எல்லாருக்கும் இந்த பொம்பள பிள்ளைங்க ‘ஒடம்பு’ ஒரு காமப்பொருளா, புனிதப்பொருளா, வியாபாரப் பொருளா, கவர்ச்சிப் பொருளாதான் தெரியும். ஏன்னா, நாம வளர்க்கப்பட்ட விதமும் கட்டமைக்கப்பட்ட சூழலும் அப்படி தான் பாக்க சொல்லிக் குடுத்துருக்கு. அதுக்கு ஏ ஒடம்பும் விதிவிலக்கு அல்ல கிட்டத்தட்ட 5 வது படிக்கும் போதுல இருந்து இப்ப வரைக்கும் என் ஒடம்பு மேல இருக்க சுரண்டல என்னால தடுக்கவும் முடியல, மாத்தவும் முடியல.
சுரண்டலா அப்டி என்ன சுரண்டல் இருந்துரப்போகுதுனு உங்களுக்கு தோணலாம், கண்டிப்பா தோணும். இங்க ஒரு பொண்ணோட ஒடம்பு அவளோட நிறம், சைஸ் இதலான்வச்சுதான் அவ அழகானவளா இல்லயானு தீர்மானிக்கப்படுது. இதல்லான் தான் அழகுனு தீர்மானிக்குறது எதையோ எங்கயோ வியாபாரம் செய்ற ஒருத்தன். அவனுக்கு தேவை இதுலான் அழகுனு சொன்னா பாக்றவங்களும் நம்புவாங்க, பாதிக்கப்பட்டவங்களும் நம்புவாங்க. நம்ம ஒடம்பு மூலமா நடக்ற வியாபார சுரண்டல் இதுதான்.
அதென்ன பொண்ணுங்களுக்கு மட்டும்? பசங்களுக்கும் தான் சேவ் பண்ணசொல்லி விளம்பரம் பண்றாங்கனு நீங்க சொல்லலாம்! ஆனா தாடி வைக்றது கூட பேசன் லிஸ்ட்ல வந்துருச்சு. என்னோட கை,கால்ல முடி இருக்கறது அசிங்கமாதான் பார்க்கப்படுது. இதுதான் சுரண்டல்!
இங்க நான் பிரா போட்டாதான் கவர்ச்சி. ஏன்னா அத கவர்ச்சியா காட்டுனா தான் அந்த பிரா விக்கும். இங்க வெள்ளையா இருந்தாதான் அழகு. ஏன்னா அப்பதான் அவனோட products விக்கும். ஆக இங்க நடக்ற வியாபரம் எல்லாமே பொண்ணுங்க உடல சுத்திதான் கட்டமைக்கப்பட்ருக்கு. சாதி, கடவுள், கற்பு இது எல்லாமே பெண் உடம்ப புனிதப்படுத்தி அடிமையாக்கி வச்சுருக்குனு எனக்கு புரிஞ்சது. நான் என் உடம்ப ரசிக்க ஆரம்பிச்சேன். நிறைய தாழ்வுமனப்பான்மை இருந்துச்சு அதையெல்லாம் ஒடைச்சேன். என் ஒடம்ப மூடி புனிதப்படுத்தப்பட்றது எனக்கு பிடிக்கல. ஏன் எதுக்கு என் ஒடம்பு மட்டும் புனிதத்துக்குள்ள கட்டமைக்கப்பட்ருக்குனு நிறைய கேள்வி எழுந்துச்சு. நான் சின்னவயசுல இருந்து இப்போவரைக்கும் எதிர்கொண்ட abuse லான் ஞாபகம் வந்துச்சு. எதாவது பண்ணனும் அப்டினு தோணிட்டே இருந்துச்சு.
பெண்ணியம், உடலரசியல், சாதிய ஒடுக்குமுறை, lgbtq இதுபத்திலான் சொல்லிக்குடுக்காத ஆசிரியர்கள் மேல வருத்தம் ஏற்பட்டுச்சு. மூடிவைக்கப்பட்ட என் ஒடம்ப மூடிவைக்காம காட்டுனா என்ன பண்ணுவாங்கனு தோணுச்சு. நான் நெனைச்சதவிட அதிகப்படியான எதிர்ப்புகள், அதிகப்படியான abusive comments, 18+ meme content ah ஆக்கப்பட்டேன். எதுக்காக இப்டி பண்றிங்க, இதோட நோக்கம் என்னனு நிறைய கேள்விகள், நிறைய அறிவுரைகள்.
எல்லா சாதிக்காரர்களும் இந்த விசயத்துல ஒன்னா சேந்து abuse பண்ண ஆரம்பிச்டாங்க. ஆக ஒன்னு மட்டும் புரிஞ்சது, இங்க சாதிய ஒடுக்குமுறை பத்தி பேசுற அளவு யாரும் பெண் ஒடுக்குமுறை பத்தி பேசுறது இல்ல. இங்க நான் பண்ண நினைச்ச nudity normalizing பலபேருக்கு eliteஆ தெரிஞ்சது. இங்க பொண்ணுங்க அடிப்படை தேவையைத் தவிர என்ன பேசுனாலும் eliteதான். நமக்கு தேவையானத நாமதான் பேசனும்.
இதல்லான் தேவையானு கேட்குறவங்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன். இந்த ஆடைக்கு பின்னால இருக்குற அரசியல், அடக்குமுறை, ஆணாதிக்கம் இதபத்திலான் தெரிஞ்சுக்கோங்க. குளிருக்கும், மழைக்கும் பூச்சிகள்கிட்ட இருந்தும் தங்கள இலை, தழைகள வச்சும் மிருகத்தோட தோல் வச்சும் ஆதி மனிதர்கள் பாதுகாத்துக்கிட்டாங்க. அறிவாற்றல் ஏற்பட்ட பின்னாடி பருத்தி, பட்டுபூச்சிகள் மூலமா துணிகள் நெய்யத்தொடங்கி உடைகள் தான் மனிதனின் நாகரிகம்னு வியாபார முதலாளித்துவத்த அங்க தொடங்குனாங்க. ஆதிக்க எண்ணமும் அங்கதான் உதிக்கத்தொடங்குச்சு. அது சாதிய பாகுபாட்டுக்கும் வழிவகுத்து பின்னாடி ஆண் பெண் மீதான ஆதிக்கமாக்கி இன்றைக்கும் அதையே தான் follow பண்ணிட்டு இருக்காங்க. பல மேலைநாடுகள்ல ஆடை கலாச்சாரம் இல்லனு புரிஞ்சுக்கிட்டாலும் இங்க இன்னமும் ஆண், பெண் பேதம் மாறல. இன்னும் ஆண் மார்பகம் ஒரு அங்கமாகவும், பெண் மார்பகம் ஒரு கவர்ச்சிப் பொருளாகவும்தான் பார்க்கப்படுது. அதுலயும் இந்தியா போன்ற நாடுகள்ல சொல்லவே வேணாம். அது கவர்ச்சிப்பொருளாவே மையப்படுத்தப்படுவதோட விளைவுதான் ஆண் மேல்சட்டை இல்லாம போனாலும் கூட யாரும் குறை சொல்றது இல்ல. ஆனா ஒரு பொண்ணு உள்ளாடை அணியாம போனாலே அவ்ளோ கேவலமா பேசுவாங்க.
அதுமட்டுமில்லாம, ஆப்பிரக்காவின் ஹிம்பா பழங்குடிகள், அமேசானின் அவா பழங்குடிகள், அமெரிக்க இன பிரசீலியன் மக்கள் இப்படி பல பழங்குடிகள் ஆண்,பெண் பேதமில்லாம மேலாடையின்றி தான் வாழ்றாங்க. அதுக்காக அவங்க கலாச்சாரம் அழிஞ்சுருச்சானு கேட்டா இல்ல. ஆடைங்கறது கலாச்சாரம் இல்ல, அப்டி கலாச்சாரமா இருந்தா அது பெண்கள அடிமைப்படுத்துற ஒரு விசயம். நம்ம பார்வைல தான் எல்லாமே இருக்கு. ஒரு பொண்ணோட மார்பு கவர்ச்சிப்பொருளா இல்லாம ஒரு அங்கமா பார்க்கப்பட்றப்போ வன்புணர்வுகள் குறையும். நம்ம பார்வைகள் மாற இன்னும் பலநூறு ஆண்டுகள் தேவைப்படும். அதுவரைக்கும் நம்ம கத்துக்குவோம். கத்துக்குடுத்துட்டே இருப்போம்!

Senthilvelavan
11/06/2021 at 4:09 காலை
அருமயான கருத்துக்கள்
கார்த்திக்சேஷா
28/10/2022 at 1:36 காலை
கவர்ச்சி – சுரண்டல்
தாழ்வு மனப்பான்மை – வியாபாரம்
சாதிய ஏற்றத்தாழ்வுகள் பேசப்படும் அளவில் பெண்விடுதலை,பேசப்படுவது இல்லை!