வணக்கம்

தங்கள் அனுபவங்களை நமக்கு கடத்த  திருநங்கை ப்ரீத்திஷா அவர்களிடம் நேர்காணல் செய்ததன் தொகுப்பு.

தங்களுக்கு சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது  தோன்றியது?  அந்த எண்ணம் வரக் காரணம் என்ன?

சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனிதர்களாகிய எல்லாரும் யாரிடமும் கைகட்டி பணிபுரிய தேவையில்லை என்று விரும்புவார்கள். அப்பொழுதுதான் மொபைல்  டீ  கடை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதைப்போல பல திருநங்கைகளும் இதுபோல சுயதொழில் செய்து வெற்றிபெற்று அவர்களும் தன்னம்பிக்கை பெற்று வாழ்வில் மென்மேலும் வளர ஒரு நல்ல  வாய்ப்பாக மொபைல் டீ கடை அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் இன்னொருவர் கீழே போய் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது அதனால் பல தொந்தரவுகள் நம்மை விட்டு அகலும்.

சாதாரணமாகவே பெண்களுக்கு பல பிரச்சினைகள் இருக்க அதேபோல திருநங்கைகள் முன்வைக்கிற முதல் பிரச்சனை, “எங்களுக்கு யார் வேலை கொடுக்கிறார்”?

அப்படியே வேலை கிடைத்தாலும், எங்களுக்கு சரியான மரியாதை எங்க கிடைக்குது. அதுமட்டுமில்லாமல் எவ்வளவு தொந்தரவுகள் எங்களுக்கு வருது அப்படி இருக்கிற பட்சத்தில் சுயதொழில் தொடங்குவது தான் ஒரு சிறந்த முடிவாக எனக்கு தோணுச்சு. அப்போதுதான் இந்த மொபைல் ஷாப் நடமாடும் தேநீர் கடை துவங்கும் என்ற எண்ணம் எனக்குள் வந்துச்சு.

சரி நான் இந்த தொழில் துவங்கியதனால என்ன பார்த்து பல திருநங்கைகள் முன் வருவாங்க அவர்களுடைய வாழ்க்கையை எப்படி முன்னெடுத்து நடத்தலாம்னு.

 

சுய தொழில் புரிந்த ஆரம்ப நாட்கள் எவ்வாறு அமைந்தது?

ஆரம்பத்தில் Covid சமயத்தில்  கோயம்பேட்டில் மொபைல் டீ கடையைத் துவங்கி அனுபவம் பெற்றது மிகவும் உதவியாக இருந்தது. 3 லிருந்து 4 மாசம் டூவீலரில் தேநீர் விற்று அந்த இடங்களை இருக்கிற பிரச்சனைகள் எப்படி இருக்கும் அப்படின்னு அதை சந்தித்து அந்த ஒரு அனுபவம் பெற்று தான் நான் வந்து இந்த சுயதொழில் ஆரம்பிக்கணும் அப்படின்னு முழுமூச்சில் முன்வந்தது.

குறிப்பாக தேநீர் விற்கணும் என்றும் நடமாடும் தேனீர் கடையாக இருக்கணும் என்று ஏன் நினைதீர்கள்?

மொபைல் டீ ஷாப் அதாவது நடமாடும் தேனீர் கடை அப்படிங்கறதுக்கு நம்ம வாடகை கொடுக்க வேண்டாம். நான் கடந்த வருஷம் 2020 மார்ச் 6 இல் ஒரு கடை வைத்து 15 ஆயிரம் ரூபாய் வாடகை அப்படின்னு அஞ்சு மாசத்துக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக மட்டுமே கொடுத்து பெரும் நஷ்டத்திற்கு ஆளானேன். இதனால பொருளாதாரத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக நிறைய பிரச்சினைகளை சந்தித்து கடைசியாக கைவிட வேண்டிய நிலைமை வந்துருச்சு அந்த நிலைமை தான் நம்மை ஏன் நடமாடும் தேநீர் கடை வைக்க கூடாது அப்படி என்ற ஒரு எண்ணம் தோன்றியது. இதற்கு வாடகை ஒன்னும் கிடையாது அடுத்து செலவுகள் இல்லை என்பதைத் தாண்டி வேறு எந்தவிதமான பிரச்சனைகளும் இருக்காது. இதுவே வாடகைக்கு அப்படின்னு நமக்கு அடுத்த பிரச்சினையாக கரண்ட் பில், மெயின்டனன்ஸ், அப்படின்னு பல சிக்கல்கள் இருக்கு

குறிப்பாக ஏன் தேநீர் கடை?

ஏன் தேநீர் கடை அப்படின்னு யோசிச்ச, ஒரே ஒரு திருநங்கை மட்டுமே இதை எடுத்து சுலபமா நடத்தலாம் இன்னொரு ஆள் வந்து உதவி செய்யணும் அப்படின்னு அவசியம் இருக்காது. இதுவே ஒரு ஆளை வேலைக்கு வைத்து ஆனா அவங்க ஏதோ ஒரு காரணத்தினால் திடீர்னு வேலை செய்ய முடியாது. அப்படின்னு நிமிடங்கள் அந்த திருநங்கை உடைந்து வீட்டிலேயே முடங்கி எந்த விதத்துலயும் பிரச்சனை அப்படின்னா  வந்து விடவே கூடாது. ஒரே ஒரு ஆளும் தனியா நின்னு அவங்களால ஒரு சுய தொழில் வந்து இந்த மாதிரி செய்ய முடியும் அப்படி என்ற ஒரே காரணத்துக்காக தான் இந்த நடமாடும் டீக்கடை அப்படிங்கறது.

இதுபோல சுய தொழில் செய்யணும் அப்படின்னு நீங்க சொல்லும் போது உங்களுக்கு உதவி புரிந்தவர்கள் யார்?

இந்த மாதிரி சுய தொழில் செய்யணும் அப்படின்னு நான் யோசிச்ச போது என்னுடைய தோழிகள் மற்றும் பல என்று ஒத்துக்கல ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. அதுமட்டுமில்லாம திரைத்துறையில் இருக்க நடிகர் சமுத்திரக்கனி கடையின் திறப்பு நிகழ்வுக்கு வந்து அவங்க போட்டு கொடுத்தாங்க. ஐஎஃப்எஸ் இராஜேந்திரன் ஐயா அவங்களும் வந்தாங்க. என்னுடைய குருநாதர் மாஸ்டர் ஜெயராம் அவர்கள் வந்தாங்க.  அப்புறம் என்னுடைய சிலம்பம் கலை ஆசான் வந்திருந்தாங்க.

ஒரு கலைஞனாக எனக்கு கலைதான் உயிர். அதுதான் முதல்ல… இந்த தொழில் வந்து இரண்டாவது பட்சம் தான். நம்முடைய அத்தியாவசிய செலவுகளுக்கு சுயதொழில் செய்யணும் அப்படின்னு எழுத்தாளர் லெனின் அவர்களும் வந்து அவங்களுடைய சப்போர்ட் கொடுத்து இருந்தாங்க இவ்வளவு பெயர் அவங்களுடைய சப்போர்ட் கொடுத்தது தான் பெரிய பலமே.

அரசு இந்த மாதிரி சுயதொழில் செய்யும் திருநங்கைகளுக்கும், பெரும்பான்மையினரால் ஒதுக்கப்பதுபாவர்களுக்கும் எந்த மாதிரியான உதவி புரிய வேண்டும் அப்படின்னு நீங்க நினைக்கிறீங்க?

நிச்சயமாக அரசு வந்து எங்களுடைய கஷ்டங்களை புரிந்து கொண்டு அவங்க அதற்கு ஏற்றார் போல உதவிகள் செய்ய எழுகின்றது எங்களுக்கு மென்மேலும் ஊக்கமளிக்கும். இப்போது கடுமையான கடன் லெட்டர் வந்து எங்களுக்கு இன்னும் கிடைக்காமல் இருக்கு. அதனால என்னால தொழிலையும் முழு கவனத்தை செலுத்த முடியல அதற்காக அலைய வேண்டி இருக்கு. சோ, இந்த மாதிரியான விஷயங்களை அரசு இன்னும் கவனம் செலுத்தி எங்களுக்கு அளிக்க வேண்டிய உதவியை செய்தது என்றால் எங்களை அது மென்மேலும் ஊக்குவிக்கும்.

தேநீர் கடை  துவக்கியதற்கு பின்பு சமூகத்தில் தங்கள் நிலை எவ்வாறு மாற்றம் அடைந்து உள்ளதாக உணர்கிறீர்கள்?

சமூகத்தில் ஒரு நல்ல  நிலை ஏற்பட்டு உள்ளது என்பது உண்மையான ஒன்று தான். ஆனால் இந்த நிலை மென்மேலும் வளர வேண்டும். அதற்கான உழைப்பை என்றும் செலுத்திக் கொண்டே இருப்போம்.

தங்களை முன்னுதாரணமாகக் கொண்டு சாதிக்கத் துடிக்கும் திருநங்கைகளுக்கு உங்களின் கருத்து?

அவரவர்களுடைய  கல்வித்தகுதிக்கு, கலை ஆர்வத்திற்கு ஏற்றார் போல் எந்த ஒரு வேலையையும் மனதார புரிய வேண்டும்.

 

தங்கள் வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்து இதுவரை எங்களுடைய கேள்விகளுக்கு மிகவும் தெளிவாக பதிலளித்த ப்ரீத்திஷா அவர்களுக்கு அணியும் குழுவின் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி

வணக்கம்

 

– பிரியதர்ஷினி இளஞ்செழியன்

முதுகலை தாவரவியல் இரண்டாம் ஆண்டு

மெட்ராஸ் பல்கலைக்கழகம்

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன