திருநங்கை தீபிகாவுடன் நேர்காணல்

தீபிகா எப்படி இருக்கீங்க
நல்ல இருக்கேன்.
அணியம் அறக்கட்டளையின் மாதாந்திர மின்னிதழில் திண்ணை பக்கத்திற்கு தீபிகவுடன் நேர்காணல் அமைக்கின்றோம்.

தீபிகா வின் அறிமுகம்
நான் தீபிகா, பெங்களூரில் வசித்து வருகிறேன். மேலும் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார்.

தீபிகா ‌உங்கள் குழந்தை பருவத்தை பற்றி சில வார்த்தைகள்
சிறு வயது முதல் பெண்ணாகவே உணர்ந்து வந்தேன். 7த் ல ஒரு பையன் மேல crush வந்துது. அது சரியா தவறா என்று தெரியவில்லை. அப்போது எனக்குள் பெரிய குழப்பம் வந்தது என் மீது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எனது சொந்தகாரர் ஒருவர் என்னை பாலியல் தொந்தரவு செய்தார். நான் பெண் போல் இருக்கிறேன் நடந்து கொள்ளுகிரெனு சொன்னார். அப்போது நான் புரிந்து கொண்டேன்.
பின்னர் கல்லூரி காலங்களில் என்னை பற்றி புரிந்து கொண்டேன். இன்டர்நெட் சென்டர் சென்று என்னை போன்றவர்களுடன் பேசுவது, யாரும் வீட்டில் இல்லாத போது அம்மாவின் புடவையை அணிந்து கொள்ளுவது என்று செய்து கொண்டிருப்பேன். இவ்வாறு சென்றது.
எங்கள் வீட்டில் பண கஷ்டம் இருந்த காலம் அது. நான் 16 வயதில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். 18 வயது ஆகியது போல் போலி சான்றிதழ் வாங்கி கொண்டு வேலையில் சேர்ந்தேன். அங்கு எனக்கு சில நம்பர்கள் கிடைத்தார்கள். LGBT சமூக நண்பர்கள். அந்த இருவரும் எனக்கு காதல் செய்ய சிலன்செயலிகளை பற்றி கூறவும், வயசு காரணத்தில் நானும் அவர்கள் சொன்னதை செய்தேன்.
அப்போது என் வீட்டு தெருவில் ஒரு திருநங்கை வருவார்கள் அவரிடம் பேச எப்போதும் ஆசையாக இருக்கும். ஒரு முறை பேசவும் செய்தேன். அவர் என்னிடம் நீ ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்க நான் என் உணர்வுகளை பற்றி கூறினேன். சில நாட்களில் என் வீட்டில் என் நடவடிக்கைகள் கவனித்து என்னை வீட்டில் அடைத்து வைத்தனர். சிறிது காலத்தில் எனக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிவு செய்தனர். நான் இங்கே இருந்தால் என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன். ரெண்டு சட்டை பேன்ட் மற்றும் அம்மாவின் ரெண்டு புடவைகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். திருநங்கை சமுதாயத்திற்கு சென்றேன்.
முதலில் கை தட்டும் வேலையை செய்ய வேண்டியதாக இருந்தது. எனக்கு அது பழக்கம் இல்லை. ஆனாலும் செய்தேன். நல்ல வேலை பார்த்து கொண்டு இருந்த நான் இதை செய்வதை நினைத்து கவலை பட்டேன். ஒரு நாள் என்னை ஒருவர் கை தட்டி காசு கேட்கும் போது மோசமாக திட்டி விட்டார். எனக்கு அழுகை வந்தது. இவ்வாறு சில வருடங்கள் சென்றது. 5 வருடங் மிகவும் சிரமமாக இருந்தது. ஒரு நா நான் பெண்ணாக மாற சிகிச்சை செய்து கொள்ள போகிறேன் என்று கூறினேன். முதலில் வேண்டாம் என்று சொன்னார்கள். பிறகு நான் செய்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன். Counselling சென்றேன் என்னை பற்றி முழு விவரமும் கேட்டு கொண்டு எல்லாம் சரி என்ற பிறகு அனுமதி அளித்தார்கள். பிறகு சிகிச்சையும் முடிந்தது. சிகிச்சை முடிந்து என் அக்கா வீட்டில் இருந்தேன். அங்கே சில பிரச்சினைகள் ஆனதால் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டேன். 40 நாட்கள் முடிந்ததும் என்னை பிச்சை எடுக்க வற்புறுத்தினர். அப்போது இருவர் என்னை பலாத்காரம் செய்ய முயன்றனர். எனக்கு இரத்தம் வந்ததை பார்த்து பேசிகொண்டு சென்றனர். நான் சில நாட்களுக்கு அதை நினைத்தே அழுது கொண்டிருந்தேன்.
இங்கிருந்து போக வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அங்கிருந்து என் அக்கா வீட்டிற்க்கு சென்றேன். அங்கு சில நாட்கள் சென்றன. வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் வந்தது. பல இடங்களில் விண்ணப்பித்தேன். ஒரு இடத்தில் வேலையும் கிடைத்தது. நன்றாக தான் இருந்தது. அங்கு இருந்த போது இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. Solidity foundation என்ற LGBT அறக்கட்டளையில் அழைப்பு தந்திருந்தார். அக்கவுன்டன்த் வேலை தான் என்று சொன்னார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நம் சமுதாய மக்களுக்கு வேலை செய்ய போகிறோம் என்று மகிழ்ச்சி இருந்தது. இப்போதும் இதை தான் செய்து கொண்டு இருக்கிறேன்.

இப்போது பல LGBT மக்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை பற்றிய உங்கள் கருத்து?
நாம் கடந்து வந்த கடின பாதையில் ஒரு ஆண் நுழைந்து மகிழ்ச்சியை தந்துவிட்டு செல்லும் போது மனம் நிலைகுலைந்து அதிக துன்பத்திற்கு ஆளாகிறோம். ஆனால் அதையும் கடந்து வர வேண்டும். வாழ்வின் கஷ்டங்கள் அனைத்தையும் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது இதனால் வாழ்வை முடித்துக் கொள்ள கூடாது. சமுதாயத்தை எதிர்த்து மனதை தைரியமாக வைத்து கொள்ள வேண்டும்.

திருநங்கையாக இருந்து திருநங்கை சமூகத்திற்கு நீங்கள் கூற நினைக்கும் கருத்து.
இப்போது இருக்கும் சமூகத்தில் திறமைகளை வளர்த்துக் கொண்டு வாழ்வில் அனைவரும் சாதித்து வரும் தலைமுறையினருக்கு உதாரணமாய் இருக்க வேண்டும்

பொது சமூகத்திற்கு நீங்கள் கூறும் கருத்து
எங்களை போன்றவர்களின் முயற்சிகளை புறக்கணிக்காதீர்கள். எங்களால் இது முடியாது, இது செய்ய வராது, இதற்கு தான் லாயக்கு என்று வரையறை அமைக்காதீர்கள்.

நன்றி தீபிகா தொடர்ந்து உங்களுடைய பணிகள் சிறப்பாக அமைய பால்மணம் மின்னிதழ் சார்பாக வாழ்த்துக்கள்.

-தினேஷ் சோமசுந்தரம்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன