நல்ல நடிகர், நல்ல தொகுப்பாளர், நம்ம community-ல உள்ள மூத்தவர்களில் ஒருவரான உங்கள பத்தி தெரிஞ்சுக்குறதுக்கு எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு.
ரொம்ப நன்றி. நம்ம community-க்கு மிகப்பெரிய சேவை செஞ்சுட்டு இருக்கு அணியம் foundation. நான் பார்த்து வியந்துருக்கேன். நான் நெறைய interviews குடுத்துருக்கேன். நம்ம community மக்களுக்காக interview குடுக்குறத ரொம்ப பெருமையா நெனைக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த ஜெகன் அவர்களுக்கும், என்னை இன்னைக்கு நேர்காணல் எடுத்துட்டு இருக்க மரக்கா அவர்களுக்கும் நன்றி.
முதல்ல உங்கள பத்தின ஒரு சின்ன அறிமுகம் குடுத்துடுங்க.
என்னோட பெயர் S.R.சக்ரவர்த்தி. சுருக்கமா S.R.C-ன்னு சொல்லுவாங்க. நம்ம பொறக்குறதுக்கு அப்பா மட்டும் காரணம் இல்ல. அம்மாவும் தானே. எல்லாருமே அப்பாவோட initial வெச்சுக்குறப்ப, நன் யோசிச்சேன், “ஏன் நம்ம அப்பாவோட initial மட்டும் வெச்சுக்குறோம்”-ன்னு. அதான் என் அம்மாவோட initial-உம் சேர்த்து S.R.சக்ரவர்த்தி-ன்னு வெச்சுக்கிட்டேன். அம்மா, அப்பா எனக்காக எப்பயுமே நெறய sacrifice பண்ணிருக்காங்க. அதனால அவங்க எப்பவுமே என் கூட இருக்கணும்னு S.R.C-ன்னு short பண்ணிக்கிட்டேன். அத எல்லாரும் S.R.C.சக்ரவர்த்தி-ன்னு போட்டு அப்டியே ஆகிடுச்சு. நான் ஒரு தொகுப்பாளர், நடிகர். 20 வருஷம் தொகுப்பாளரா இருந்துருக்கேன். நான் என்ன வெளிப்படுத்துற நிமிஷம் வரைக்கும், 2020 ஜூன் வரைக்கும் தொகுப்பாளரா இருந்துருக்கேன். என்னைய வெளிப்படுத்துனதுக்கு அப்புறம் நெறய பேர் எண்ணெயை கூப்பிட மறுக்குறாங்க. 2000 நிகழ்சசிகளுக்கு மேல பண்ணிருக்கேன். நான் தொடாத topic-யே கெடயாது. எல்லா துறை சார்ந்தவங்களையுமே நான் interview பண்ணிருக்கேன், கடவுள் அருளால. அப்புறம் 25 serial கிட்ட பண்ணிருக்கேன். என்னோட health issues, society சார்ந்த சில பிரச்சனைகள்னால என்னால இதுல பெருசா போக முடியல. என்னால என்ன பண்ண முடியுமோ அத நான் பண்ணிருக்கேன். அப்றம் நான் ஒரு dubbing artist, voiceover artist. இப்ப சமீப காலங்கள்ல எழுத்தாளராவும் பணிபுரிஞ்சுட்டு இருக்கேன். “திராவிட உரை”-ன்ற பத்திரிகைல reporter ஆகவும் இருக்கேன். இது இல்லாம மக்கள் பணியிலும் இருக்கேன்.
Intersex அப்படின்ற பதம் இப்ப எல்லார்கிட்டயும் விழிப்புணர்வு ஆகிட்டு இருக்க ஒரு பதம். நீங்க intersex person-ன்னு உங்களுக்கு எப்ப தெரியவந்தது?
இதுதான் நான் கண்டிப்பா நம்ம community people-க்கு சொல்லணும்-னு நெனைக்குறது. முதல்ல யாரா இருந்தாலும் வெளிய வரும்போது நெறய பிரச்சனைகள நம்ம எதிர்கொண்டுதான் ஆகணும். தமிழ்நாட்ல முதல் இடைலிங்க, அதாவது intersex person-ஆ நான் வெளிய வந்தேன். நெறய தயக்கத்தோட பயத்தோட தான் நான் வெளிய வந்தேன். எனக்கு யாரையும் தெரியாது. நம்ம community people-உம் பெருசா பழக்கம் கெடயாது. நான் முக்கியமா ஒருத்தருக்கு நன்றி சொல்லணும் அப்டினா அனிஷ் ஆண்டோ-க்கு தான் சொல்லுவேன். நம்ம community person தான் அவரு. அவர் நான் பணிபுரிந்த தொலைக்காட்சில news reader-ஆ இருந்தாரு. அந்த தொலைக்காட்சில எல்லாருக்கும் என்னைய பத்தி தெரியும். But எனக்கு இருந்த மாதிரி அவங்களுக்கும் நெறய குழப்பங்கள் இருந்துது. நாளடைவுல என்னோட உடல்நிலை மோசமாகிட்டே இருக்கும்போது, அங்க இருந்த ஒரு cameraman அண்ணனும், என் தம்பி ஒரு cameraman-உம் தான் “என்ன ஆச்சு உனக்கு? ஏன் நாளுக்கு நாள் ரொம்ப மோசமாகுது உடம்பு உனக்கு?”-ன்னு சொல்லி கேக்கும்போது நான் எனக்கு இருக்க பிரச்சனைகள் எல்லாம் சொன்னேன். அவங்க தான் இத பத்தி தெரிஞ்ச ஒருத்தர் நம்ம office-ல இருக்காருன்னு சொல்லி அனிஷ் ஆண்டோ-வ எனக்கு introduce பண்ணாங்க. அவரு, நம்ம சமூக செயற்பாட்டாளர் ராமகிருஷ்ணன் அப்படிங்கிற ஒருத்தர introduce பண்ணாரு. அவருகிட்ட போய் என்ன பத்தின விஷயங்கள் எல்லாம் சொல்லி, அவரு என்னைய பாக்கும்போது தான் சொல்றாரு நீங்க intersex-ன்ற category-க்குள்ள தான் வருவீங்கன்னு சொன்னாரு. Intersex பத்தின நெறய விஷயங்கள் எனக்கு சொன்னாரு. அதுவரைக்கும் எனக்கு யாரும் இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் இதுதான், இதுக்கு இப்டி ஒரு தீர்வு இருக்குன்னு யாரும் சொன்னதில்ல. அதுக்கு அப்றம் தான் நான் யோசிச்சேன், எங்க community-அ பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். யாரும் வெளிய வர்றதில்லை, நெறய பிரச்சனைகள் எதிர்கொள்றாங்க அப்டின்னு தெரிஞ்சுது. ஏன் நம்ம நம்மல வெளிப்படுத்திக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். என் life-ல எல்லாமே முடிஞ்சுபோச்சு. Atleast அடுத்து வர்ற generation ஆச்சும் அவர்களுக்கான life வாழணும். என்னய வெளிப்படுத்தும்போது நான் ஒரு விஷயத்துல தெளிவா இருந்தேன். வெறும் intersex-காக மட்டுமே இருக்க கூடாது. LGBTQIA வரைக்கும் இருக்கணும். எங்க அம்மாக்கிட்ட போராடினேன், என்னய வெளிப்படுத்தும்போது. அந்த time-ல நான் LGBTQIA பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். அந்த ஒவ்வொரு எழுத்துக்குள்ளயும் ஒவ்வொரு மனிதர்களோட வாழ்வு அடங்கிருக்கின்றத தெரிஞ்சுக்கிட்டேன். மக்கள் கிட்ட கொண்டுபோகும்போது intersex பத்தி மட்டுமில்லாம LGBTQIA சேர்த்து தான் விழிப்புணர்வ கொண்டு போகணும்ன்றத மையமா எடுத்துட்டு இன்னைக்கு வரைக்கும் பண்ணிட்டு இருக்கேன். இன்னைக்கு கூட நம்ம பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள சந்திச்சு LGBTQIA-க்கான 6 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு குடுத்துருக்கேன்.
நானும் உங்க முகநூல் பக்கத்துல அந்த post-அ பாத்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்ம நேர்காணல படிக்கறவங்களுக்காக intersex அப்டினா என்னன்றத பத்தி கொஞ்சம் சொல்லுங்க. மத்த மனிதர்கள விட உங்க உடல் அமைப்பு எப்டி மாறுபட்டு இருந்துது-ன்னும் சொல்லுங்க.
Intersex அப்டின்றது நம்ம தமிழ்நாட்டுல மிக சொற்பமானவங்களுக்கு தான் தெரியும். அப்டி தெரிஞ்சவங்கள்ல சிலர் ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சேந்து பிறக்கிற குழந்தைகள் தான் intersex-ன்னு நெனச்சுட்டு இருக்காங்க. அப்டி கெடயாது. Intersex-ல நெறய variations இருக்கு. இதுதான் intersex-ன்னு இன்னைக்கு வரைக்கும் யாராலயும் சொல்ல முடியல. ஏன்னு பாத்தீங்கன்னா ஒவ்வொரு நாளும் இது சம்மந்தமா புதுசு புதுசா நெறய விஷயங்கள் வெளிய வந்துட்டு இருக்கு. அதுனால இதுதான்னு point பண்ணி சொல்ல தெரியல. எனக்கு தெரிஞ்ச விஷயங்கள சொல்லிட்டு இருக்கேன். அதாவது ஆணுறுப்புக்கு பெண்ணுறுப்பும் கொண்டு பிறக்க கூடிய குழந்தைகள் மட்டும் intersex இல்ல. என்னைய மாதிரி உள்ளுறுப்பு கொண்டு பிறக்க கூடியவர்களும் இருக்காங்க. மரபணு ரீதியா பாதிக்கப்பட்டவங்களும் இருக்காங்க. நான் பிறக்கும்போது ஒரு ஆண் தான். எனக்கு 10 வயசு இருக்கும்போது என் ஆணுறுப்பு வழியா எனக்கு bleeding வந்தது. அப்பதான் டாக்டர் கிட்ட போய் பாக்கும்போது, அது bleeding-னும் எனக்கு uterus இருக்குன்னும் தெரியும். அது எல்லாருக்குமே பெரிய ஆச்சரியம். ஏன்னா அப்ப science இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத காலம். நான் பிறந்த ஊர் பண்ருட்டி. அங்க அந்த அளவுக்கு மருத்துவ வசதிகள்லாம் கெடயாது. அது அப்டியே போய்கிட்டே இருந்துச்சு. ஒரு 11.5 வயசுக்கு எனக்கு semen வெளிவந்துச்சு. டாக்டர்களுக்கு ரொம்ப ஆச்சரியம், எப்படி ரெண்டுமே வேல செய்யுதுன்னு. அப்பத்தான் எனக்கு இது எல்லாமே தெரிய ஆரம்பிச்சுது. நான் ஒரு ஆண். ஆனா எனக்கு மாதவிடாயும் ஆகுது. ஒரு ஆணுக்கான விந்து சுரப்பிகளும் வேல செய்யுதுன்னு எனக்கு அப்பதான் தெரிஞ்சுச்சு. அந்த நேரத்துல treatment செய்றதுக்கான வசதியும் எங்க ஊருல கெடயாது. ரொம்ப சின்ன வயசா இருந்தனால படிப்பு பிரச்சனையும் வந்துச்சு. 5th leave-ல தான் எனக்கு bleed ஆகுறது நடந்துச்சு. School தொறந்ததுக்கு அப்றம் கூட படிக்கிற பையன்கிட்ட எனக்கு நடந்தத சொன்னேன். அவனுக்கும் அத பத்தி தெரியாதுன்றனால வீட்ல போய் அவங்க அம்மாக்கிட்ட சொல்லிட்டான். அவங்க அம்ம அத principal-க்கு phone பண்ணி சொல்லிட்டாங்க. Principal என்னய பயங்கரமா அடிச்சுட்டாங்க. அப்றம் எங்க அம்மா வந்து அது உண்மைதான்னு சொல்ல அது school full-ஆ பரவி, ஊர் full-ஆ பரவிடுச்சு. இன்னைக்கு இவ்ளோ வளர்ச்சி அடைஞ்ச நாகரிகமான உலகத்துலயே இவ்ளோ பிரச்சனைகள் இருக்கப்ப, உங்களுக்கே தெரியும் நான் அன்னைக்கு எவ்ளோ பிரச்சனைகள் எதிர்கொண்டிருப்பேன்னு. என்னோட school என்னைய ஏற்க மறுத்துச்சு, என்னோட படிப்பு போச்சு, அந்த வயசுக்குண்டான என்னோட சந்தோசம் போச்சு. நெறய abuse, நெறய கஷ்டங்கள் இருந்துச்சு. இது ஒரு விதமான intersex. என்னோட genetics பாத்தீங்கன்னா 46 xx male னு சொல்லுவாங்க. இது ஏன் அப்டினா, பொதுவா xx-ன்னா female-ன்னு சொல்லுவாங்க, xy-ன்னா male-ன்னு சொல்லுவாங்க. அம்மாவோட கருல இருக்க genetics xx-ஆ இருக்கும், அப்பாவோட விந்தணுக்கள்-ல இருக்கது xy-ஆ இருக்கும். x ஓட x சேரும்போது பெண் குழந்தை, x ஓட y சேரும்போது ஆண் குழந்தை பிறக்கும். ஒரு ஆணுக்கு xx chromosome இருக்குன்னா எப்டி அவன் ஆணா இருப்பான். இங்கதான், அந்த 46 xx பத்தி பாத்தா, for example என்னோட genetics-ல் 100 xx இருக்குன்னு வெச்சுக்கிட்டா, 50 x மேல y ஓட chromosome வேல செய்யுது. அதனால என்ன ஆகிடுச்சுன்னா xx ஓட y வேல செய்றனால என்னோட உடல் ஆணா எடுத்திக்கிச்சு, உள்ளுறுப்பு பெண்ணா எடுத்திக்கிச்சு. நான் முழுக்க முழுக்க ஒரு ஆண் தான். ஆனா என்னோட genetics பாத்தீங்கன்னா xx. அப்ப நான் genetically female, biologically நான் male. நெறய பேர் என்கிட்ட ஒரு கேள்வி கேப்பாங்க, “உனக்கு எந்த மாதிரி feelings இருக்கும்ன்னு. எங்க போனாலும், எந்த பேட்டினாலும் இந்த கேள்வி கேப்பாங்க. எனக்கு சிரிப்பு தான் வரும். இத ஏன் நான் சொல்லணும். படிச்ச எல்லாருக்குமே தெரியும். ஒருத்தவங்களோட genetics என்னவோ அதுவாதான் அவங்க வளருவாங்க. இங்க வந்து நம்ம உறுப்ப வெச்சு ஆன், பெண்-னு பிரிக்கிறோம். ஆனா து கெடயாது. முதன்முதல்ல அம்மாவோட கருவும், அப்பாவோட விந்தணுவும் சேரும்போது முதல் சேர்க்கை genetics தான். அங்கேயே தீர்மானிக்கப்படுத்து x ஓட x சேருதா, x ஓட y சேருதா, x ஓட xx y சேருதா, இல்ல xxx சேருதா, இல்ல xxy சேருதான்றது அங்கேயே தீர்மானிக்கப்படுத்து. அதுக்குப்புறம் தான் உறுப்பு உருவாகுது. வளரும் குழந்தை குறிப்பிட்ட ஒரு வயது வரைக்கும் ஆணும் கிடையாது, பெண்ணும் கிடையாது. அதுக்கப்றம் பெண்ணாதான் வளருது. அதுகுப்பறம் உறுப்பு வளரும்போது தான் அது ஆணா பெண்ணான்னு தீர்மானிச்சுக்குது. வெளிய வந்ததுக்கு அப்புறம் நம்ம என்ன பண்றோம், உறுப்ப வெச்சு ஆன், பெண்-னு பிரிக்கிறோம். அப்டி கெடயாது. 10 வயசு வரைக்கும் ஆண் குழந்தை, பெண் குழந்தைன்னு எந்த பாகுபாடும் கிடையாது. பருவம் அடைந்த பிறகுதான் ஆண் தன்ன ஆணா உணருவான். பெண் தன்ன பெண்ணா உணருவாள். பருவம் அடையுற வயதுள்ள தான் நம்ம யாருன்னு நம்மளால நம்ம தீர்மானிக்க முடியும். அதை எது தீர்மானிக்குதுன்னா, முதன்முதல்ல சேருது பாருங்க, அந்த சேர்க்கை தான் அப்ப நமக்கு வெளிப்படும். அது ஆணா இருக்கலாம், பெண்ணா இருக்கலாம், intersex-ஆ இருக்கலாம், திருநங்கையா இருக்கலாம், திருநம்பியா இருக்கலாம். நம்ம genetics என்னவோ அதுவாத்தான் நம்மளுடைய செயல்பாடுகள் இருக்கும், நம்ம வாழ்வு அடங்கியிருக்கும். அது இன்னைக்கு யாருமே புரிஞ்சுக்கல. எல்லாருமே உறுப்பு வைத்து ஆண், பெண்-ன்னு தீர்மானிக்குறாங்க. First of all, உறுப்பு வெச்சு ஆண்,பெண்-ன்னு தீர்மானிக்கிறது இயற்கை கெடயாது. ஒரு குழந்தை வளரும்போது அத குழந்தையா வளரவிட்டு, வளந்ததுக்கு அப்புறம் தான் யாருன்றத தீர்மானிச்சு எந்த மாதிரி வாழணும்னு னேநிக்குறாங்களோ அத ஏத்துக்கிட்டு வாழ்றது தான் இயற்கை. இதைத்தான் நான் இன்னைக்கு மக்கள்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். என்னோட genetics பத்தி நான் சொன்னேனா. Intersex-ல ரெண்டு இருக்கு: Complete, Partial. Complete பாத்தீங்கன்னா முழுக்க முழுக்க அவங்க பெண்ணா இருப்பாங்க, ஆனா அவங்க chromosome xx-க்கு பதிலா xy-ஆ இருக்கும். அதனால அவங்களுக்குக் குழந்தை பொறக்குறதுல பிரச்சனை வரும்னு சொல்லுவாங்க. Partial பாத்தீங்கன்னா முழுக்க முழுக்க அவங்க பெண் குழந்தையா பிறந்துருப்பாங்க, ஆனா அவங்களுக்கு கர்ப்பப்பை இருக்காது, மார்பக வளர்ச்சி இருக்காது. அதனால அவங்க தன்னை ஆணா தான் உணர்வாங்க. இதுலயே ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் சேந்து பிறக்குறவங்க இருக்காங்கள்ல, பிறக்கும்போது அவங்கள ஆன் குழந்தை, பெண் குழந்தைன்னு தீர்மானிச்சு surgery பண்ண கூடாதுன்னு இன்னைக்கு court சொல்லிருக்கு. அவங்க வளந்ததுக்கு அப்புறம் எந்த உறுப்பு செயல்படுது, எந்த பாலினத்தின் மேல ஈர்ப்பு வருது, என்னவா அவங்க உணர்றாங்க அப்டின்றத பொறுத்துதான் அவங்க அவங்களுக்கு தேவையான உறுப்பு தேர்ந்தெடுத்து அவங்க surgery பண்ணிக்கலாம்னு இன்னைக்கு சட்டம் இருக்கு. இந்த மாதிரி மரபணு ரீதியா பாதிக்கப்பட்டவர்களும் இருக்காங்க. இப்டி intersex-ல நெறய variations இருக்கு. சில conditions-அ நம்ம எந்த test-லயுமே கண்டுபுடிக்கவே முடியாது. அந்த மாதிரியும் இருக்கு. அதனால இது தான் intersex-ன்னு point பண்ணி நம்மலால சொல்லவே முடியாது. நான் முன்னாடியே சொன்ன மாதிரி, நான் முழுக்க முழுக்க ஒரு ஆண். ஆனா எனக்கு கர்பப்பை இருந்துச்சு. அதனால எனக்கு ஆணுறுப்பு வழியா பெண்மையும் வந்துச்சு, விந்தும் வெளியாச்சு. ஒரு stage-க்கு அப்றம் இதனால நெறய health issues வர ஆரம்பிச்சுது, இதனால. ஏன்னா ஒரு ஆணோட உடல்தன்மைக்கு, பெண்ணோட செயல்பாடுகள் இருக்கப்ப நெறய பிரச்சனைகள் இருக்கும். அது மாதிரியான பிரச்சனைகள் எனக்கு bleed ஆன உடனேயே பயங்கரமான கால் வலி வர ஆரம்பிச்சுது. 13 வயதுல urine problem வந்துச்சு. எல்லாருக்கும் போய் நின்ன உடனேயே open ஆகி urine வரும், முடிச்சதும் close ஆகிடும். ஆனா எனக்கு natural-ஆ அந்த செயல்பாடு இல்ல. நானாத்தான் pressure குடுத்து urine போனும். அதனால எனக்கு செரியா வெளிய வராது. திரும்ப திரும்ப urine வர்ற மாதிரி feel இருந்துட்டே இருக்கும். நெறய health issues வந்து, எப்பயுமே body pain இருந்துட்டே இருக்கும். இப்டி நெறய பிரச்சனைகள் எதிர்கொண்டு அப்றம் தான் தீர்மானிச்சேன். என்னைய பத்தி தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்றம் தான் யாருமே தெரியாம நான் இத்தனை வருஷம் வாழ்ந்துருக்கேன். அதுமாதிரி இன்னும் எத்தன பேர் வாழ்ந்துட்டு இருப்பாங்க. ஏன்னா intersex-ன்னு தெரியாமலே நெறய பேர் வாழ்ந்துட்டு இருக்காங்க. Intersex-ன்னு இருக்கதே நெறய பேருக்கு தெரியாது. அதனால அவங்க எல்லாருக்குமா, நம்ம வெளிய வரணும்னு முடிவுபண்ணி எங்க அம்மாட்ட சொல்லி புரியவெச்சி அதுக்கு அப்றம் என்னைய வெளிப்படுத்தினேன்.
உங்க parents-க்கு முதன் முதல்ல இது தெரியவரும்போது அவங்க reaction எப்டியா இருந்துது?
முதல்ல அவங்களால அத ஒத்துக்க முடியல ஒரு ஆணுக்கு PERIODSனு, மேலும் நான் இருந்த ஊர் ஒரு வளர்ச்சி அடையாத ஒரு ஊர் (பண்ருட்டி) என் பெற்றோருக்கு ஒரு பயம் இருந்தது, எப்படி வளர்க்க போறோம்னு.
படிக்கிற பள்ளியில ஆசிரியர்கள் மூலமாகவும் Abuse நடந்துச்சி, என் தந்தை, நான் அடிப்படை கல்வியாவது பெற வேண்டுமென்று என்னை டுட்டோரியலில் சேர்த்தாங்க அங்கு இருந்த ஆங்கில ஆசிரியராலும் எனக்கு ABUSE நடந்துச்சு அதனால என் படிப்பை பாதியில் நிறுத்திற நிலைமைக்கு வந்துருச்சு. கேலி, கிண்டல், ரோட்டில நடந்து போகும்போது கல்லெடுத்து அடிக்கிறது , தண்ணீரை மேலே ஊத்துவாங்க, மணல் அள்ளி போடுவாங்க இந்த மாதிரி நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டன், வேற ஒரு பையனை சேர்த்து வச்சு அவன் பெயரை சொல்லி கிண்டல் பண்ணுவாங்க.
அப்பா கொஞ்சம் கிராமத்தால் மாதிரி, அம்மா கொஞ்சம் படிச்சவைங்க அதனால அம்மா நிறைய யோசிப்பாங்க, அப்ப எந்த மனநிலையில் அந்த முடிவை எடுத்தாங்க என்று எனக்கு தெரியாது, எப்படி மனசை மாத்திக்கிட்டாங்கணும் எனக்கு தெரியாது , ஆனா அவங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தாங்க, என்ன நினைச்சு ரொம்ப வருத்தப்படுவாங்க ஒரு கட்டத்துக்கு மேல அம்மா என்கிட்ட சொல்லுவாங்க இந்த ஊர் உன்ன பத்தி ஆயிரம் சொல்லும், உன்னை குழப்பும், காதல் எல்லாம் இந்த வயசுல சகஜம், ஒன்னு மட்டும் நினைச்சுக்கோ, அம்மாவுக்கு உன்மேல முழு நம்பிக்கை இருக்கு நீ ஒரு பையனையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, ஒரு பொண்ணையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது, நானே ஒரு பெண்ணாக இருந்தாள் கூட உன்ன கல்யாணம் பண்ணிக்க யோசிப்பேன், நீ ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையை வாழ பிறக்கல, உன் பிரச்சனை இதுதான், நீ ஆண், நீ முழுக்க முழுக்க ஆண், நீ பிறக்கிறப ஆண் குழந்தையா தான் பிறந்த, நான் சாகுற வரைக்கும் உன்ன ஒரு பையனாக தான் பார்க்க விரும்புறேன்
உன் உடல் உள் உறுப்பில் இருந்து BLEEDING வருது, ஒரு பெண்ணோட உறுப்பில் இருந்து அவ்வளவுதான், அதனால, நீ உன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாத்திக்கோ, நீ ஒரு சாதாரண வாழ்க்கையை பத்தி நினைக்காதே என்று அந்த வயசிலேயே அம்மா எனக்கு புரிய வச்சுட்டாங்க, அதனால நான் என் நிலைமையை யோசிச்சேன், நம்ம வாழ்க்கைய எப்படியாது மாத்தணும் யோசிச்சேன், அந்த நேரத்தில் தான் என் மனசுல தோணுச்சு, இந்த ஊர்ல நம்மல எவ்வளவு கேலி கிண்டல் பண்றாங்க, இவங்க முன்னாடி நான் பெருசா சாதிச்சு இந்த ஊர்ல வந்து காட்டணும் அப்படின்னு நினைச்சேன், பள்ளியில் அதிகமாக EXTRA CURRICULAR ACTIVITIES கலந்து கொள்வன் இதனால எனக்கு நடிப்பு மேல ஆர்வம் வந்துச்சு அப்ப எனக்கு தெரியாது நம்மளால முடியுமா ஏனா நம்ம உடல் ஆரோக்கியம் அதுக்கு ஒத்துழைக்குமா தெரியாது, அப்புறம் நான் மருத்துவர்களை நேர்காணல் பண்ணும்போது எனக்குள்ள இருக்க நிறைய கேள்விகள் கேட்பேன், ஒரு சில கேள்விகளை அம்மாகிட்ட நம்மளால கேட்க முடியாதுல்ல, ஒரு சில விஷயங்கள் எல்லாம் நம்ம வெளிப்படையாக கேட்க முடியாதுல, அதனால மருத்துவர்களுடன் நடத்துற நேர்காணலில் என்னோட கேள்விகள கேட்டு தெரிந்து கொள்வேன், இந்த மாதிரி தான் ஒரு மருத்துவரிடம் என்ன பத்தி சொல்லும்போது அவர் நேரில் பார்க்க வர சொன்னாரு, அப்போது பரிசோதனை பண்ணும்போது தான் எனக்கு UTREUS இருக்குன்னு அதனாலதான் எனக்கு PERIODS வருதுன்னு தெரிஞ்சது, அதனால இத நாம எடுத்துட்டா எல்லாரும் மாதிரி நார்மல் ஆகிடலாம் நினைச்சேன், ஆனா நிறைய போராட்டங்கள எதிர்கொண்டன் ஆனா இது தான் என்ன வெளிபடுத்தி இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு மக்களுக்கு தெரியப்படுத்துசி
உங்க பள்ளி அல்லது கல்லூரி வாழ்க்கையில் இதனால் நீங்கள் சந்திக்க மிகவும் கசப்பான விஷயங்கள் ஏதாவது இருக்கா?
ஆறாம் வகுப்பிலிருந்து நான் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பிச்சேன் எட்டாம் வகுப்பு படிக்கிறப பள்ளியில் சொல்லிட்டாங்க, உங்க பையன் எங்க பள்ளியில் சேர்த்துக்க முடியாது, நீங்க வேற பள்ளியில் சேர்த்துக்கோங்கன்னு சொல்லிட்டாங்க, ஒன்பதாம் வகுப்பு எங்க அப்பா என்ன கூட்டிட்டு போய் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தார், ஆனா அந்த மன நிலைமையில என்னால படிக்க முடியல, அதனால எங்க அப்பா அடிப்படை கல்வியாவது பெற வேண்டுமென்று என்னை கூட்டிட்டு போய் ஒரு டுடோரியல் சென்டர் ல சேர்த்தாங்க அங்கே இருந்து ஆங்கில ஆசிரியர் மூலமா பிரச்சனைகள், பிரச்சினைகள அந்த வயசுல இருந்தே எதிர் கொண்டதால் அந்த வயசுல கிடைக்கிற சந்தோஷமே கிடைக்கல ஒரு சாமானிய மனுஷனா நண்பர்களோடு சேர்ந்து விளையாடுறது வெளியே போய்வருவது ஏதும் நடக்கல, அந்த வயசுல நான் எதிர்கொண்ட எல்லாமே கஷ்டம் மட்டும்தான், சென்னை வர வரலும், சொல்ற மாதிரி எதுவும் இல்லை, கேலி, கிண்டல், ABUSE மட்டும் தான், வாழ்க்கையிலேயே நரகமான, கொடுமையான நாட்கள்னா அது இது தான்.
என்றாவது இப்படி பிறந்திருக்கோனு உங்களையே வெறுத்து இருக்கீங்களா?
அந்த நேரத்துல நான் வருத்தப்பட்டு இருக்கேன், பள்ளியைவிட்டு நின்றப எல்லாரும் ஸ்கூல் போவதை பார்த்து எனக்கு கஷ்டமா இருக்கும், நான் போறப்ப கல்லை தூக்கி அடிப்பாங்க , தண்ணி எடுத்து ஊத்திட்டு ஒளிந்து கொள்வார்கள், இதை பார்க்கிறப்ப கடவுள் நம்ம ஏன் படைத்தார் என்று நினைப்பேன். அந்த நேரத்தில அம்மா என்கிட்ட ஒரு விஷயம் சொன்னாங்க, நீ ஏன் இப்படி நினைக்கிற, எல்லாம் மனிதர்களை காட்டிலும் நீ ரொம்ப special எப்படினா நீ ஒரு ஆணா பொறந்தா ஒரு ஆணோட உணர்வுகளும் வலிகளும் மட்டும்தான் தெரியும், ஒரு பெண்ணாக பிறந்தாள் பெண்ணோட உணர்வுகளும் வலிகளும் மட்டும்தான் தெரியும், ஆனால் உன்னால் ஒரு ஆணுடைய உணர்வுகளையும், வலிகளும் தெரிஞ்சிக்க முடியும், பெண்ணுடைய உணர்வுகளையும் வலிகளும் தெரிஞ்சிக்க முடியும். கடவுள் உன்னை எதற்கு படைத்துள்ளார், மற்றவர்கள் எல்லாம் சாதாரண வாழ்க்கை வாழ படைத்துள்ளார், உன்ன வேற எதுக்கோ படைத்திருக்கிறார், அப்படினு அம்மா சொன்னாங்க, அந்த வயசுல இத கேக்கறப்ப எனக்கும் நம்ம மற்றவர்களை விட தனித்துவமாக இருக்குஇருக்கோனு தெரிஞ்சுகிட்டேன், என்னை கிண்டல் செய்வோரிடம் நான் பெருமையா சொல்லி இருக்கேன் அம்மா சொன்னத. இந்த விஷயம் என்ன சமாதானப்படுத்த அம்மா சொன்ன வார்த்தைகளா இருந்தாலும் அதுதான் உண்மை.
இந்த கேள்வி கேட்கலாமானு தெரியல ஆனா கேட்கிறேன் எப்ப நீங்க ஆபரேஷன் பண்ணுனீங்க?
நான் சென்னையில சர்ஜரி பண்ணிகிட்டேன்
வெளிநாடுகள்ல ஆண்கள் செயற்கையா கர்ப்பப்பை வைத்து குழந்தை பெற்று இருக்காங்களே அந்த மாதிரி நீங்க என்னைக்காவது நினைச்சு இருக்கீங்களா?
என்னுடைய 38வது வயது வரலாம் நான் யாருன்னு எனக்கே தெரியாது, நான் பையனா, பொண்ணா, திருநம்பியா, திருநங்கையா, என்னுடைய உடலமைப்பு என்னவா இருக்கு, என்னுடைய உணர்ச்சிக்கும், உடலுக்கும் செயல்பாட்டிற்கும், சமூகத்திற்கும், என் மனதுக்குள் நடந்த போராட்டங்கள் இருக்குதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது, என்னுடைய உருவத்திற்கான வாழ்க்கையை வாழ்ந்தாகனும், என்னுடைய உணர்வுகளை அடக்கி ஆகணும், அதை எந்த இடத்திலுமே வெளிப்படுத்தக் கூடாது, இந்த சமூகம் அதை ஏற்காது, இந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும்போது நான் போய் பார்க்கிற மருத்துவருகே நான் யார் என்று தெரியாது, அமெரிக்காவுல என்ன மாதிரி இருக்கிற பதினெட்டு வயது பையன் ஒருத்தனுக்கு, பரிசோதனையில் அவனுக்கு கர்ப்பப்பை இருக்கிறது தெரிய வருது, இன்னும் கொஞ்ச நாள்ல கர்ப்பப்பையில் புற்றுநோய் வரப்போகுது என்று கண்டுபிடிக்கிறார்கள், மேலும் அவளோட ஆண்குறி செயலிழந்து வருகிறது, அதனால ஆணுறுப்பை எடுக்கணும், கர்ப்பப்பையில் புற்றுநோய் வர உள்ளதால் கர்ப்பப் பையையும் எடுத்து ஆகணும், அதனால வாழ்க்கையை எப்படி ஒரு பிடிமானத்தை கொண்டுவரலாம் யோசிக்கிறான், டோனர் மூலமா விந்தணுக்கள் வாங்கி தன்னோட ஆணுறுப்பு வழியா கர்ப்பப்பையில் செலுத்தி கர்ப்பமா இருக்காரு, சிசேரியன் மூலம் அந்த குழந்தையை வெளி எடுத்துடுவாங்க கர்ப்பப்பையை எடுத்துடுவாங்க, தேவைப்பட்டால் தன்னோட ஆணுறுப்பை எடுத்துட்டு பெண்ணுருபாக மாத்தி ஒரு இணையோட சந்தோஷமான வாழ்க்கையில் ஈடுபடலாம், தனது வாழ்க்கைக்காக ஒரு குழந்தை இருக்கிறது, அவன் குடும்பம் அவனை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு கல்வியைக் கொடுத்து இருக்கு, அந்த புரிதல் அந்த நாட்டுல இருக்கு, ஆனா நம்ப நாட்டுல நம்ம யார் என்று தீர்மானிக்க முடியாத நிலைமையில் இருக்கு ,நம்ம நாட்டுல இருக்க மருத்துவர்கள் கிட்ட போய் நம்ம ஒரு கேள்வி கேட்கிறேன், ஆனா அவங்க பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க, எடுத்துக்காட்டுக்கு நான் சர்ஜரி பண்ணும் போது ஒரு பெரிய சந்தேகம் இருந்துச்சு என்னோட SEMEN TUBE DAMAGE ஆக வாய்ப்புகள் இருந்தது, அதனால அது வேலை செய்யுமானு தெரியாது, இந்த நிபந்தனைகளோடு தான் எந்தப் பிரச்சினை வந்தாலும் சரின்னு நாங்க சர்ஜரி பண்ண தயாரானோம். அந்த நேரத்துல எனக்குள்ள என்ன கர்வம் இருந்துச்சுன்னா, நீ என்னதான் என்ன கிண்டல் பண்ணினாலும் நான் பெண்ணியம் அடைகிறேன், ஆண்மையும் வெளியே வருது, நான் கர்ப்பப்பையை எடுக்க போறேன், எனக்கு செமன் வெளியே வருது, இது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்குது அந்த சர்ஜரி முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த ரெண்டுமே இருக்காதுல்ல, அப்ப நான் யோசிக்கிறேன், என் வாழ்க்கை எப்படி இருக்கும், இந்த சந்தேகத்தை போக்க மருத்துவர் கிட்ட நான் கேட்கிறேன். அப்ப மருத்துவர் நீ ஏன் ரொம்ப யோசிக்கிற, அது ரொம்ப முக்கியமா அப்படினு கேட்டாரு, இப்படித்தான் நம்ம நாட்டுல இருக்கு,
எப்படி குழந்தை பெத்துக்கலாம், இதற்கு வாய்ப்பு இருக்கானு எனக்கு தெரியாது, என்ன நான் வெளிப்படுத்தினதுக்கு அப்புறம் தான் நிறைய விஷயங்கள் தெரியவந்தது, ஆனா அதுக்குள்ள காலம் கடந்தது. என்னோட FALLOBIAN TUBE, PROSTATE கூட தான் CONNECT ஆகி இருந்துச்சு நான் நினைத்திருந்தால் என்னோட ஆணுறுப்பை எடுத்துட்டு நான் ஒரு பெண்ணாக மாறி இருக்கலாம், ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமோ இல்லையோ நான் ஒரு ஆணுடன் பெண்ணாக வாழும் தகுதியோடு நான் வாழ்ந்து இருக்கலாம் அதற்கான நிலைமை இருந்தது ஆனால் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு இருக்கிறது நமக்கு தெரியல, நம்ம சமூகம் மட்டுமல்ல நமது நாட்டுல மருத்துவம் வளர்ச்சி இல்லை. என்னோட 13 வயசுல ஆரம்பிச்சா யூரின் பிரச்சனை, ஒரு 7 மாதங்களுக்கு முன்னாடி தான் அது கண்டுபிடிச்சி இருக்காங்க அதுக்கு ஒரு பெயர் கொடுத்து இருக்காங்க hypo contractive அப்படின்னு
HYPO CONTRACTIVE என்றால் என்ன?
HYPO CONTRACTIVE அப்படினா நம்ம BLADDER ல சிறுநீர் நிரம்புது, அப்படி நிரம்பும் போது ஒரு நரம்பு நம் மூளைக்கு செய்தி அனுப்பும், சிறுநீர் நிரம்பி இருக்கும், நீ வெளியே அனுப்பபுனு, அதனால நமக்கு யூரின் போகணும்னு ஒரு என்னம் வருது, நாம சிறுநீர் கழிக்க போய் நின்னா உடனே ஒரு பிரஷர் கொடுக்கும் அதனால சிறுநீர் முழுவதும் வெளியே தள்ளும், முடிந்தவுடன் குளோஸ் ஆகிவிடும், இதுல பிரச்சனை என்னன்னா சிறு நீர் நிரம்பும் அந்த உணர்வு இருக்கும், ஆனால் மூளைக்கு அந்த செய்தியை அனுப்ப முடியாது, அதனால சிறுநீர் போக ஓப்பனாகது, அதனால நாம ஒரு பிரஷர் கொடுத்து சிறுநீர் போகணும், இயற்கையாவே இது நடக்காதனால, ரொம்ப குறைவான சிறுநீர் தான் வெளியே போகும் அதனால முழுவதும் நிரம்பியிருக்க சிறுநீர் வெளியேற்ற முடியாது, ஆனால் முழுவதும் நிரம்பியிருக்க அந்த உணர்வு எனக்கு இருந்து கொண்டே இருக்கும், 500 ML URINE இருந்துச்சுன்னா என்னால 250 ML URINE தான் வெளியேற்ற முடியும் அதற்காக நான் 20 முதல் 30 நிமிடங்கள் செலவழித்து ஆகவேண்டும் சில நேரங்களில் ஒரு மணி நேரம் கூட ஆகலாம் இந்த கண்டுபிடிச்ச மருத்துவருக்கு இதற்கு என்ன மருந்து கொடுக்கலாம் தெரியல
ஒன்றுபட்ட சமுதாயம், LGBTQ , அரசாங்கம் இவர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
நமது சமூகத்துகிட்ட நான் வைக்கக்கூடிய ஒரே கோரிக்கைதான், சமூகம் மேல எனக்கு ஒரு பெரிய நம்பிக்கை இல்லை, சமூகம் யாருனா அது நாம்தான், சமூகத்தை நான் பெருசாவே எடுத்துக்கல, நம்ம அம்மா, அப்பா, நம்ம குடும்பம் நம்மை ஏத்துக்கிட்டாங்கனா சமூகத்தைப் பற்றிய கவலையே இல்லை, சமூகத்தை நான் எந்த இடத்திலும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்,லை நமக்கு முதல்ல நம்மளுடைய குடும்பம் நம்மை ஏத்துக்கணும், எங்க அம்மா என்ன ஏத்துக்கிட்டதால் தான் நான் ஒரு நடிகரா ஒரு தொகுப்பாளரா, ஒரு எழுத்தாளரா, ஒரு செய்தியாளரா, ஒரு மக்கள் பணியாளரா, ஒரு INTERSEX PERSONa தமிழ்நாட்டில் முதல் ஆளாக வெளியே வந்திருக்கிறேன், இத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டு, வேலை கிடைக்காத சூழ்நிலையிலும், உடல்ரீதியான பிரச்சினைகள் நிறைந்த சூழ்நிலைகளிலும், என்னால் எதிர்கொண்டு வாழ முடியுது என்றால் அதற்கு காரணம் இந்த சமூகம் அல்ல என்னுடைய அம்மா என்னுடைய குடும்பம் என்னை ஏற்றுக் கொண்டதால் தான், நான் சமூகத்தை பற்றி கவலைப்படுவதில்லை, சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஆகவேண்டும். அதற்காக நான் சொல்ல வருவது என்னவென்றால், எங்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராத வரையிலும் நீங்கள் எந்த இடத்திலும் எங்களை நோகடிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கும், எங்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது, எல்லாரும் ஒன்று தான், இந்த இடத்துல நீங்க எங்களை பாவம்னு பார்க்க வேண்டாம் நன்மையும் செய்ய வேண்டாம், நீங்க எங்களுக்கு செய்யற ஒரு பெரிய நன்மை எங்களை எங்களா வாழவிடுங்கள் எங்களுக்கான உரிமையை கொடுங்க நாங்க எங்க தேவையை சரி பண்ணிபோம்.
நம்ம LGBTQ அப்படின்னு பெயர் வைத்திருக்கிறோம் தவிர நிறைய இடத்தில இந்த பெயரிலேயே பிரிவினை இருக்கு LGBTIQA, LGBTQ+ , நான் ஏன் இந்த இடத்தில இதைக் குறிப்பிடறனா, நம்மை முழுமையாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கணும் நம்மை ஏன் வித்தியாசமாக பார்க்கிறார்கள மக்களுக்கு இதை பற்றின புரிதல் ஏற்படவில்லை ஆகையால் முதலில் LGBTIQA சமூகத்தில் இருக்கிற அனைவரும் ஒன்று சேரனும் ஒன்று சேர்ந்து இதை முழுமையாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் இதை நாம் செய்தால் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். நம்ம சமூகத்துல நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும், இங்க ஒவ்வொரு எழுத்துக்களும் தனித்தனியாக பிரிந்து கிடக்கிறது அது முதலில் ஒன்று சேர வேண்டும், நாம் தான் நமக்கான ஆறுதல் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே மக்களிடம் நாம் கொண்டு சேர்ந்து சேர்க்க முடியும், அப்படி செய்தால் மட்டுமே பல மாற்றங்கள் ஏற்படும்.
நான் அரசாங்கத்திடம் INTERSEX காக மட்டும் என் கோரிக்கைகளை முன் வைக்கவில்லை அனைவருக்கும் சேர்த்து தான் கோரிக்கை வைக்கிறேன், INTERSEX அப்படி என்றால் என்னவென்று மக்களுக்கு தெரியாது ஆகையால் அரசாங்கம் மக்களிடையே இப்படிப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்று உணர்த்த வேண்டும் மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும் நமக்கான அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், வேலை, இது மூன்றும் கொடுத்தால் நாம் யாரையும் சார்ந்து வாழ தேவையில்லை, தானாகவே அனைவருடைய வாழ்வும் மேன்மை அடையும், இது அனைத்தும் அடிப்படை உரிமைகள் அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமை பாகுபாடின்றி சமமாக அளித்தாலே அவர் அவர்களுடைய வாழ்க்கையை அவர் அவர்கள் வாழ்வார்கள்.
ரொம்ப நன்றி ரொம்ப அழகாக கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்தீர்கள் இறுதியாக என்னுடைய கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன். உங்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கிட்ட செய்திகள் மூலமாக, நான் இந்த சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் உங்கள் மூலமாக இந்த கோரிக்கைகளை வைக்கிறேன்.
INTERSEX மக்களும் இந்த சமூகத்தில் GAY, LESIBIAN, TRANSMEN,TRANSWOMEN போல INTERSEX மக்களும் இருக்கிறார்கள் என்று வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய கட்டாயம், கடமை உணர்வு நம் மேல் இருக்கிறது.