மரக்கா: வணக்கம். நாம் இன்று பால்மணம் மின்னிதழினுடைய திண்ணைப் பகுதியில் திருநங்கை பிரியா அவர்களை நாம் பேட்டி எடுக்கப்போகிறோம். பிரியா அவர்கள் பரதநாட்டியம் பயின்று கொண்டுள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இன்றைக்கு திருநங்கை பிரியா அவர்களுடைய வாழ்வு பற்றியும் அவர்கள் தன்னுடைய வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும் தன்னுடைய சமூகத்திற்காகவும் என்னென்ன விடயங்கள் செய்து கொண்டுள்ளார்கள் என்பதை அவர்களுடன் பேசி தெரிந்து கொள்ளப் போகிறோம் .
மரக்கா: தோழர் பிரியா வணக்கம்
பிரியா: வணக்கம் தோழர்
மரக்கா: எனக்கு மிகவும் சந்தோஷம் உங்களை எங்களுடைய பால்மணம் மின்னிதழில் திண்ணை என்ற பகுதியில் உங்களை பேட்டி எடுப்பதில் பால் மணம் இணை ஆசிரியராக எனக்கு மிக்க மகிழ்ச்சி, உங்களை பற்றி நாங்கள் எழுதுவதில் எங்களுக்கு பெருமை.
முதல் கேள்வியாக, உங்களை பத்தி நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் தோழர்
பிரியா: என்னுடைய பெயர் பிரியா என்னுடைய pronouns: பிரியா/ they/ them/ தோழர்/ she/ her.
நான் B.A., பாரதநாட்டியம் பட்டப்படிப்பு படிக்கிறேன். பாரதநாட்டியத்தை பறை இசை மூலமாக மாணவர்களுக்கு சொல்லித்தந்து கொண்டு இருக்கிறேன். இந்த ஒரு நூற்றாண்டுகளாகவும் ஆரிய வருகைக்குப் பின்பாகவும் பரதநாட்டியம் என்பது ஒரு பிராமணர்களுக்கான கலையாகவும் கோவில்களில் கடவுள்களுக்கு முன்பாக நிகழ்த்தப்படுகிற கலையாகவும் இருக்கிறது. ஆனால் ஆதி காலத்தில் சதிர் ஆட்டம்/கூத்து என்றே தலித்துகளுக்கான உரிமையைப் பேசக்கூடிய, மன சோர்வை போக்க கூடிய ஒரு கலையாக இருந்துள்ளது. அப்பொழுது இதனுடைய பிரதான பக்க வாத்திய இசைக்கருவிகள் பறை, முரசு போன்றவைதான். இதனால் ஆரம்ப புள்ளி என்னவாக இருந்ததோ அதை நோக்கிய பயணமாக என்னுடைய பயணம் உள்ளது தோழர். மற்றும் ஒரு கடவுள் நம்பிக்கை சார்ந்துள்ள ஹரே ராம ஹரே கிருஷ்ணா என்று இல்லாமல் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய கருத்துக்களோடு பகுத்தறிவு, மானுட விடுதலைக்காகவும், பாலின, பாலியல் சமத்துவத்திற்காகவும் உரிமைகளுக்கான குரலாகவும் இந்த கலையை பயிற்றுவிக்கிறோம் தோழர்.
மரக்கா: ரொம்ப நன்றி தோழர் உங்களுடைய குடும்பத்தை பற்றி சொல்லுங்க?
பிரியா: அதற்கு முன்பு 2022 மனிதிகள் விருது அணியம் அறக்கட்டளை மூலமாக எனக்கு வழங்கினீர்கள் அதற்கு மிக்க நன்றி.
பிரியா: என்னுடைய குடும்பத்தை பற்றி கூற பெரிதாக ஒன்றும் இல்லை தோழர். நான் அம்மா தாத்தா பாட்டி இவர்களெல்லாம் தான். என்னுடைய குடும்பத்தில் என்னை, என்னுடைய அம்மா, அப்பா ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு அதற்கான புரிதல் இருந்தது. நான் என்னுடைய பாலினத்தை உணர்ந்து வீட்டில் கூறி என்னுடைய பள்ளிப்படிப்பையே நான் திருநங்கையாகத்தான் படித்தேன். என்னுடைய அறுவை சிகிச்சைக்கு என்னுடைய அம்மா தான் என்னை பார்த்துக்கொண்டார்கள். குடும்ப வாழ்க்கை என்பது எனக்கு என்னுடைய வீட்டில் இருப்பவர்களுடன் நல்ல முறையில் தான் இருந்தது மற்ற திருநர் சமுதாய மக்களை நினைக்கும்போது. ஆனால் வீட்டில் அல்லாத குடும்ப உறுப்பினர்களால் சாதியவாதிகளால் ஒடுக்குமுறைகள் இருந்தன. இருந்தாலும் என்னுடைய அடிவேர் என்னுடைய வீட்டில் இருப்பவர்கள் எனக்கு ஒரு முதுகெலும்பாக இருந்ததால் என்னால் இவைகளையெல்லாம் கடக்க முடிந்தது.
மரக்கா: மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இப்பொழுது நான் நேர்காணல் செய்யும் நமது சமூக மக்களிடம் இருந்து மூன்றாவது முறையாக இதை கேட்கிறேன் மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீங்கள் முதல் முறையாக உங்களை உணர்ந்து உங்கள் குடும்பத்தில் யாரிடம் முதல் முறையாக சொன்னீர்கள் அப்பொழுது அவர்களது மனநிலை எவ்வாறு இருந்தது?
பிரியா: நான் முதல் முறையாக என்னுடைய அம்மாவிடம் சொன்னேன் வயது சரியாக நியாபகம் இல்லை ஏழாம் வகுப்பு படிக்கையில். தீபாவளியன்று. அம்மா இதை எதிர்நோக்கியவர்களாகத்தான் இருந்தார்கள். அம்மா என்னிடம் உனக்கு இந்த தீபாவளிக்கு என்ன உடை வேண்டும் என்று கேட்கையில் நான் எனக்கு இனிமேல் இந்த உடைகளெல்லாம் வேண்டாம் பெண்கள் போடக்கூடிய உடைகள்தான் வேண்டும் என்றேன் அம்மாவும் யோசித்து அடுத்த வருட தீபாவளிக்கு எனக்கு நான் கேட்ட உடை வாங்கித்தந்தார்கள்.
மரக்கா: அந்த தீபாவளி நாளில் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் ஒரு ஒளி ஏற்றிய நாளாகத்தான் கூற முடியும் என்று நாம் சொல்லலாம் அல்லவா!
பிரியா: ஆம் தோழர்.
மரக்கா: அதற்குப்பிறகு உங்களுடைய வீட்டில் என்ன நடந்தது எப்படி உங்களை ஏற்றுக்கொண்டார்கள்?
பிரியா: என்னுடைய அம்மா அப்பா, அவர்களின் பெற்றோர்களுக்கு புரிதல் கம்மியாக தான் இருந்தது இதனால் அவர்களின் கனவுகளை நான் சிதைத்து விட்டதாக பேசினார்கள். அதன் பிறகு பேரக்குழந்தை என்றால் எங்களுடைய வீட்டில் நான் மட்டும் தான் அதனால் என்னை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு வந்தது. அதன் பிறகு அனைவரிடமும் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை இல்லையென்றே அவர்கள் பேச ஆரம்பித்தனர். எங்களுடைய பிள்ளைகளுக்கு பெண் குழந்தைதான் ஒன்று உள்ளது என்பது போல் அவர்களே பொதுவெளிகளில் பேசினார்கள். நான் கூறியதுபோல் சாதியவாதிகளுக்கு என்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்பது இல்லை.
மரக்கா: கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய அப்பா அம்மா ஒரு பெரும் தூணாக உள்ளார்கள் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது ரொம்ப மகிழ்ச்சி. இப்பொழுது உங்களுடைய வாழ்க்கைக்காக நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்?
பிரியா: நான் B.A., பரதநாட்டியம் படித்துக்கொண்டு நடன ஆசிரியராக உள்ளேன் தோழர் என்னுடைய நடன வகுப்பில் நான் முழுக்க பகுத்தறிவு, மானுட விடுதலையைச் சார்ந்த வகையில்தான் பாடல்கள், நடனவடிவமைப்புகள் செய்வதுண்டு. ஆனால், நான் இதை ஒரு பட்டயப்படிப்பாக எடுத்து படிக்கையில் பழைமைத்துவ பாடல்களுக்குத்தான் ஆட வேண்டியதாக உள்ளது. நிறைய பரதநாட்டிய ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் இதனுடைய ஆணி வேர் என்னவென்று பார்க்காமல் தேவதாசிகளுடன் நின்று விடுகிறார்கள். இன்னும் கூறப்போகுமேயானால் நிறைய பார்ப்பன பெண்கள், தங்களை ஒரு தேவதாசிகளாக கருதி கொண்டு தேவதாசிகள் செய்த சடங்கு முறைகளை செய்கிறார்கள் ஆனால் இவர்கள் கல்யாண வாழ்க்கையில் இருக்கிறார்கள் just ஒரு ஆசைக்காகவா இல்லை பழைமைவாதத்தை மீட்டெடுக்கவா என்று வரலாற்றில் உள்ள கோர பக்கங்களை இவர்கள் அறியாது சிந்திக்காது இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். இந்த கலை, தேவதாசிகளுக்கு முன்பு யாருக்கான கலையாக இருந்தது? என்பதை இவர்கள் சிந்திக்காது இவர்களது பெருமைகளுக்காக இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் நாம் அவ்வாறு இல்லை இதை ஒரு பகுத்தறிவு சிந்தனையுடன் சிந்திக்கிறோம் பரந்துபட்ட சிந்தனைகளோடு அணுகுகிறோம் இதனால் நாம் பறை போன்ற ஆதி இசைக்கருவிகளை வைத்து நடன வடிவமைப்புகளை உருவாக்குகிறோம். ஆனால் பிராமணர்கள் இதையெல்லாம் தடுத்து இந்த கலைகளை மதரீதியாக கொண்டு செல்கிறார்கள் ஆதியில் பிரம்மா உருவாக்கின வேதத்தில் நாட்டியம் பிறந்தது அதை சிவன் ஆடினார் அவர் நந்திக்கு சொல்லி தந்தார் நந்தி தண்டுவிற்கு சொல்லி தந்தது தண்டு பாரதமுனிவருக்கு சொல்லி தந்தார் பாரதமுனிவர் நாட்டிய சாஸ்திரத்தை உருவாக்கினார் பிறகு உலகத்தில் கோபியர்களுக்கு சொல்லி தந்தார்கள் என்றெல்லாம் பெரும் புராண கட்டுக்கதைகளை சொல்லுவார்கள். இவர்கள் கூறுவது நந்திக்கு பரதநாட்டியம் கற்பிக்கப்பட்டது என்று எவ்வாறு ஒரு மாட்டினால் நாட்டியம் ஆட முடியும்? என்பதே நமது கேள்வி. இந்த கேள்விகளுடன் எனது கலைவாழ்வை நான் தொடர்கிறேன். ட்த்
பிறகு என்னுடைய கல்லூரி வாழ்க்கை என்னை என்றுமே அரவணைப்புடன் வைத்துள்ளது. என்னுடைய கல்லூரியில் நான் தான் முதல் திருநங்கை மாணவி அதனால் அனைவருக்கும் என்னை பற்றிய புரிதலை நான் சேரும் முன்பே எனது கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மீட்டிங் வைத்து புரிய வைத்தனர். இது இப்பொழுது பள்ளி கல்லூரிகளில் சேரும் நமது திருநர் சமுதாய மக்களை குறித்தான பார்வையை மாற்றும் எண்ணத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுமே செய்ய வேண்டியதாக நான் பார்க்கின்றேன் தோழர்.
மரக்கா : மிகவும் சந்தோஷம் தோழர் எனக்கு வியப்பாக உள்ளது நமது கல்விதான் நம்முடைய வாழ்க்கைக்கான அறிவை தருகிறது. ஒரு கல்வி நிறுவனம் உங்கள் மூலியமாக மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை தருகிறது மற்ற சமூகத்து மாணவர்களையும் சேர வைக்க வேண்டும் என்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கல்லூரியின் பெயர் என்ன தோழர்?
பிரியா: கலைக்காவேரி தோழர்.
மரக்கா: உங்களுக்கு எப்படி பெரியார் அம்பேத்கர் மீதான ஆர்வம் வந்தது?
பிரியா: நான் சிந்தித்தேன். மார்க்ஸ் கூறுவார் நீ என்று இந்த சமூகம் போகும் போக்கில் போகாமல் இந்த சமூகத்தை குறித்து கேள்வி கேட்கிறாயோ அப்பொழுதுதான் நீ சரியாக சிந்திக்கிறாய் என்றும். அதேபோல் தந்தை பெரியாரும் அவருடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் நான் சொல்வதை நீங்கள் அவ்வாறே நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை நீங்கள் படித்து சிந்தியுங்கள் சரியெனப்பட்டாள் சிந்தியுங்கள் சிந்திப்பது மட்டுமின்றி பேசவும் செய்யுங்கள் என்று கூறுவார். அதேபோல்தான், நான் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கம்யூனிச ஆசான் மார்க்ஸ் இவர்களின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் சிந்திக்க ஆரம்பித்தேன். அதன் வெளிப்பாடாகவே எனக்கு இவர்களின் எழுத்துக்கள் மீதும் பேச்சுக்களின் மீதும் ஆர்வம் வந்தது.
உதாரணத்திற்கு நம்மை கடவுள் என்கிறார்கள் அர்த்தனாரிஸ்வரர் என்கிறார்கள் ஆனால் நம்மை எந்த இடத்தில் வைத்துள்ளார்கள்? இரவு நேரங்களில் நாம் தான் இவர்களின் காம இச்சைகளின் கூடாரம் என்று நம்மை நினைக்கிறார்கள் அப்பொழுது இந்த கடவுளாகிய நான் எங்கு போனேன்? என்று சிந்திக்க வேண்டும் நாம். நம்மை கடவுளாக கும்பிடுகிறார்கள் கடவுளாக நினைக்கிறோம் என்கிறார்கள். ஆனால், இவர்கள் சொல்லும் கடவுளின் உருவம் எவ்வாறு உள்ளது பாதி உடல் ஆணாகவும் பாதி உடல் பெண்ணாகவும் உடலின் பாதியில் பெண்னின் மார்பகமும் மற்ற பாதியில் ஆணின் மார்பகமும், ஒரு கை ஆணாகவும் இன்னொரு கை பெண்ணாகவும், முகத்தில் பாதி முகம் ஆண் முகமாக மீசை உள்ளதாகவும் மற்றொரு பாதி முகம் பெண்ணாகவும் , ஒரு கால் ஆணாகவும் ஒரு கால் பெண்ணாகவும் உள்ளது இன்னும் வெளிப்படையாக கேட்க போனால் அந்த கடவுளின் பிறப்பு பாலின உறுப்பு எவ்வாறு இருக்கும்? பாதி ஆணின் பிறப்புறுப்பும் பாதி பெண்ணின் பிறப்புறுப்புமாகவா? இந்த உலகத்தில் எந்த திருநங்கை அது போன்று உள்ளாள்? அறிவியல் ரீதியாக இவர்களால் சான்று தர முடியுமா இவ்வாறு ஒரு கேளிக்கை கூத்தாகவும் மக்களுக்கு புரியாமலும் சிலைகளை உருவாக்கி ஒரு சிறுபான்மை சமூகத்தின் மீதான வெறுப்புணர்ச்சியை கக்குவதே இந்த இந்து மதத்தின் நோக்கம் இதையெல்லாம் குறித்து சிந்திக்க வேண்டும். ஆனால் இந்த சிலை தான் நாம் என்று கூறி நம்மையே அந்த சிலையை குறித்த கேள்விகளை எழுப்ப செய்யாமல் நம்மையே வணங்க வைத்தல் என்பதே நான் பார்ப்பனிய மனப்பான்மை பார்ப்பனிய சிந்தனை பார்ப்பனிய ஆதிக்கம் என்று நான் கருதுகிறேன். மற்றும் இது போன்ற கேள்விகளால் தான் அம்பேத்கரியம் என்றால் என்ன? பெரியாரியம் என்றால் என்ன? பெண்ணியம் என்றால் என்ன? தலித்துகள் என்றால் என்ன? நம்மை போல தலித் LGBTQIA+ சமுதாயத்தின் வலி வேதனைகள் போன்றவற்றை சிந்திக்க ஆரம்பித்தேன் தோழர்.
நமது திருநங்கை சமூகத்தினரின் மன உணர்ச்சிகளை நான் மதிக்கின்றேன். ஆனால் அவர்கள் ஏன் ஒரு ஆணுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் தந்தை பெரியார் கூறுவார் பெண் விடுதலை என்பது நமக்கு எட்டும் கனியாக வேண்டுமென்றால் பெண்களெல்லாம் கர்ப்பப்பை அகற்ற வேண்டும் என்று. இந்த வேலையின் நாம் பெண்ணாக வாழ்கிறோம் ஆனால் தங்களை முழு பெண்ணாக இந்த சமுதாயத்தின் முன்பு அடையாளப்படுத்திக்கொள்ள பல திருநங்கைகள் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை மூலம் நமக்கு இல்லாத கர்ப்பப்பையை கொண்டு வர வேண்டும் என்ற ஏக்கங்களில் இருக்கிறார்கள். நாம் உள்ளபடி பார்க்க போனால் சந்தோஷப்பட வேண்டும் நமக்கு பிறப்பில் பெண்ணாய் பிறக்கும் பெண்களை போல கர்ப்பப்பை கிடையாது இதானால் நாம் சிஸ் ஜெண்டர் பெண்களை போல ஆண்களுக்கு அடிமைகளாகும் வாய்ப்பு குறைகிறது இந்த நூற்றாண்டில் பெண்களே தங்களுக்கு கர்ப்பப்பை வேண்டாம் என்று அகற்றி வரும் சூழலில் இந்த இந்திய ஆணாதிக்க சமூகம் நம்மை பெண்களை போல நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் ஏன் நம்மை தாழ்வு மனப்பான்மையுடன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே நாம் சிந்திக்க வேண்டும். மற்றும் நாம் கல்யாண வாழ்க்கையின் மூலமே நாமும் ஒரு பெண் என்பதை இந்த சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டுமா? பார்க்கப்போனால் நாம் தான் அடிமைகளாகிறோமே தவிர வேறுயாருமில்லை. நான் தந்தை பெரியாரின் கருத்தை மதிக்கக்கூடியவள். யாருக்கு இங்கு தாலி மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு தாலி கிடைக்க வேண்டும் என்பதை நான் சிந்திக்கிறேன் ஆகையால் நாம் கல்யாணம் கூட செய்து கொள்ளலாம் ஆனால் அது ஒரு போதும் ஒரு ஆணுக்கு அடிமையாகும் போக்கில் அமைந்துவிடக்கூடாது. இதெல்லாம் நாம் நமக்கான வட்டத்தை விட்டு தாண்டி இந்த சமூகத்தை பார்த்து கேள்வி கேட்கையில் இந்த சிந்தனைகளெல்லாம் பிறக்கும் என்று நான் நினைக்கிறேன். நமது சமூகம், நம்மைப்போல காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அனைவரையும் அரசியல் வயப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் தோழர்.
மரக்கா: ரொம்ப அழகாக சொல்கிறீர்கள் நான் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன். உங்களுடைய தெளிவான பேச்சிலிருந்து பெரியாரையும் அம்பேத்கரையும் நீங்கள் எந்த அளவிற்கு உள்வாங்கியுள்ளீர்கள் என்று தெளிவாக தெரிகிறது. மிகவும் சந்தோஷம் உங்களுடைய பேச்சை கேட்கும்போது.
நீங்கள் புத்தகம் நிறைய படிப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஓரிடத்தில் உங்களை வியந்து பார்க்க வைத்த புத்தகம் என்று ஒருவருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றால் எந்த புத்தகத்தை நீங்கள் பரிந்துரைப்பீர்கள்?
பிரியா: ஒரு சில புத்தகங்கள் என்பது இல்லை நிறைய புத்தகங்கள் உள்ளன. இது தான் என்று நான் குறிப்பிட்டு சொல்ல மாட்டேன். புத்தகங்கள் என்றாலே அறிவுதான். நாம் எந்த புத்தகங்களைப் படிக்கிறோம் என்பதில் இருக்கிறது. அவனுக்கும் இவளுக்கும் கல்யாணம் அவன் இவளை கடத்தி கொண்டு போனான் இவன் அவளுக்காக குரங்குகளை வைத்து பாலம் போட்டான் என்ற புத்தகங்களை நான் கூற மாட்டேன். ஒரு பகுத்தறிவை வளர்க்கும் புத்தகம், ஒரு அடிமைச்சமூகத்தை உயர்த்தும். புத்தகம் அறிவியல் சார்ந்த புத்தகம் இந்த சமூகத்தை நோக்கி நாம் கேள்வி கேட்க கூடிய புத்தகங்கள் இவைகளையே நாம் அறிவு சார்ந்த புத்தகங்கள் என்று நாம் பார்க்க வேண்டும்.
நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் திருநங்கைகளுக்கும், பெண்களுக்கும், பெண் ஏன் அடிமையானாள் என்ற தந்தை பெரியாரின் புத்தகத்தை பரிந்துரைப்பேன். இந்த புத்தகம் மிக பெரிய பக்கங்களை கொண்ட புத்தகமெல்லாம் இல்லை மிகவும் குறைவான பக்கங்கள் ஆனால் பெரிதும் சிந்திக்க கூடிய எழுத்துக்கள். இந்த புத்தகம் நாம் ஏன் இன்னும் இந்த சமூகத்தில் அடிமைகளாக உள்ளோம் என்பதை நமக்கு புரிய வைக்கும். பிறகு எழுச்சித்தமிழர் அண்ணன் டாக்டர். திருமா அவர்களின் அமைப்பாய் திரள்வோம் என்ற புத்தகம் சனாதன காலத்தில் நாம் ஏன் அடிமைகளாக உள்ளோம், நமது அடிமைத்தனத்தை போக்க நாம் எவ்வாறு அமைப்பாய் திரள வேண்டுமென்றும் அறிந்துகொள்ள இந்த இரு மாபெரும் புத்தகங்களையும் நான் பரிந்துரைப்பேன் தோழர்.
நாம் ஏன் அமைப்பாய் திரள்வோம் படிக்க வேண்டும் என்று கூறுகிறேன் என்றால் நான் அண்ணன் திருமா அவர்கள் முன்வைக்கும், நாம் அனைவரும் தலித்துகளாய் ஒன்றிணைய வேண்டும். தலித் என்பது ஒரு சாதியை சார்ந்த மக்களை குறிப்பதல்ல ஒடுக்குமுறைகளுக்கு உட்படும் பாலினம், பாலியல், சாதி, மதம், இனம் இவர்களே தலித்துகள்.
இவ்வாறு பார்க்கையில் LGBTQIA+ சமூகத்தினர், பட்டியலின மக்கள், பட்டியலினத்திலேயே இருக்கும் பெண்கள், இஸ்லாமிய பெண்கள், பழங்குடியின பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், பழங்குடியினர், இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் நாம் அனைவரும் சிறுபான்மை சமூகத்தினர், இவர்கள் ஆளும் வர்க்கத்தால் ஒடுக்குதலுக்கும் ஒதுக்குதலுக்கும் உள்ளாக கூடியவர்கள். நாம் அனைவரும் அமைப்பாய் திரளவேண்டும். ஆளும் வர்க்கத்தினரை, பாலினத்தவரை கேள்விகள் கேட்கவேண்டும். இவ்வாறு நாம் ஒன்றிணைகையில் நாம் சட்டம் செய்ய கூடிய இடத்திற்கு வரலாம், அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய இடத்திற்கு வரலாம் இதற்கெல்லாம் நாம் ஒன்று திரள வேண்டும். அதிகாரத்தின் சுவாச காற்றை நாம் எப்போது சுவாசிக்கின்றோமோ அன்றைக்கே நமக்கான விடுதலை பிறக்கும். அப்பொழுது இந்த நாடு அனைவருக்குமானதாக மாறும் இதற்கு நாம் செய்ய வேண்டியது அமைப்பாய் திரளுவது ஒன்றிணைந்து கேள்வி கேட்பது.
மரக்கா: ரொம்ப சந்தோஷம் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள், அண்ணன் திருமா அவர்களின் அமைப்பாய் திரள்வோம் புத்தகங்களை தோழர் திருநங்கை பிரியா அவர்கள் பரிந்துரைத்து இருக்காங்க. கண்டிப்பாக இந்த புத்தகங்களை அநேகம் பேர் படித்திருப்பீர்கள் படிக்காதவர்கள் வாங்கி படியுங்கள். இந்த இரு புத்தகங்களை எதற்காக படிக்கணும் ஏன் படிக்கணும் படித்தால் எந்தவகையான விளைவுகள் நம்மால் ஏற்படுத்த முடியும் என்பதை மிகவும் அழகாக தெளிவாக சொல்லி இருக்காங்க. நம்ப மக்களுக்கு நான் முதலில் என்ன சொல்ல விரும்புறேன் என்றால் புத்தகங்களை படியுங்கள் என்று. பிரியா அவர்களின் மூலமாக நான் சொல்ல விரும்புகிறேன் உங்களிடம் நிறைய பேசுகிறேன் இன்னும் கேக்க ஆவலாக உள்ளேன். கடைசி கேள்வி உங்களுடைய பார்வையில் நமது சமூக மக்களிடம் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், எதிர்காலத்தில் உங்களுடைய திட்டங்கள் நமது சமூகத்திற்காக அரசியலில் வருவது, கருத்துகள் கூறுவது, கலையில் சாதிப்பது இந்த சமூகம் எப்படி இருக்கிறது அதை எப்படி மாற்றலாம் என்பதை பற்றி சொல்லுங்கள்.
பிரியா: நமது சமூக மாற்றத்திற்கு நாம் அனைத்து துறைகளிலும் கால்பதிக்க வேண்டும் அதிலும் முக்கியமானது அரசியல், மற்றும் சினிமா, கலைத்துறைகள். தோழர் இதனால் நமக்கான மாற்றத்தை மக்களிடையே கொண்டு செல்லலாம் உதாரணம் ஒரு காலத்தில் சாதி பெருமையை பேசுவதற்காகவே படங்கள் எடுக்கப்பட்டன. அப்பொழுது தலித் சமூதாய கலைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்க பட்டன. ஆனால் இந்த காலத்தில் மிக பெரிய அளவிற்கில்லை என்றாலும் கை விட்டு என்ன கூடிய அளவுக்கேனும் பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் சினிமாத் துறை கலைஞர்களாக உள்ளனர். இவர்கள் போன்ற ஆட்கள் வலிகளை வலிகளாகவும் உண்மைகளை உண்மைகளாகவும் திரைப்படுத்துகின்றனர் அனைவருக்குமான படங்களாக தருகின்றனர். இது போன்று நாம் சினிமா கலைத்துறைகளில் கால்பதித்து நமக்கான படங்களை நாம் உருவாக்க வேண்டும். மற்ற hetrosexual ஆட்கள் நம்மை பற்றி படங்களை தயாரிப்பதை விட நம்மால்தான் நம்மைப் பற்றி தயாரிக்க முடியும். இவ்வாறு இருக்கையில் நாம் மக்களுக்கான அனைத்து கலைவடிவங்களிலேயும் கால் பாதிக்க வேண்டும். அடுத்து அரசியல், இதற்கு நமது சமூதாய மக்கள் அனைவரையும் அரசியல் வயப்படுத்த வேண்டும் பெரும்பாலோரை அரசியல் பதவிகளில் அமர்த்தி நமக்கான சட்டத்தை நாம் கொண்டு வர வேண்டும். உதாரணம் நாடாளுமன்றத்தில் நமது சமுதாயத்திற்கு எதிரான சட்டங்களை கொண்டு வருகையில் நாம் அங்கிருந்து குரலெழுப்ப வேண்டும் இப்பொழுது கூட central sector scheme இல் இருந்து 1395 கோடியிலிருந்து, 2022 மற்றும் 2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் 969.50 கோடியாக ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது இதை தலைவர் அண்ணன் திருமா அவர்கள்தான் எதிர்த்து கேள்வி கேட்டார் பேசினார். ஒன்றிய அரசு இவ்வாறு குறைத்தது, தலித் பெண்கள் திருநர் சமூதாய மக்கள், மாற்றுத்திறனாளி சமூகத்தினர் போன்றவர்களுக்கு பெரும் அபாயம். இதைகளெல்லாம் கேள்வி கேட்க இடதுசாரி அமைப்புகளுடன் சேர்த்து நாமும் கேட்க வேண்டும் சட்டம் இயற்றும் இடத்தில் இருந்து. இதற்க்கு நாம் அரசியல் கட்சிகளிலும், இடது சாரி இயக்கங்களிலும் நாம் நமது எண்ணங்களை பதிக்க வேண்டும் இணைந்து கேள்வி கேட்கவேண்டும்.
நிறைய திருநர் சமூதாய மக்களிடம் கேட்கப்படும் கேள்வி உங்களுக்குள் சாதி உள்ளதா என்று. பல பேர் எங்களிடம் சாதி எல்லை மதம் இல்லை என்று கூறுவார்கள் அது அவ்வாறு இருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணமும். சாதியே இல்லை என்று கூறும் நாம் இங்கிருக்கும் தலித் திருநங்கைகளின் நிலைமையை யோசிப்பதில்லை cis gender சமூதாயம் என்பது privilege சமூதாயம் இவர்களிலேயே பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்கள் மிகவும் privilege சமூதாயம் அவர்களுக்கு அடுத்து கிருத்துவர்கள்,இஸ்லாமியர்கள், சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், அவர்களிலே சாதியால் ஒடுக்கப்பட்ட தலித் பெண்கள், தலித் மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், பின்பு ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாய் LGBTQIA+ சமூதாயம், தலித் திருநங்கைகள், விளிம்பு நிலையில் மாற்றுத்திறனாளிகள் தலித் திருநங்கைகள், பழங்குடியின திருநங்கைகள் போன்றவர்கள் வருகின்றனர். சினிமாவில் ஒரு திருநங்கைகளுக்கு கூட பேச கூடிய கதாபாத்திரம் கொடுப்பதில்லை அவ்வாறே கொடுத்தாலும் இயக்குநரின் சாதியில் உள்ள அல்லது நட்பு வட்டாரத்தில் உள்ள திருநங்கைகளுக்கு தருகிறார்கள் இன்னும் தலித் மற்றும் பழங்குடியின திருநங்கைகளை கை தட்டுபவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் கொலை கொள்ளை குற்றங்களை செய்யக்கூடியவர்களாகவே சித்தரிக்கின்றனர். இப்பொழுது சமீபத்தில் வந்த பில்டர் கோல்ட் என்ற படம் தலித் திருநங்கைகளை மிகவும் கொச்சைப்படுத்த கூடிய வகையில் எடுக்கப்பட்டது.
நமது குரல் என்றுமே ஒடுக்க படுபவர்களிலும் ஒடுக்க படுபவர்களின் குரலாக இருக்க வேண்டும் தீண்டாமையின் ஆணி வேறை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும்.
இதில் இருந்து நாம் மேல் எழும்பி வர நமக்கான இட ஒதுக்கீடு வேண்டும். பாசிச ஹிந்துத்துவ BJP அரசு OBC யில் இட ஒதுக்கீடு தந்தது திருநர் சமூதாய மக்களுக்கு. இது மிகவும் கண்டிக்க தக்கது இங்கு திருநங்கை திருநம்பி என்பது ஒரு பாலினம் இந்த பாலினத்திற்கு பாலின ரீதியான இடஒதுக்கீடு என்பது வேண்டும் cis gender ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வாறு உள்ளதோ பாலின ரீதியான இட ஒதுக்கீடு என்பது அது போன்ற இட ஒதுக்கீடு வேண்டும். அனால் அது செய்யாமல் தங்களுடைய வாழ்க்கையில் தினம் தினம் தங்களுக்கான privilege ஐ அனுபவிக்கும் பாலினத்தையும் திருநர் என்ற பிறப்பாலேயே பாலினதுனாலேயே ஒதுக்க படும் ஒடுக்க படும் பாலினத்தையும் ஒரே தராசில் வைத்து எவ்வாறு இடை போடா முடியும்? ஆகவே தனியாக இட ஒதுக்கீடு திருநர் சமூதாய மக்களுக்கு தர வேண்டும் அதுவும் தலித் திருநர், பழங்குடியின திருநர், மாற்று திறனாளி திருநர் போன்றவர்களுக்கான இட உள் ஒதுக்கீடு என்பது வேண்டும். காரணம் ஒரு பிராமண குடும்பத்தில் பணம் படைத்த குடும்பத்தில் பிறந்த திருநர்களின் வாழ்க்கை என்பது வேறு, பிறப்பாலேயே ஒடுக்க பட்ட ஒதுக்க பட்ட சாதியில் பிறந்த திருநர்களின் வாழ்க்கை சூழல் என்பது வேறு . உதாரணத்திற்கு பிறப்பால் பிராமண குடும்பத்தில் பிறந்த திருநர் அவர்களில் பாலினத்தை குறித்து வெளியில் வராத வரையில் அவர்களுக்கான அடிப்படை கல்வி என்பதாகிலும் கிடைக்கும் இது நல்லது தன் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய ஒன்று குறை கூற வில்லை நான். அனால் பிறப்பால் தான் சாதிய ரீதியாக ஒடுக்க பட்ட ஒதுக்க பட்ட சமூதாயத்தில் பிறந்த திருநர் என்றால் எங்களின் படிப்புரிமை என்பது வேறு. திருநர்களுக்கான தனி இட ஒதுக்கீடு தந்தாலும் இருவர்களையும் ஒரே தராசில் வைக்க முடியாது இதுவே இவ்வாறு இருக்கையில் மலைகளில் பள்ளி கூட்டமே இல்லாத இடங்களில் பிறந்த பழங்குடி இன திருநர்களின் நிலைமைகளை நாம் யோசித்தால் வேண்டும். இதுவே மாற்று திறனாளி திருநராக இருந்தால் இன்னும் அதிகப்படியான சலுகைகளை தந்து படிப்பு அறிவை தொழில்களை நாம் தர வேண்டும் இதனாலேயே நாம் திருநருக்கான தனி இட ஒதுக்கீடு கேக்கிறோம் அதிலும் தலித் திருநர்கள், பழங்குடியின திருநர்கள், மாற்று திறனாளி திருநர்களுக்கான இட உள் ஒதுக்கீடு கேக்கிறோம். கடைசி வரை ஒரு தலித் திருநர் ஒரு பாலியல் தோழியாளியாகவும், கை தட்டி காசு கேட்பவர்களாகவுமே இருந்து விட கூடாது.
intersectional feminism என்ற ஒரு புள்ளியில் பெண்கள் அனைவரும் அமைப்பாய் திரள்தல் வேண்டும். பொதுவாக intersectional feminism என்பது வலிகளை வலிகளை அனுபவிப்பவர்களிடமே வருவது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும் அதனால் நான் feminism பேச கூடிய பெண்களின் வலிகள் வலி இல்லை என்று கூற வில்லை பெ ண்ணியத்தின் மறு உருவமே intersectional feminism என்பது ஒரு தலித் பெண்ணின் வலிகளை ஒரு பிராமண பெண்ணால் பேச முடியாது காரணம் அந்த தலித் பெண்ணின் வாழ்க்கை சூழல் வேறு அந்த பிராமண பெண்ணின் வாழ்க்கை சூழல் என்பது வேறு அதனால் ஒரு savior mentality யில் இருந்து பேசாமல் அவர் அவர்களுக்கான உரிமைகளை அவர் அவர்கள் பேசுவது அது அமைப்பாய் திரண்டு பேசுவதாகும். இதில் சாதியால் ஒடுக்க பட்ட தலித் பெண்கள், LGBTQIA+ சமூகத்தினர், மாற்றுதிரனாளி பெண்கள், பழங்குடியின பெண்கள் போன்றவர்களை அமைப்பாய் ஒன்றிணைத்து பேசுவது உதாரணமாக ஒரு திருநங்கையின் உரிமைகளை ஒரு cis gender பெண் பேச முடியாது காரணம் திருநங்கைகளின் ஒடுக்கு முறைகள் என்பது வேறு பெண்களின் ஒடுக்கு முறை என்பது வேறு.
பாலியல் தொழில் செய்யும், கடைகளில் காசு கேக்கும் திருநங்கைகளுக்கு என்று தனி ஒரு சங்கம் அமைக்க பட வேண்டும் இதை கேக்கையில் பலருக்கு சிரிப்பு வரலாம் அனால் வெக்க பட வேண்டும். ஆட்டோ காரர் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் அமைக்கையில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் சிரித்திருப்பார்கள், தொழிலாளர்கள் அவர்களுக்கான உரிமைகளை கேக்க தொழிலாளர் சங்கம் உருவாக்கையில் முதலாளிகள் சிரித்திருப்பார்கள் திருநங்கை சமூகமே இங்கு பாலியல் தொழிலுக்கு தள்ள பட்டு காம வெறியர்களுக்கு இறையாக்க படுகின்றனர் இதனால் எத்தனையோ திருநங்கைகளின் உயிர் போகிறது, மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள், காமத்திற்காக உபயோகபடுத்தி பின்பு பணம் தராமல் போகிறார்கள் இதற்க்கு ஒன்று சங்கம் அமைக்க பட வேண்டும் இல்லையேல் அரசாங்கம் திருநங்கைகளுக்கு வேலை கல்வி தர வேண்டும். இதுவே இங்கிருக்கும் பெண் பாலினமே பாலியல் தொழிலில் தள்ள பட்டு இருந்து பாலியல் தொழில் செய்து கொண்டிருந்தால் இந்த நாட்டின் அரசாங்கம் அவ்வாறே விட்டு விடுமா? மற்ற நாடுகளுக்கு முன்பு அவ மரியாதையுடன் நிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் அத்தனை பெண்களையும் பாலியல் தொழிலில் இருந்து மீட்டெடுக்க மறு வாழ்வு மையங்கள், சுய தொழில்கள், வேலை வாய்ப்புகளை உருவாக்காது அனால் இங்கு ஒரு பாலினமே ஆளும் ஆண் பலினதிர்க்கு இறையாக்க பட்டு கொண்டிருகின்றது அனால் பாசிச மத வாத ஒன்றிய அரசாங்கமோ திருநர் சமூதாயத்தினருக்கு ஒதுக்கிய நலத்திட்ட நிதிகளை குறைத்து சரஸ்வதி நதியை தேடவும் ராமர் கோவில் கட்டவும் செலவழிக்கின்றது. இது Dr.அம்பேத்கர் கூறியது போல தான் குப்பை மேட்டின் மேல் கோட கோபுரங்களை கட்டுவதற்கு இயையானது இங்கு ஒரு பெண்களும் திருநர்களும் தன்பால் ஈர்பாலர்களும் தலித்துகளும் மாற்றுதிரனாளிகளும் பழங்குடியினரும் வாழவே வாழ்க்கை இன்றி தவிக்கையில் இவர்களுக்கு மத கோபுரங்களும் மத கலவரங்களும் தேவை படுகின்றன. இது இன்னும் வீரியமான மனுநீதி நாடாகி வருகிறது, மனுவில் எவ்வாறு பிறப்பால் ஒரு சாதியில் பிறந்தவர்கள் மலமல்ல வேண்டும் அடிமை பட்டு போக வேண்டும் என்று உள்ளதோ அதே போன்று இந்த நாட்டில் திருநர் சமூதாயமே பாலியல் தொழில் செய்யவும் கடை கடையாக ரயிகளில் பேருந்துகளில் பிச்சை கேக்க வேண்டும் என்று எழுத பாடாத அக்க்ரமம் இந்த நாட்டில் உள்ளது.
இவர்களின் இந்த மன நிலை எதில் இருந்து வருகிறது என்று நாம் காண வேண்டும் தோழர். திருச்சி மாவட்டம் வடசேரி என்ற ஊரின் ஏரிக்கரையில் உள்ள கல்வெட்டொன்று கூறுகிறது
மோவாய்புக்கு முலை புறப்படுவான் (தென்னிந்திய கல்வெட்டுகள் 8:79)
மோவாய் புக்கு முலையெழுந்தானுமாய் ( தென்னிந்திய கல்வெட்டுகள் 8 :90)
இந்த கல்வெட்டுகளில் கூறி இருப்பது அறத்தை சிதைத்தவர்கள் அடுத்த ஜென்மத்தில் திருநங்கையாக பிறக்க கடவது என்ற சாபம். இதில் இவர்கள் கூறும் ஆறம் பிராமணர்களை கொன்றாலோ இல்லை அவர்களின் பொருளை அபகரிதாலோ அடுத்த ஜென்மத்தில் திருநங்கையாக பிறக்க கடவது என்ற சாபம் அபொழுது இந்த உலகில் உள்ள திருனங்கைகளெல்லாம் அவ்வாறு பாவ காரியத்தில் ஈடு பட்டவர்களா என்ற கேள்வி எழுகிறது என்னிடத்தில் அனால் நம் சமூகத்தை அறியாதர்வர்களுக்கு இது தான் நம்மை பற்றிய எடுதுகாட்டல் . இது போன்ற ஆதிக்க மனப்பான்மையில் இருந்தே நம் மீதான தாக்குதல்கள் ஏவப்படுகின்றன என்று நான் கருதுகிறேன்.
தந்தை பெரியார் கூறுவார் முயலுக்கு நரியிடம் இருந்து விடுதலை கிடைத்தாலும், எலிக்கு பூனையிடம் இருந்து விடுதலை கிடைத்தாலும், இந்தியனுக்கு வெள்ளையனிடம் இருந்து விடுதலை கிடைத்தாலும், பிரமனரல்லாதவர்களுக்கு பிரமனரிடம் விடுதலை கிடைத்தாலும், ஒரு ஆணிடம் இருந்து ஒரு பெண்ணுக்கு என்றுமே விடுதலை கிடைக்காது என்று. அதேதான் நானும் கூற விரும்புகிறேன் பெரியார் கூறியதில் எது நடந்தாலும் ஒரு cis gender சமூகத்தினரிடம் இருந்து ஒரு திருநர் சமூதாயத்திற்கு என்றுமே விடுதலை கிடைக்காது. அதே போன்று ஒரு பெண்ணுக்கும் ஆணிடம் இருந்து விடுதலை கிடைக்காது.
மரக்கா: தெளிவான பேச்சுக்கள் தோழர். நீங்கள் புத்தகம் எழுதுவதாக கேள்வி பட்டேன் அதை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்.
பிரியா: ஆம் தோழர் நான் எழுதிகொண்டிருக்கும் புத்தகம் முடிவை நெருங்கியுள்ளது இந்த புத்தகம் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானால் என்ற புத்தகத்தில் இருந்து பெண்களுக்கான விடுதலை புத்தகமாக இருந்ததோ அது போன்ற ஒரு சிந்தனையுடன் நமது சமூகத்தின் மீதான ஒடுக்கு முறைகளை குறித்தாக ஒரு புத்தகமாக எழுதி வருகிறேன் தோழர். இது நமது சமூகத்தின் கண்ணோட்டத்தை மக்களிடத்தில் மாற்ற வேண்டும் என்ற ஒரு பெரும் ஆசையில் ஆவலில் எழுதி வருகிறேன். இதை நாம் ஒரு புத்தகமாகவும் படிக்கலாம் ஒரு ஆய்வு கட்டுரையாகவும் படிக்கலாம்.
மரக்கா: மிகவும் சந்தோஷமாக உள்ளது தோழர் இந்த புத்தகம் நமது சமூகத்தை பற்றிய நெறைய விஷயங்கள் தெரிய வரும் என்ற பெரும் நம்பிக்கை உள்ளது எனக்கு. இந்த புத்தகம் சிறந்த முறையில் வெளி வருவதற்கு அணியம் சார்பாகவும் பால் மனம் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள் தோழர் நாங்கள் பெரும் ஆவலுடன் கத்து கொண்டுள்ளோம். உங்களின் மூலியமாக உங்களுடைய இந்த சமூகத்தின் மீதான பார்வை நமது மக்களுக்கு சென்று சேரும் என்பதில் பெரும் நம்பிக்கை உள்ளது.
ரொம்ப தெளிவாக உள்ளது உங்களது சிந்தனை நமது சமூகத்தை குறித்தான பார்வையை இந்த hetrosexual மக்களிடத்திலும் அரசியல்வாதிகளிடதிலும் அரசாங்கதிடத்திலும் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் தெளிவாக உள்ளீர்கள் இபொழுது நீங்க பேசின விடயங்கள் எல்லாமே ஒரு மாற்றத்திற்கான வித்தாக இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் கிடையாது உங்களுடைய இந்த பேச்சுக்கள் ஒரு மின் இதல்ல வந்து ஒரு புத்தகமாக வெளிவரும்பொழுது உங்களுடைய எண்ணங்கள் ஒரு சிறிய அளவிலேனும் மாற்றங்களை எதிர்படுதும் என்பதில் பெரும் நம்பிக்கை உள்ளது. நான் பார்த்த திருநர் சமூகத்தில் ஒரு திருநங்கை மிகவும் பெரியாரியம் அரசியல் பேசி உங்களை ஒரு அறிவு பெட்டகமாக தான் பார்க்கிறேன். உண்மையில் நான் உங்களை வெறுமனே புகழுவதாக பார்க்க வேண்டாம் மனதில் இருந்து கூறுகிறேன் நீங்கள் பேசுனது மிகவும் அழகாக இருந்தது அதற்கான தெளிவு அறிவு ஆற்றல் உங்களுடைய பேச்சில் வெளிப்பட்டது உங்களுடைய எதிர்காலம் நல்லதாக அமையும். நெறைய விஷயங்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் தெளிவான பார்வை உங்களிடத்தில் உள்ளது கண்டிப்பாக மற்ற திருநங்கைகளுக்கும் நீங்கள் பெரும் முன்னுதாரனமாக இருப்பீர்கள் உங்களுடைய பேச்சு எழுத்து படிகின்ற புத்தகங்கள் இதெல்லாம் உங்க சார்பாக வெளியில் வரும் பொழுது நாங்கள் விளக்கை பிடிக்க கூடிய ஒரு அகல் விளக்காக தான் இந்த ஊடகம் உள்ளது ஒளியாக நீங்கள் உள்ளீர்கள் இதன் மூலியமாக பல பேர் ஒளியடையுவார்கள் என்ற நம்பிக்கை ஈனக்கு பெரிதும் உள்ளது பெரும் ஒரு தலத்தில் உங்களை பார்ப்பேன் என்ற நம்பிக்கை ஈனக்கு உள்ளது கூடுமாலனால் ஜெகனும் நானும் உங்களை வந்து சந்திக்கிறோம் சென்னை வந்தீர்கள் என்றால் கண்டிப்பாக நமது இல்லத்திற்கு நீங்கள் வரவேண்டும்.
தோழர் பிரியா அவர்களில் வாயிலாக நான் கூறவருவது ஒடுக்க பட்ட அனைவரும் தலித்துகள் தான் ஒடுக்க படுகின்ற சிறுபான்மை சமூகத்தினர் அனைவருமே தலித்துகள் தான் என்று அற்புதமான வார்த்தைகளை நீங்கள் கூறினீர்கள் உங்களிடம் இருந்து நான் எடுத்து கொள்ளுகின்ற வார்தை அதுதான் ஒடுக்க படுகிறவர்கள் அமைப்பாய் திரள்வதான் தான் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்று இவர்கள் கூறியது இதை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். என்பதை நானும் இவர்களிடம் இருந்து கற்று கொண்ட விச்ஷயம் உங்களுக்கும் பயன் படும் விதமாக இருக்கும் பிரியா அவர்களுடைய சமூக பணிகள் சொந்த பணிகள் எதிர்காலம் இன்னும் அனேக பணிகள் தொடர்து செய்யணும் இன்னும் நமது சமூகத்திற்கு தோழர் பிரியா அவர்கள் முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோளோடு நேர்காணலை நிறைவு செய்யலாம் மிக்க நன்றி தோழர்.
பிரியா: வாய்ப்பு தந்ததிற்கு மிக்க நன்றிகள் தோழர் நீங்களும் அணியம் மற்றும் பால்மணம் மூலியமாக அப்பா அம்மா இல்லாத சிறுவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் வயதானவர்களுக்கு பேற குழந்தைகளாகவும் மகன் மகளாகவும் உங்களுடைய பணிகளை செய்து வருகிறீர்கள் இன்னும் உங்களது பனி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். வாய்ப்புக்கு நன்றி .
மரக்கா: நன்றி தோழர் .
