நான் பிறந்த நாளதிலே
ஊரெல்லாம் இனிப்பள்ளி ஊட்டி
விட்டக் கைகள் இதோ என் கழுத்தை
நெரிக்க கயிறு தேடுது…!
வெயில் பட்டால் எம்புள்ள
கருத்துடும்னு நித்தம் சொன்ன
வாயி பாடையிலே போக என்றே
சாப கானம் பாடுது…!
அல்லும் பகலும் அனுதினமும்
போதும் போதும் என்கிற அளவுக்கு
பொழிந்து தள்ளிய பாசம்
பொசுக்கென்று பொய்யாய் போனது…!
உற்றவனாய் நான் நினைத்து
உயிரென்று உளம் மகிழ்ந்த
நட்பெல்லாம் நகர்ந்து போகுது
நக்களாய் நகைத்து பேசுது…!
சகிப்புத்தன்மை , சகமனித அன்பு
இவையெல்லாம் இயல்பென்ற
மாயை திரை விலகுது, உண்மை
உயிரினிலே ஊசியைத்தான் இறக்குது…!
சாதிக்க சக்தியிருந்தும் சமுதாய
சாக்கடையோ சமவாய்ப்பு , உரிமை
மறுக்குது,தெரு நாயைக் கண்டது
போல் அடித்து துரத்துது…!
உயிர்வளர்த்து ஒன்றுமில்லை,
உலகத்தில் உண்மையில்லை,
எனக்கென்று எவருமில்லை,
ஏன் படைத்தாய் தெரியவில்லை?
வாய்ப்பில்லா வாழ்வொன்று எனக்கேன்
இறைவா? வலி மறக்க வழியில்லை
வலி மரத்த நெஞ்சோடு வாழ்கிறேன்
நடைபினமாக நான் இந்த பாரினிலே…!
– திருபாலன் (எ) தினேஷ்குமார் பாலசுப்ரமணியன் ✒

Storm
22/03/2023 at 4:08 காலை
சமூகம் வெறுக்கிறேன் செய்யும் ஏன் என்றால் இது பிற்போக்கு சிந்தனை நிறைந்தது.
போராட்ட குணம் வேண்டும்
இத்தகைய மக்களை தேற்றுவது போல எழுதியதற்கு நன்றி வாழ்த்துக்கள் தோழரே