எல்லாம் நடக்க போகுதோ”
“பசங்க எல்லாம் பேசுறாங்களா பழகுறாங்களா? பிரண்ட்ஸ் எதும் கிடைச்சாங்களா?”
“முதல் நாள் இல்லை ஒன்னும் பெரிசா பழகல அது எல்லாம் போக போக பழகிக்கலாம் டா, சரி அத்தை மாமாகிட்ட எல்லாம் கேட்டாத சொல்லு இங்க பில் ஏறுது, மறந்துடாதே தினமும் 7 – 7:30 மணிக்குள்ள கூப்பிடு டா” என போனை வைத்துவிட்டான்
அடுத்து வந்த இரண்டு மூண்று நாட்கள் பெரியதாய் ஒன்றும் நடக்கவில்லை ஆனால் ஆதவன், தன்னுடைய சத்யா எங்கியாவது தெரிகிறானா என தேட ஆரம்பித்தாம், போதா குறைக்கு தன் கல்லூரியில் சத்யா என யாராவது இருக்கிறார்களா என தேட ஆரம்பித்தான். உணவு இடைவேளையில் கிளாஸ் கிளாசாக டிப்பார்மெட் டிப்பாட்மெட்டாக, பிளாக் பிளாக்காக தேட ஆரம்பித்தான், எதற்க்கு பலன் இல்லை. ஞாயிற்றுகிழமை அன்று ஆதவன் அப்பா, இளவேனிலை வீட்டிற்க்கு வரவழைத்தார், மூண்று வேளையும் சாப்பாடு களை கட்டியது, இரவு தூங்க செல்லும் பொழுது,
இளவேனில், “அத்தை சாப்பாடு சூப்பர் அத்தை”
ஆதவன் அப்பா, “இளா நீ வேற ஒருவாரமா ஹாஸ்டல் சாப்பாடு சப்பிட்டு இருக்கே, அதனால் தான் உன்னக்கு இது சூப்பாரா இருக்கு, உங்க அத்தை சமையல் என்னிக்கும் சுமார் தான்”
“ஏங்க உங்களுக்கு என்னை வம்பிழுக்காட்டி தூக்கமே வராதே, நீ சாப்பிட்டு போய் ஆதவன் ரூமுல படுத்துக்கோ காலையில காலேஜ் போய்க்கலாம் நான் சாப்பாடு கட்டி தறேன்”
அன்றைய நாளும் அப்படியே முடிந்து போய்விட்டது, அடுத்த நாள் மாலை சரியாக 7 மணிக்கு வழக்கம் போல ஆதவன் இளவேனிலுக்கு போன் செய்ய, இளாவின் குரலில் வழக்கம் போல் இருந்த உற்சாகம் இருக்கவில்லை, காரணம் கேட்டால்
இளவேனில், “எனக்கு நிறைய டேஸ்காலர் பசங்க தான் பிரண்ட்ஸ் இருக்காங்க அவங்க எல்லாம் 4:30 மணிக்கு கிளம்பிட்டா அதுக்கு அப்புறம் எனக்கிட்ட பேச பழக யாரும் இல்லை டா, என் கிளாஸ்ல வேற ஹாஸ்ட்டல் யாரும் இல்லையா, ரூம் மெட் வேற எங்கிட்ட பேச மாட்டிக்கிகுறாங்க எனக்கு என்ன பன்னுறதுனே தெரியலை”
“ஒன்னும் கவலை படாதே டா, எங்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, எனக்கு 3:30 மணிக்கு எல்லாம் காலேஜ் முடிஞ்சுடும் உன் காலேஜ்கும் என் காலேஜ்க்கும் 12 கிலேமீட்டர், அங்க வந்து உன்னை பார்த்து 6:30 மணி வரைக்கும் பேசிட்டு அப்புறமா நான் வீட்டுக்கு போறேன் சரியா, இந்த உலகத்துல தீர்க்க முடியாத பிரச்சனைகளே கிடையாது” என முதல் முறையாக இளவேனிலுக்கு ஆதவன் தைரியாம் கூறி தேற்றினான்.
அடுத்த நாள் மாலை, 3:30க்கு கல்லூரி விட்டதும் 4 மணிக்கு அடுத்த பஸ் பிடித்து ஆதவன் 4:30 இளாவின் கல்லூரி வாசலில் காத்திருக்க ஆரம்பித்தான் 4:45 பெரும்பாலான கூட்டம் வெளியேறிய பிறகு பயந்து பயந்து வெளியே வந்தான் இளா, அவனை அடையாளம் கண்டுபிடித்து அருகில் இருக்கும் டீக்கடையில் கையில் டீ டம்ளாருடன் அமர்ந்து பேச ஆரம்பித்தனர். இது இப்படியே ஒரு மூன்று நாட்கள் சென்றிருக்கும் நான்காவது நாள் மாலை 4:30 இளாவுக்காக ஆதவன் அந்த டீக்கடையில் காத்திருக்கும் நேரம், ஒருவன் வந்து, “நீங்க தானே ஆதவன் இளாவுக்கு ஸ்பெசல் கிளாஸ் இருக்கு 30 நிமிஷம் லேட்டா வருவான் உங்களை இருக்க சொன்னான்” என கூறிவிட்டு ஆதவனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
எத்தனை நேரம் தான் கடைக்குள் இருக்கும் டீவியை பார்த்துக்கொண்டிருப்பது என எழுந்து வெளியே உள்ள மர பெஞ்சில் அமர்ந்து போவோர் வருவோர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் ஆதவன். சரியாக 25 நிமிடம் கழித்து ஆதவனின் எதிர் திசையில் ஒரு பேருந்து நிறுத்தி சில இறங்கினர் அதில் ஒரு விடலை பையன் அவன் பாட்டுக்கு பேருந்து சென்ற திசைக்கு எதிர் திசையில் சென்றுகொண்டிருந்தான். சில நிமிடங்கள் ஆதவன் அந்த விடலையை உற்று பார்த்துவிட்டு அடையாளம் கண்டுகொண்டான் “அட இது நம்ப சத்யா…”
“சத்யா…” “சத்யா…”
“ஹேய் சத்யா… நில்லு…” என கத்திக்கொண்டே சாலையை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டான் மேற்கொண்டு அங்கே என்ன நடக்கும் காத்திருங்கள் அடுத்த இதழ் வரை. (தொடரும்…)
நன்றி
வணக்கம்
-இனியவன்