மதுரை அனுப்பம்பட்டியில் ஐந்தாவது குழந்தையாக பிறந்த நட்ராஜ் சிறுவயதிலேயே தான் திருநங்கை என உணர்ந்தார்.
மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்த நட்ராஜ் திருநங்கை என்பதை அவரது குடும்பத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அனுபானபட்டியில் உள்ள பள்ளியில் சிறந்த மாணவரனா நட்ராஜ் உடலில் ஏற்பட்ட அந்த மாற்றங்களால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. 12 வது படிப்பை நிறைவு செய்து படிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டார்.
மீதி வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டுமே என்ன செய்வது என்று திகைத்து நின்ற அவருக்கு நடனம் என்ற கலை அவரை முழுதுமாக விழுங்க ஆரம்பித்தது.
நடனம் என்பது உணர்வு சார்ந்தது அந்த கலை அனைவருக்கும் வந்து விடாது.
நடனத்திற்கு நட்ராஜ் அவர்களை பிடித்திருந்தது போல ..
அதுனால் தான் என்னவோ அவளை புகழின் உச்சியில் கொண்டு நிறுத்தி உள்ளது.
நட்ராஜ் போலவே பாஸ்கருக்கும் செவ்வியல் நடனம் பிடிக்க திரைப்படங்களில் நாயகிகளை குருவாக ஏற்று கொண்டு அவர்கள் ஆடும் நடனம் போன்றே ஆட ஆரம்பித்தனர்.
அவர்கள் பேசும் மொழி கற்று தனது பேச்சு வழக்கை அவர்கள் போலவே மாற்றிக்கொண்டார்.
கோவில் விழாக்களில் நடனமாட ஆரம்பித்த நட்ராஜ் அனைவரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தார்.
இருந்தாலும் முறைப்படி நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு இருந்தது.
அப்பொழுது பரதக் கலையில்
உயர்ந்த இடத்தில் இருந்த கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்கவேண்டும் என முடிவு செய்த நட்ராஜும் பாஸ்கரும் தஞ்சாவூர் சென்று எங்களுக்கும் நடனம் கற்று தர வேண்டி நின்றோம் . அவர் செல்லும் இடமெல்லாம் பின் தொடரந்தும் ஒரு வருட காத்திருப்பின பின் அவர் எங்களுக்கு நடனம் கற்று தர சம்மதித்தார்.
அது எங்களுக்கு ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது போல் இருந்தது என நட்ராஜ் குறிப்பிடுகிறார்.
கிட்டத்தட்ட 15 வருடம் கிட்டப்பா பிள்ளையிடம் நடனம் கற்று கொண்ட நட்ராஜ்க்கு ”நர்த்தகி” என்ற பெயர் சூட்டியதும் கிட்டப்பா பிள்ளை தான்.
எனக்கு குடும்ப ஆதரவும் சமூக ஆதரவும் இல்லை .என்னை சுற்றி அவமானம் பின்தொடர்ந்தது கொண்டே இருந்தது.சாதித்தே ஆகவேண்டும் நான் பெறும் வெற்றியால் என் மீதுள்ள அவமானங்களும் அவமதிப்புகளும் உதிரச்செய்ய வேண்டும் என வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு நகர ஆரம்பித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் துணை பேராசிரியராக பணியாற்றிய நட்ராஜ் சென்னை நோக்கி நகர்ந்தார்.
எந்த ஒரு சமயத்திலும் நான் திருநங்கை என கூறி வாய்ப்பு பெற கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
எனது கஷ்டங்களை மறந்து கலையை காதலிக்க ஆரம்பித்து மிகவும் அதிகமாக உழைத்தோம்.
அதனால் வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்தது அந்த வெற்றிகள் எனக்கு நம்பிக்கை கொடுத்தன.
இறுதியில் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
எனது வாழ்வை பின் சென்று பார்த்தால் எனது பாதையில் பல கடினமான தடைகள் தாண்டி நகர்ந்து வந்திருப்பேன்.ஆனால் நான் ஒரு திருநங்கை என்பதால் தான் எனக்கு விருது கொடுத்துள்ளார்கள் என்கிற வசவு சொற்கள் எனக்கு கலை மீது கொண்ட காதலை அவமானபடுத்துவது போல் உள்ளது.ஒரு திருநங்கைக்கு பத்மஸ்ரீ விருது என்றே இங்கு பலரால் காட்சிப்படுத்த பட்டேன்.ஏன் எனது திறமையை யாரும் எண்ணிப்பார்க்க மாட்டார்களா என வலியோடு கேள்வி எழுப்புகிறார்.
வெள்ளியம்பலம் என்கின்ற நடன பள்ளியை நடத்தி வந்த நர்த்தகி அதனை அறக்கட்டளைகளாக மாற்றி எனது வெற்றி வாழ்வு பிற திருநங்கைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த கலையை பல திருநங்கைகளுக்கு சொல்லி கொடுத்து வருகிறோம்.அது அவர்களது வாழ்வை மாற்றும் என்று நம்புகிறார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியி வங புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ் அவர்களை பால்மணம் மின்னிதழ் பேராளுமை என்று அழைப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறது