அலெக்ஸ் முருகபூபதி உடன் நேர்காணல்

 

தினேஷ்: ஹாய் அலெக்ஸ் எப்படி இருக்கீங்க?

அலெக்ஸ்: ஹாய் தினேஷ்,நான் நன்றாக இருக்கிறேன்.நீங்க எப்படி இருக்கீங்க?

தினேஷ்: நான் ரொம்ப நன்றாக இருக்கிறேன். இன்றைக்கு அணியம் என்கின்ற அமைப்பில் பால்மனம் என்கின்ற மாதாந்திர மின்னிதழ், அதாவது e-magazine. இதை எங்கள் அமைப்பு சார்பில் தாங்கள் மாதந்தோறும் வெளியிடுவோம். உங்களை நேர்காணல் எடுத்து அதை இந்த மாத நாளிதழில் வெளியிடலாம் என எங்கள் அமைப்பு விரும்புகிறது எனவே எங்கள் அமைப்பு சார்பாக நான் உங்களை நேர்காணல் எடுக்க வந்துள்ளேன். நான் நேர்காணல் எடுக்க வந்துள்ள தலைப்பு -திண்ணை. திண்ணை என்றால் நம்ம சங்கத்திற்காக சாதித்துக் கொண்டு இருப்பவர்களை நேர்காணல் எடுத்து அதை மின்னிதழில் வெளியிடுவோம். அதுமட்டுமில்லாமல் அதை ஒரு புத்தகமாகவும் தயாரித்து ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் வெளியிடுவோம்.

அலெக்ஸ்: ரொம்ப நன்றி தினேஷ். என்னையும் இதில் கருத்தில் கொண்டதற்கு மிகவும் நன்றி. உங்கள் அணியம் அமைப்பு வெற்றி நடை போட வேண்டும் என்பதற்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் அணியம் அமைப்பில் வேலை செய்கின்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களை நினைப்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

தினேஷ்: மிகவும் நன்றி. எனக்கு இன்றளவும் ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கிறது. அது என்னவென்றால்,என்னுடைய முதல் நேர்காணல் ஓரினம் அமைப்புடைய பிறந்தநாள் அன்று நடைபெற்றது. அப்போது நான் உங்களுடன் பேசி இருக்கிறேன்.

அலெக்ஸ்: ஆம் எனக்கும் அந்த நாள் ஞாபகத்தில் இருக்கிறது.

தினேஷ்: அந்த நாளில் இருந்து இன்று வரைக்கும் நம் இரண்டு பேருக்குமான தொடர்பு மிகவும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது அதை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அலெக்ஸ்: எனக்கும் சந்தோஷமாக உள்ளது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நம் இரண்டு பேரின் எண்ணங்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நிறைய தடவை ஒத்து போய் ஒத்து போய் இருக்கிறது. நம்முடைய பேச்சு வார்த்தைகள் அதிக அளவு ஒரே மாதிரியாய் தான் உள்ளது. இந்த அமைப்பில் உள்ள மனிதர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் கூறும் கருத்துக்கள் அதிக அளவு ஒரே மாதிரியாக தான் உள்ளது. எனக்கு அதுதான் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. முதன்முதலில் மெச்சூரிட்டி எனப்படுவது வயதை பொருத்தது அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். ஏனென்றால் அதைப் பற்றி என்னிடம் ஒரு தனிப்பட்ட கருத்து உள்ளது. அது என்னவென்றால் ஒருவருக்கு வயது குறைவாக இருந்தால், அவர்கள் அதிகமாகவும் சிந்தனை செய்வார்கள், அதே சமயத்தில் சீக்கிரமாகவும் சிந்தனையை செய்வார்கள். ஆனால் உங்களுடைய சிந்தனை என்பது ரொம்ப மெச்சூர்டு டாக இருந்தது. உங்க கூட எனக்கு தொடர்பு ரொம்ப சுலபமாக இருந்தது, தினேஷ்.

தினேஷ்: கண்டிப்பாக நானும் அப்படியே சிந்தித்து இருக்கிறேன். ரொம்ப சிறுவயதாக இருந்தால் அவர்கள் குழந்தைத்தனமாக குறும்புத்தனமாக இருப்பார்கள். மெச்சூர்டு சிந்தனைகள் இருக்காது. நான் இப்ப புரிஞ்சுகிட்டேன். வயதிற்கும் மெச்சூரிட்டி க்கும் சம்பந்தம் இல்லை என்று. இப்ப கூட நம்மிடத்தில் உள்ள சிந்தனைகள் ஒத்துப்போகிறது. எனக்கு உங்களிடம் நிறைய பேச வேண்டும் எனவே நாம் நேர்காணலுக்கு செல்லலாம்.

அலெக்ஸ் :கண்டிப்பாக செல்லலாம்.

தினேஷ்: இந்த நேர்காணலில் சில கேள்விகள் இருக்கும். அவை அனைத்தும் உங்கள் சுயவிவரங்கள் பற்றியதாகத்தான் இருக்கும். அதாவது நீங்கள் எப்படி வாழ்க்கையை கடந்து வந்தீர்கள். எந்த மாதிரியான சூழலை நீங்கள் சந்தித்து வந்துள்ளீர்கள் என அது சம்பந்தமாகத் தான் கேள்விகள் இருக்கும். முதல் முதலில் நம் நாளிதழின் வாசகர்களுக்கு நீங்கள் உங்களை தெரியப்படுத்தி கொள்ளலாம்.
அலெக்ஸ் என்பவர் யார் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.lgbtq அமைப்பதற்காக அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நீங்கள் தெரிவுபடுத்திக் கொள்ளலாம்.

அலெக்ஸ்: lgbtq அமைப்பிற்கு நீங்கள் தான் அதிகமாக வேலை செய்து வருகிறீர்கள் என் உடன் ஒப்பிடும் போது.

தினேஷ்: இல்லை அப்படி மட்டும் சொல்லிவிட முடியாது. lgbtq என்பது ஓரினம் அமைப்பின் ஒரு பகுதி. இன்றைக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ராம்கி ஐயா. அதை நான் மறக்கவே மாட்டேன் .சாகும்வரை மறக்கவே மாட்டேன்.

அலெக்ஸ்: சரி, சந்தோசம்.என்னைப்பற்றி நான் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். என் பெயர் அலெக்ஸ் நான் பிறந்து வளர்ந்தது, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயர் என்னும் இடத்தில். எனக்கு போர்ட் பிளேயர் எனப்படுவது சின்னத் தீவு ஒன்று இல்லை. போர்ட் பிளேர் எனப்படுவது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இருக்கும் ஒரு இடம். ஏனென்றால் என் பக்கத்து வீட்டில் தெலுங்கு மொழி பேசுவார்கள் மேல் வீட்டில் மலையாள மொழி பேசுவார்கள் அதேபோன்று கன்னடா ஓடியா மொழியும் பேசுவார்கள் பெங்காலி பேசுவார்கள் பெங்காலி மக்கள் கொஞ்சம் அதிகமாகவே வசிப்பார்கள் நாங்கள் அனைவரும் ஹிந்தி மொழி தான் பேசுவோம் எனவே எனக்கு ஆரம்ப கட்டத்தில் தமிழ் மொழி கற்றுக் கொண்டு பேசுவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஏனெனில் வீட்டில் நான் எங்க என் அப்பா அம்மாவுடன் பேசுவதற்கு அதிக நேரம் இருக்காது பள்ளிக்கூடங்களில் தான் அதிக நேரம் செலவிடுவேன் அதன்பின் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவேன் நான் உண்மையை சொல்கிறேன் எனக்கு பத்து வயது ஆகும் வரை என் வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருந்தேன்.அந்த வயதில் யாரும் தன்னுடைய பாலினத்தை என்னவென்று தெரிந்து கொள்ள முடியாத மாதிரி தான் இருப்பார்கள். எனக்கும் அதே மாதிரியான நிலைமை தான். நான் அப்போது குழந்தைப்பருவம் எனும் மழலைப் பருவத்தை அனுபவித்துக்கொண்டிருந்தேன். 10 வயது வரை குழந்தைகள் இடத்தில் எந்தவித பாலின வேறுபாடும் அறிய முடியாது. பெண் பிள்ளைகள் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார்கள் ஆண்பிள்ளைகள் ஓரிடத்தில் அமர்ந்து இருப்பார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை என்னுள் எந்தவிதமான மாற்றத்தையும் நான் பார்க்கவில்லை உணரவில்லை. என்னுடன் படிக்கும் சக மாணவர்களும் என்னை பாலின வேறுபாட்டில் பார்த்தது கிடையாது சக மாணவிகளும் என்னை பாலின வேறுபாட்டில் பார்த்தது கிடையாது.நானும் என்னுடன் படிக்கும் மாணவிகளுடன் நேரம் செலவிடுவென்
மாணவர்களுடன் பேசுவேன்.ஆனால்,அந்த குறிப்பிட்ட சமயத்தில், மாணவர்கள் அனைவரும் நான் பேசும் குரலில் வரும் மாற்றதையோ,விதத்தையோ, நளினத்த யோ ஒரு குற்றமாக யாரும் பார்க்கவில்லை. அதை ரசிப்பார்கள் என் அப்பா அம்மா கூட அதை ரசித்து பார்த்திருக்கிறார்கள் என் குரலில் ஒரு மாற்றத்தையும் நளினத்தையும் அதன் விதத்தையும் அதற்கு ஏற்ற எனது உடல் மாற்றத்தையும் அவர்கள் சந்தோஷத்துடன் ரசித்து பார்த்தார்கள் ஒரு குழந்தை பருவ பார்வையுடன். நான் சிறுவயதில் இருக்கும் போது அதை நான் சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டு இருந்திருக்கிறேன் என்பதில் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்வேன். ஐந்தாம் வகுப்பு வரை என் வாழ்க்கை நன்றாக சென்றது ஆறாம் வகுப்பில் நான் பயிலும் போது கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் மாற ஆரம்பித்தது ஆண்கள் என்றால் இப்படித்தான் பெண்கள் என்றால் இப்படித்தான் என்ற வரைமுறை இருந்தது. அந்தக் குறுகிய வட்டத்திற்குள் எல்லாரிடமும் இணக்கமாய் செல்வது எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது இன்று கூட நான் சொல்கிறேன் எனக்கு ஆண்களை பார்க்கும் போது ஒருவித ஈர்ப்பு வரத்தான் செய்யும் அது எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்தது.அப்போது நான் விளையாட்டாக கூட எடுத்திருக்கலாம் . அப்போது சில சமயத்தில் நாடகத்தில் என்னை நடிக்க சொன்னால் நான் மனைவியாக கூட நடிப்பேன். என்னிடம் படிக்கும் சக மாணவிகளிடம்,நீ கணவனாக இரு,நான் உனக்கு மனைவியாக இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லி விளையாடி இருக்கிறேன். ஆனா அப்ப எனக்கு அதை ஏன் என்று தெரியல. நான் ஏன் மனைவி மாதிரி சொல்லி விளையாடி இருக்கிறேன் என்பது பற்றி நான் யோசித்துப் பார்த்தேன் அப்போது தான் எனக்கு தெரிந்தது என் உள்மனதில் ஆண்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று. சிறுவயதில் நான் அதிக பெண் பாலினமாக உணர்வேன். பாடகி சித்ராவின் பாட்டுகள் பாடிப்பாடி வளர்ந்தேன். அவர்களின் குரலை நான் நிறைய அனுபவித்து கேட்டு கேட்டு பாடி சந்தோஷப்பட்டு இருக்கிறேன் அதுமட்டுமில்லாமல் பாடகி ஜானகி லதா மங்கேஷ்கர் அவர்களுடைய பாட்டுகளையும் நான் ரசித்து ரசித்து கேட்டு பாடி இருக்கிறேன் எனக்கு அவர்களின் பாடல்கள் பாடுவது மிகவும் பிடிக்கும். ஆண்கள் பாடும் பாட்டு களை நான் பாட விரும்ப மாட்டேன். அதே மாதிரிதான் எனக்கு ஒரு பெண்ணிடம் இருக்கும் ஆசைகள் அனைத்தும் வந்திருக்கின்றது ஆண்கள் மீது ஒரு ஈர்ப்பு வந்து இருக்கின்றது.அந்த குறிப்பிட்ட சமயத்தில், அதாவது 1990ஆம் ஆண்டுகளில்,எனக்கு நடிகர் சல்மான்கானை எல்லாம் பிடிக்கும். நான் பிறந்தது 1980ஆம் ஆண்டு. 1990 ஆம் ஆண்டுகளில் பள்ளி ஆரம்பிக்கும் நேரங்களில் எனக்கு நடிகர் அமீர்கானை மிகவும் பிடிக்கும். சமயத்தில் ஒரு படம் வெளிவந்தது அதன் பெயர் ரங்கீலா. அப்போது என்னுடன் படிக்கும் சக மாணவர்கள் அந்த படத்தை புகழ்ந்து தள்ளுவார்கள்.அதில் ????? நடித்திருப்பார். அதுவும் அவர் பிகினி உடையில் நடித்திருப்பார் மேலும் அது ஒரு புரட்சிகரமான படம் ஏனெனில் அப்படி ஒரு பிகினி உடையை பிடித்துக் கொண்டு எந்தவித பெண் நடிகையும் அந்த காலத்தில் நடித்தது கிடையாது எனக்கு அந்த நடிகையை மிகவும் பிடிக்கும் அவர்களுடைய உருவ அமைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆனால் அந்தப் படத்தில் வரும் ஜாக்கி ஷெராப் பை பார்க்கும் போதுதான் எனக்கு ஈர்ப்பு இன்னமும் அதிகமானது ஏனெனில் அவர் அப்போது பிகினி உடையில் இருந்தார் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அப்போது கூட அது மாதிரி விளம்பரத்தில் வந்துள்ளது.உதாரணத்துக்கு இந்த உள்ளாடை விளம்பரம். அந்த உள்ளாடை விளம்பரம் வெளிவரும் நாளிதழ்களில் அந்த குறிப்பிட்ட விளம்பரம் பகுதியை மட்டும் நான் வெட்டி எடுத்துக்கொண்டு வைத்துக்கொள்வேன் எனக்கு மட்டும்தான் வைத்துக் கொள்வேன் எனக்கு அது ஒரு உருவ அமைப்பை சந்தோசமாக அனுபவிக்க தோன்றும் அதேசமயத்தில் அப்போது என்னுடன் படிக்கும் சக மாணவர்களும் porn வீடியோக்களை என்னிடம் காண்பிப்பார்கள் அப்போது கூட எனக்கு அதிக ஈர்ப்பு வந்தது இல்லை எனக்கு அந்த வீடியோக்களில் நடிக்கும் ஆணை பார்க்கும் போது தான் அதிக ஈர்ப்பு வந்தது. இந்த வீடியோக்களில் வரும் பெண்களை நான் கண்டு கொள்ளவே இல்லை அந்த வீடியோவை என்னிடம் காண்பிக்கும் மாணவர்கள் என்னிடம் சொல்வார்கள் அந்தப் பெண்ணை ரசித்து சில வார்த்தைகள். நான் அதை எல்லாம் பார்த்தும் பார்க்காத மாதிரி சரி சரி என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்று சென்று விடுவேன் எனக்கு அதையெல்லாம் உணரும்போது ஒரு விதமான மாற்றமாக தான் தெரிந்தது அதனால் பள்ளிகளில் நிறைய மாணவர்கள் என்னை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை என்னுடன் படிக்கும் சக மாணவர்கள் என்னை அதிகமாக நிறைய முறை கிண்டல் நான் எப்படி பேசுவேன் என்பதை அறிந்துகொண்டு என் பக்கத்தில் அமர அவர்கள் கூச்சப்படுவார்கள். ஆனால் நான் என் படிப்பு விஷயத்தில் நான் யாரிடமும் என்னை விட்டுக் கொடுத்துப் போக வில்லை. அந்த சமயத்தில் எனக்கு என் படிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது ஆனால் என் நளினத்தை என்னால்,மாற்றிக் கொள்ள முடியாது. என்னுடைய ஆசிரியர்கள் எல்லாம் என்னை கிண்டல் செய்வார்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று. என்னுடைய உடற்பயிற்சி ஆசிரியர் என்னை நடக்க சொல்லி அதை அத்தனை மாணவர்களிடமும் காண்பித்து என்னை கிண்டல் செய்வார். இது ஒரு வன்மமாக தான் நான் நினைக்கிறேன் நான் அந்த சமயத்தில் ஒரு சிறு குழந்தையாக தான் இருந்தேன் ஒரு சிறு குழந்தைக்கு எப்படி தெரியும் எப்படி நடக்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று மேலும் என்னை பாலியல் ரீதியாக என்னுடன் படிக்கும் மாணவர்கள் துன்புறுத்தி இருக்கிறார்கள். அது எப்படி என்றால் என் ஆடையெல்லாம் கழட்ட சொல்லி சில சமயங்களில் அதை கழட்டவும் வைத்து என் உள்ளாடையும் கழட்டி நான் ஆணா பெண்ணா என்பதை அனைவரிடமும் காண்பித்து நிரூபிக்க முயற்சித்தார்கள். எனக்கு அது மிகவும் அவமானமாகவும் அசிங்கமாகவும் இருந்தது.மேலும் எனது உள்ளாடையை திறந்து பார்த்து எனக்கு ஆண் உறுப்பு இல்லை. எனக்கு பெண்ணுறுப்பு தான் (vagina) உள்ளது என எல்லோரிடமும் காண்பித்து என்னை அசிங்கப் படுத்தினார்கள் அந்த நிகழ்வு நடந்த நாளில் நான் எனது வகுப்பறையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தேன். ஆனால் உன் ஒரே ஒரு கேள்வி எனது மனதில் நின்று கொண்டே இருந்தது. நான் எதற்காக அழ வேண்டும்? என்னை நான் கட்டுப் படுத்திக் கொள்வதற்காகவா? இல்லை எனக்கு பெண்ணுறுப்பு இருக்கிறது என்பதற்காகவா? எனக்கு இப்போது 37 வயது ஆகிறது ஆனால் இப்போதும் நான் அதை மறக்க முடியவில்லை ஏனெனில் அந்த நிகழ்வை எனக்கு செய்தவர்கள், அதை ஆழமாக என் மனதில் பதிய வைத்து விட்டார்கள். இப்போது கூட நான் என் பள்ளி குழுவில் இருக்கிறேன் ஆனால் அந்த குழுவில் இருப்பதற்கு எனக்கு துளிகூட விருப்பமும் இல்லை சந்தோசமும் இல்லை ஏனெனில் அந்தப் பள்ளி குழுவில் இருக்கும் மற்ற மாணவர்களை நான் திட்டி விட்டேன் ஏனெனில் அவர்களால் தான் என் வாழ்க்கை இந்த அளவுக்கு வீணாகிவிட்டது நிறைய இன்னல்களை அவர்களால்தான் நான் சந்தித்தேன் என்பதற்காக. ஆனால் அதை எல்லாம் செய்த பிறகு எனக்கு கிடைத்த ஒரு நல்ல விஷயம் சமாதானம். ஏனெனில் அந்த அளவிற்கு எனக்கு இன்னல்களை தந்து அதை என் மனதில் நன்றாக சேகரித்து வைத்து விட்டார்கள். ஆனால் எது எப்படியோ அந்தப் பள்ளிப் பருவத்தை நான் கடந்து வந்துவிட்டேன் என்பது எனக்கு மிகவும் இன்பகரமான விஷயம். நான் பள்ளிகளில் எனது படிப்பில் நான் எந்த குறையும் வைத்ததில்லை எனவே எனக்கு ஒரு நல்ல கல்லூரி தான் கிடைத்தது நான் படித்தது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி. ஆனால் நான் அங்கு நடந்த ஒரு உண்மையான விஷயத்தை சொல்ல வேண்டும். அந்த கல்லூரியில் உள்ள மாணவர்கள் அனைவரும் மாணிக்கக் கற்கள் என்று சொல்லலாம் ஏனெனில் எந்த ஒரு மாணவரும் என்னை என் பாலின வேறுபாடு கொண்டு முடிவு செய்யவில்லை. நானும் என்னை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அங்கு மொழி தடுமாற்றம் எனக்கு இருந்தது ஆனால் அந்த கல்லூரியில் தான் நான் தமிழ் உச்சரிப்பு எல்லாம் நன்றாக கற்றுக் கொண்டேன் ஏனெனில் அங்கு மலையாளிகளும் வந்து கல்வி பயின்றார்கள் அவர்களுடன் பேசும்போது எனக்கு தமிழ் உச்சரிப்பை மிகவும் சுலபமாக கற்றுக் கொள்ள முடிந்தது.மலையாளிகள் அனைவரும் தமிழ் மொழியை நன்றாக உச்சரிக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அந்தக் கல்லூரியில் அனைவரும் என்னை நன்றாக படிக்கின்றவனாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அங்கு இருக்கும் மாணவர்கள் பேசும்பொழுது பெண்மை தன்மையும் அவர்களது பேசும் விதத்தில் இருக்கும் அந்த மாணவர்கள் நன்றான உடற்கட்டை வைத்து இருந்தாலும் அவர்களது பேச்சில் செல்வது பெண்மை தன்மை இருக்கும் அங்கிருக்கும் மாணவிகளிடம் கூட அதை நான் கண்டேன் அது எனக்கு ஒரு சந்தோஷத்தையும் தந்தது. ஆனால் அதை நான் நிச்சயமாக ஆண்மை பெண்மை என்று பிரிக்கவில்லை. ஆனால் அவர்கள் பேசும் விதம் மிகவும் மென்மையாக இருந்தது.ரொம்ப அழகாகவும் இருந்தது ஆனால் நான் அதை மற்ற ஆண்களுடன் ஒப்பிடும்போது சிறிதளவும் ஒத்துப்போகவில்லை ஏனெனில் சில ஆண்களின் குரல் மிகவும் முரடாக இருக்கும். அந்த மாதிரி குரலில் நான் மிகவும் பயந்து விடுவேன்என்னுடைய கல்லூரி நாட்களில் நான் தனிமையாக உணர்ந்தேன் மாணவர்களால் அல்ல.. அந்தக் கல்லூரி காரணமாகவும் அல்ல. அந்தத் தனிமையில் எனக்கும் நடக்கும் மாற்றங்களை நான் உணர்ந்தேன் சில சமயங்களில் மன அழுத்தமும் பெற்றேன் அதனால் மிகவும் கஷ்டமும் பட்டேன் நான் அப்போதுதான் lgbtq அமைப்பைப் பற்றி தெரிந்து கொண்டேன். ஓரினச்சேர்க்கை என்று ஒன்று உள்ளது என்பது எனக்கு கல்லூரியில் தான் தெரிந்தது. ஏனெனில் நான் பள்ளிப்பருவத்தில் என்னை நானே அசிங்கமாக பார்த்துக்கொண்டிருந்தேன் நான் ஒரு தனி ஜந்து மாதிரி தான் என்னை நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன் தாழ்மையான எண்ணங்களை நினைத்து பார்க்கும் போது எனக்கே வெட்கமாக உள்ளது. ஏனெனில் அப்போது நான் இருந்த சமுதாயத்தில் அவர்கள் அனைவரும் என்னை ஒரு குறுகிய வட்டத்துள் தள்ளினார்கள். நான் அப்போது ஒரு முரடான சமுதாயத்தில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் கல்லூரிகளில் நான் மன அழுத்தத்தில் இருந்தால் எனது படிப்பும் சிலது பின்வாங்கியது ஆனால் எனக்கு திறமை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நான் ஒரு வழியாக B.Tech முடித்தேன். ஆனால் அதுக்கப்புறம் எனக்கு வேலையும் இல்லாமல் இருந்தேன் ஆனால் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது நான் இதற்கு மேல் கீழ் இறங்கி போக வேண்டுமா என்று. ஏனெனில் வேலையும் இல்லை என்றால் நம்மால்,வாழ்க்கையை நகர்த்த முடியாது. நாம் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் அல்லவா யார் சொல்லிக் கொண்டு போகட்டும் ஆனால் அதற்காக நாம் அடுத்த கட்டத்தை சந்திக்காமல் இருக்கனுமா என்ன எனவே m-tech நுழைவுத்தேர்வு எழுதினேன் அதில் தேர்ச்சி பெற்றேன் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரி கிண்டியில் நான் m-tech படிப்பை முடித்தேன். மேலும் எனக்கு கிடைத்த கல்லூரியை ஒரு முதன்மை கல்லூரி நான் எம்டெக் பயின்ற கல்லூரியும் ஒரு முதன்மை கல்லூரி நான் பி டெக் பயின்ற கல்லூரியும் ஒரு முதன்மை கல்லூரி.அதற்கு அப்புறம் தான் எனக்கு புரிந்தது நான் முட்டாள் இல்லை சமுதாயம்தான் என்னை எனக்கு முட்டாளாக காண்பித்து இருக்கிறது என்று. அதற்கு அப்புறம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் அதன்பின் ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்தேன் வேலை செய்ய ஆரம்பித்தேன் இன்றுடன் 18 வருடங்கள் ஆகிறது ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ஏனெனில் எனக்கு பொருளாதார ரீதியான சுதந்திரம் கிடைத்துள்ளது அது உண்மையில் ஒரு மிகப்பெரிய விஷயம் தான் இனி வருகின்ற ஓரினச்சேர்க்கை சமுதாயத்திற்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் ஒரு சில முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் முதலில் உங்களை நீங்கள் வலிமையாக்கி கொள்ளுங்கள் அதற்குப் பின் உங்கள் தாய் தந்தை பேச்சைக் கேட்க வேண்டும் என்பது அவசியமில்லை ஏனெனில் நீங்கள் எப்போது மற்றவர்களை நம்பி உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள் அப்போது நீங்கள் உங்களுக்கு சொந்தமான முடிவை உங்களால் எடுக்க முடியாது முடிவு எடுப்பதற்கும் தயக்கம் ஆனால் நாங்கள் ஒரு சில சமயங்களில் நீங்கள் வெளியேறும்போது நாங்கள் உதவுவதற்கும் இருக்கிறோம். ஆனால் நாங்கள் உங்கள் கூடவே இருக்க முடியாது எனவே நீங்கள் உங்களை வலிமையாக்கி கொள்ளுங்கள் உங்களை பொருளாதார ரீதியாக சுதந்திர மனிதனாக மாற்றிக் கொள்ளுங்கள் அப்புறம் என்ன உலகம் எட்டிக் கொண்டு போய்விடும். நான் உலகம் என்று யாரை குறிப்பிடுகிறேன் என்றால் சமுதாயத்தில் இருக்கும் ஒரு சில விஷயங்களை தான் மொத்த உலகையும் குறையாகச் சொல்லவில்லை படிக்காமல் மட்டும் வராதீர்கள் கையில் ஒரு பட்டப்படிப்பு வைத்துக்கொண்டு கூட வாருங்கள் நாங்கள் உதவுகிறோம் வேலையை கூட பின்பு பார்த்துக் கொள்ளலாம். நான் சமீபத்தில் கூட ஜெய்பீம் என்ற படத்தை பார்த்தேன் நான் அதை பார்த்த பின்பு ஒரு சில நிமிடங்கள் கண்ணீர் விட்டுவிட்டேன்.அதே மாதிரி சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திலும் கல்வியின் முக்கியத்துவத்தை கூறியிருப்பார்கள். அதைத்தான் நான் நமது ஓரினச்சேர்க்கை சமூகத்திற்கும் சொல்ல விரும்புகிறேன் அனைவரும் கல்வி பயிலுங்கள் இல்லையெனில் ஒரு உருவாக்கும் திறன் உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட உபயோகத்தில் இருக்கக்கூடிய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் உங்கள் சுதந்திரம் உங்களுக்கு மிகவும் முக்கியம் நான் உங்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு சில முயற்சிகளை எடுக்க முடியும் ஆனால் அந்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு நீங்கள் தான் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் எங்களால் உங்களுக்கு ஒரு தாய் தந்தை போன்று உறுதுணையாக இருக்க முடியாது எனில் எங்கள் தாய் தந்தையே எங்களை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.நீங்கள் உங்களுக்குத் தெரிந்த தனித்திறன் உருவாக்கும் திறன் மற்றும் நீங்கள் பயின்ற கல்வி கொண்டுதான் உங்கள் வாழ்க்கையில் பிழைக்க முடியும்.

தினேஷ்: அலெக்ஸ் நீங்கள் ஓரினம் அமைப்பில் தொண்டராக வேலை செய்கிறீர்களா?

அலெக்ஸ்: நான் ஓரினம் அமைப்பின் வேலை செய்வதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். ஏனெனில் நான் ஆரம்ப கால கட்டத்தில் என்னை பற்றி அறிந்து கொள்ள உதவியது ஓரினம் அமைப்புத்தான். அதில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் நான் ஓரினம் அமைப்பின் ஒரு முக்கிய தொண்டர். நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் அணியம் அமைப்பின் கூட வேலை செய்வேன்.

தினேஷ்: நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று உங்கள் குடும்பத்திற்கு தெரிந்த பிறகு உங்களுக்கு ஏதேனும் மனரீதியாக உடல் ரீதியாக தொந்தரவுகள் நடந்து இருக்கிறதா? நீங்கள் நீங்கள் உங்களை ஒரு ஓரின சேர்க்கையாளராக அடையாளப்படுத்தி வெளிவரும்போது உங்கள் குடும்பத்தினர் உங்களை ஏற்றுக் கொண்டார்களா?

அலெக்ஸ்: எனக்கு ஒரு 27 ,28 வயது ஆகும்போது திருமண அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்கள். நான் அவ்வாறு அழுத்தம் கொடுத்து அவர்களிடம் நான் IAS படிப்பு படிக்க வேண்டும் என்று நான் என் திருமணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன். அப்படியே 30 வயது கடந்தது. அதன் பின்னர் என்னால் எந்தவிதமான சாக்குப் போக்கும் சொல்ல முடியவில்லை ஏனெனில் ஐஏஎஸ் படிப்புக்கான வயது வரம்பு மீறி விட்டேன் என்பதை எனக்குத் தெரியும். ஆனால் நான் அந்த காலகட்டத்தில், நிறைய பொது அறிவு சம்பந்தமான விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். இப்போதுகூட என்னிடம் நீங்கள் அரசியல் பொருளாதாரம் புவியியல் சம்பந்தமான கேள்விகளைக் கேட்கும்போது நான் சமாளிக்கும் அளவிற்கு என்னிடம் அதை பற்றிய பொது அறிவு உள்ளது. ஆனால் நான் IAS படிப்பை தேர்ந்தெடுத்து அதற்கு மிக முக்கியமான காரணம் எனது திருமணத்தை தள்ளிப் போடுவதற்கே. நான் சில சமயங்களில் யோசிப்பேன் எனக்கு திருமண அழுத்தங்கள் எனது விருப்பத்தை சொல்லி இருக்கலாம் என்று. ஆனால் எனக்கு காலமும் கொஞ்சம் தைரியமும் தேவைப்பட்டது நான் எனக்குள் இருக்கும் உண்மையை தெரிவிக்க.. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எனக்கும் என் அம்மாவுக்கும் வாக்குவாதம் நடந்தது அது எதற்கு என்றால் நான் பணி புரியும் அலுவலகத்தில் நான் யாரிடமும் பேச மாட்டேன் நான் நான் உண்டு என் வேலை உண்டு என்று எனது பணிகளை முடித்துக் கொண்டு வந்து விடுவேன். ஒரு நாள் என் அம்மா என் அலுவலகத்தில் என்னை தொலைபேசியில் அழைத்து நான் ஒரு கல்யாண இடைத்தரகர்களிடம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள் அதுவும் என் கையால் அவர்கள் அவரிடம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். அப்போதுதான் எனக்கு கல்யாணம் ஆகும் என்று அவர்கள் ஒரு நம்பிக்கை வைத்திருந்தனர். அதை ஏற்கவில்லை நீங்களே சென்று அந்த பணத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினேன். அந்த குறிப்பிட்ட சமயத்தில் தான் நான் மறுப்பு சொல்ல ஆரம்பித்தேன்அப்போதுதான் நான் கூகுள் சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர் ஆலோசகர்களை பற்றி தேட ஆரம்பித்தேன். அந்த குறிப்பிட்ட சமயத்தில் தான் மேக்டலின் ஜெயரத்தினம். இன்னும் நான் என்னை பற்றி சொல்ல ஆரம்பித்தேன் நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் எனக்கு கல்யாணம் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்றும் கூறினேன் நான் அவரிடம் நான் அதை நான் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றியும் கலந்து பேசினேன் அப்போது அவர் என்னை என் விருப்பப்படி சரியாக செய்ய சொன்னார் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றே எனது அப்பா அம்மாவிடம் கூறச் சொன்னார். நானும் என்னால் ஒரு பெண் மணம் புண்படும் அதை ஏற்க முடியவில்லை அதற்கான வாய்ப்புகளையும் தர விருப்பமில்லை எனவே நான் எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினேன். இப்போது கூட ஒரு விஷயத்தை நான் கூறுவேன் எனது பள்ளிக்கூடத்தில் எனது கல்லூரியில் படித்த எனது சக தோழிகள் எனக்கு மிகப்பெரிய ஒரு துணையாக இருந்து இருக்கிறார்கள்.
எனது சக மாணவர்கள் என்னை அசிங்கப் படுத்தி இருக்கிறார்கள் அப்போதெல்லாம் எனக்கு என்னுடன் படித்த சக தோழிகள் தான் எனக்கு ஆறுதலாக பேசி இருக்கிறார்கள்.அவர்களுக்கு உதவி செய்ய நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் என் ஆலோசகரிடம் என்னால் என் தோழிகள் கஷ்டப்படக்கூடாது என்பதை சொல்லிக் கொண்டே இருப்பேன் அதனால்தான் நான் என் திருமணத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை அப்போது என் ஆலோசகர் என்னிடம் கூறினார் அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு சற்று ஊக்கம் அளிப்பதாக இருந்தது நீ ஏன் அடுத்தவர்கள் வாழ்க்கையைப்பற்றி யோசிக்கிறாய் நீ என்றைக்காவது உன்னை பற்றி யோசித்து இருக்கிறாயா நீ எவ்வளவு அவமானப்பட்டு இருக்கிறாய் நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாய் நீ உன்னை பற்றி சிந்தித்து உன்னை வளர்த்துக் கொள் என்று என் ஆலோசகர் என்னிடம் கூறினார். இந்த வார்த்தைகள் எனக்கு மனதிற்கு வலுவை தந்தது. நம் இந்தியக் கலாச்சாரத்தில் தானம் தர்மம் முக்கியம் என்பார்கள் ஆனால் என்னைப் பொருத்தமட்டில் தானம் தர்மம் என்னவென்றால் முதலில் நம்மை நாம் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் நம்மை பார்த்து கொள்ள தேவைப்படும் செலவுகள் போக மீதி இருந்தால் நாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கலாம். முதலில் நாம் நம்மளை தான் காதலிக்க வேண்டும். நம்மளை நாம் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப்பின் நமக்கு விருப்பம் இருந்தால் நாம் செய்யக்கூடிய தான தருமத்தில் நமக்கு சந்தோஷம் கிடைத்தால் அதை நாம் செய்யலாம். அதுதான் நாம் மனிதனாக வாழ்ந்தோம் என்பதற்கு பொருள் என்று நான் சொல்லுவேன். ஒருநாள் என் அண்ணனை தனிமையில் சந்தித்து உன்னுடன் பேச வேண்டும் என்று கூறினேன் அவனும் சம்மதித்தான். அப்போது நான் என் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் என் முகவரி அட்டையில், முதல் பக்கத்தில் என் பெயரை எழுதி பின் பக்கத்தில் நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதை அவனிடம் காண்பித்து அந்த அட்டையை திருப்பி பார் என்று கூறினேன் எனக்கு அப்போது சற்று பயமாகவும் வருத்தமாகவும் இருந்தது. என் அண்ணன் அந்த அட்டையை பார்த்துவிட்டு ஒரு நிமிடம் பயந்துவிட்டான் அமைதியாக சில நிமிடம் இதுதான் பின்பு இதெல்லாம் ஒரு விஷயமா? நீ சிறுவயதிலிருந்தே இப்போ இப்படி இருந்திருக்கிறாய் அதுவும் தவறில்லை இவர் ஒரு மாற்றம் அவ்வளவுதான் என்று கூறினான். மேலும் நான் அவனிடம், எனக்கு என் கல்யாணத்தில் உடன்பாடில்லை என்று கூறினேன் அதற்கு அவளும் சம்மதித்தான். வீட்டில் என் மேல் அதிகம் யாரும் அப்படி பாசம் வைக்கவில்லை என்னதான் என்னை ஒரு ஆணாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் என்னை ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை நான் இன்று இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் யாராவது உங்களை உங்கள் அப்பா அம்மாவை சுட்டிக் காண்பித்து அவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று உங்களிடம் பயன்படுத்தினால் நீங்கள் அவர்களிடம் பதிலுக்கு கேளுங்கள் என்னை யார் பார்த்துக் கொள்வது என்று நான் அதற்காக அப்பா அம்மாவை பார்த்துக் கொள்ளாமல் இருக்காதீர்கள் என்று நான் சொல்லவில்லை. நம் அப்பா அம்மா நம்மை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தூரத்தில் இருந்துகூட பார்த்துக்கொள்ளலாம். நான் ஒரு ஒரு சில சமயங்களில் எனது சொந்த பந்தங்களில் இருந்தும் சில அசிங்கமான வார்த்தைகளை பெற்றேன் அதனால் அவர்களிடம் பேசுவதற்கு எனக்கு பிடிக்கவில்லை அதனால் அவர்களிடம் நான் சற்று விலகியே இருந்தேன்.

தினேஷ்: உங்கள் பார்வையில் காதல் என்பது என்ன?

அலெக்ஸ்: காதல் என்பது ஒரு அறியாமையால் தோன்றுவது.அது யார் மீது வேண்டுமானாலும் வரலாம். எனக்கும் இரண்டு மூன்று காதல் தோல்விகள் வந்துள்ளது சமீபத்தில் கூட எனது துணையர் தற்கொலை செய்து கொண்டார். அதனால் நான் மன அழுத்தத்திற்குள் சென்றிருக்கிறேன்.
காதல் என்பது ஒரு இனிமையான பருவம் என்றே நான் கூறுவேன் சந்தோஷமான அனுபவங்களில் காதலின் நான் பகிர்ந்து இருக்கிறேன் முதல் இரண்டு காதல் தோல்விகள் காதல் சிறிதளவும் தோன்றியதில்ல அவை அனைத்தும் காமத்தின் பெயரில் வந்தது. அவனுக்கு என் உடல் பிடித்திருந்தது எனக்கு அவனின் உடல் பிடித்திருந்தது.அவனுடைய உதடு காது போன்ற முக்கியமான பாகங்களில் எனக்கு பிடித்திருந்தது அவன் தனியாக எங்கேயாவது சென்று நின்று கொண்டு இருந்தால் அதை நான் அவனுக்கு தெரியாமல் அவன் பின்னாடி நின்று ஒளிந்து கொண்டு அவனை ரசிப்பேன். அவனின் கையை பிடித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவேன். எனக்கு மன அழுத்தம் இன்றளவும் இருக்கிறது நான் அவருக்கு மாத்திரைகள் எடுத்துக் கொண்டும் இருக்கிறேன் நான் எனக்கு மாத்திரை கொடுக்கும் டாக்டரிடம் பேசும் பொழுது, எனக்கு என் காதலனை மறக்க வைக்க இந்த மாத்திரைகளை கொடுக்காதீர்கள் ஏனெனில் அவனது நினைவுகள் தான் என்னை இன்றளவும் சந்தோசமாக எண்ணங்களுடன் வைத்திருக்கிறது. நான் ஒரு இந்து தான் இருந்தாலும் எனக்கு அனைத்து மதத்திலும் நம்பிக்கை இருக்கிறது ஒரு பழமொழி கூட உள்ளது கேளுங்கள் கிடைக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்று எனவே தற்கொலை முடிவு எடுக்கும் அனைவரும் அந்த முடிவு எடுக்கும் முன்னர் பல வழிகளில் அதை தடுக்க முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள் எனக்கு அந்த எண்ணம் வராது என்று. சந்தோசமான எண்ணங்களையே உங்களுக்குள் கொண்டிருங்கள்தினேஷ்: நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆக LGBTQ மக்களுக்கு ஒரு ஆதரவாளராக சமூகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் .? சமூகத்தில் இம்மாதிரியான விஷயங்கள் கொண்டுவரப்படவேண்டும்? இம்மாதிரியான விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்? இம்மாதிரியான விஷயங்கள் சமூகத்தில் மாற்றப்பட வேண்டும்? என்று நீங்கள் சொல்ல விரும்புவது?

அலெக்ஸ்: முதலில் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் மீது உள்ள கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில் அம்மாதிரியான கண்ணோட்டம் நாம் இன்னும் பழமையான சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற அச்சமான கேள்வியை எழுப்புகிறது… ஆனால் அப்போதும் கூட நாம் ஒரு குறியுடன் இருந்தோம் ஆனால் அதை,இப்போது ஜாதி மதம் என்ற பெயரில் அதை மறைக்க முயற்சிக்கிறார்கள். எனக்கு அந்த மாதிரியான ஜாதி மதம் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

அம்மாதிரியான விஷயங்களிலிருந்து பெண்கள் வெளியே வருகிறார்கள் அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் நம் சமுதாயத்தில் அவ்வாறு வெளிவர பலபேர் தயக்கம் காட்டுகிறார்கள். நான் அவர்களின் வலிகளை அவர்களின் கண்ணிலேயே பார்க்க முடிகிறது அவர்கள்தான் அழுவதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் கண்ணிலே வைத்துக் கொள்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. நான் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் பணிவுடன் இருங்கள் பணிவுடன் நடத்துங்கள் ஏனெனில் நம்மை உண்மையாக காதலிப்பவர்களும் இருக்கிறார்கள் நாம் காண்பிக்கும் சிறு கோபத்தில் கூட அவர்களை நாம் இழக்க நேரிடும். அதேமாதிரி சமுதாயத்திற்கு நான் சொல்ல விரும்புவது ஒரு வேற்றுமை திணிக்காதீர்கள் மொழிவாரியாக உடல் ரீதியாக உடல் ரீதியாக ஒரு வேற்றுமையை கொண்டு வராதீர்கள் நாம் பக்கத்து பக்கத்து வீட்டில் தான் வசிக்க போகிறோம் நாம் நமக்குள் வன்மம் இருக்கும்போது எப்படி நாம் ஒரு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும்? நீங்கள் பழமைவாதிகள் ஆக இருந்தால் காட்டுக்குள் சென்று விடுங்கள். நகரத்துக்குள் , கிராமத்துக்குள் இருக்காதீர்கள். ஏனெனில் அங்கு இருக்கும் காட்டுவாசிகள் கூட உங்களை விட மென்மையான எண்ணங்களை கொண்டு இருக்கிறார்கள் நான் சில சமயங்களில் காட்டுவாசிகள் உடன் பேசும்போது அவர்கள் கூட எங்களை புரிந்து கொள்கிறார்கள் ஆனால் படித்த நீங்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை என்பதை கேட்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாகவும் உள்ளது. அனைத்து ஓரினச்சேர்க்கை அழகும் உங்களை சுற்றி அழகான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் தவறான எண்ணங்களை உங்களிடம் செலுத்துபவர் இடம் சற்று தள்ளியே இருங்கள்.

தினேஷ்: நன்றி அலெக்ஸ் இவ்வளவு நேரம் எங்களுக்கு ஒதுக்கி பொறுமையாக பதில் அளித்ததற்கு.

அலெக்ஸ்: இந்த பொன்னான ஒரு வாய்ப்பை எனக்கு வழங்கி என்னை பேச வைத்ததற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன