நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

ஆக நீங்கள்

ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

 

திருநங்கை, திருநம்பி என ஜிகினா வைத்து அழைத்தார்கள்.

 

மாற்றுப் பாலினத்தவர்கள் என்று நவீனமயப்படுத்தினார்கள்.

 

நூற்றுச் சொச்சம் நாட்களுக்கு முன்னர் தான் அந்தப் பிரபல நடிகரோ பால்நிலை கடந்தவர்கள் என்று ஜரிகை வேலை செய்தார்.

 

தெருவில் இறங்கி நடந்தால்

எத்தனையோ பெயர்கள், கட்டியங்கள்,

முதுகின் பின்னாலும்,

முகத்திற்கு முன்னும்…

 

பெண்ணாக நினைப்பவரை பெண் என்பதிலும்,

ஆணாக நினைப்பவரை ஆண் என்பதிலும்

என்னவாகி விடப் போகிறது உங்களுக்கு?

 

ஒற்றை எழுத்தை மாற்றுவதற்குள் தான் எத்தனை பலிபீடங்கள்…

 

நிதமும் உங்கள் வார்த்தைகளின் நிமித்தம் சொட்டிக் கொண்டிருக்கும் குருதிக்கும்

புதியதாய் பெயர் சூட்டி புனிதமடைந்து கொள்ளுங்கள்!

 

-அபாரா

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன