தி உங்களை பற்றிய விவரங்களை எங்களுடன் பரிமாரிக்கொள்வீர்களா?

 

வணக்கம்,

கண்டிப்பா சொல்றேன்,

 

என் பெயர் ரதி, நான் பிறந்தது திருவாரூர் மாவட்டம், அப்பா உணவகம் நடத்திவந்தார் பிஸ்னஸ் சரியில்லாத காரணத்தால் ஊர் மாறவேண்டிய சூழல். வளர்ந்தது திருத்தணி, மண்ணார்குடி அருகில் உள்ள சென்னார்குடி ஊரில் LKG,UKG படித்தேன். திருவாரூர் பக்கத்துல தொடராசேரி ஊரில் 1ஆம் வகுப்பு முதல் படித்து வந்தேன்.  என் தந்தை ஒரு உணவகம் நடத்தி வந்தார், குடும்ப சூழல் காரணமாக ஊர் பயணம் மேற்க்கொண்டோம். திருவாரூரில் இருந்து பாண்டிச்சேரி அருகில் உள்ள மதகடி ஊரில் கடையை துவங்கினார் இப்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டோம். குடும்ப தொழில்னா உணவகம் மட்டும் தான், 5 முதல் 12  வகுப்பு வரை பாண்டிச்சேரியில் ஒரு பள்ளியில் படித்து வந்தேன். சிறுவயதில் இருந்தே ஆட்டோமொபைல் மீது எனக்கு மிகுந்த ஆர்வம்; அதற்கு காரணம் எங்க அப்பா தான் டிரண்ஸ்போடேஷன் போன்ற நிறைய தகவல்களை எனது தந்தை எனக்கு கற்று கொடுத்தார். அப்பாவிடம் அதிக உரையாடல் நடத்துவேன்; அவர் எலக்டிரீசியன் வேலை செய்தார் அவருடன் சேர்ந்து அந்த வேலையையும் பார்த்து வந்தேன்.

 

10 வயது முதல் எனக்குள் மாற்றமானது துவங்கியது, 12 வயசு அப்போ வீட்டில் இருக்க கூடிய பெண்களின் உடையை உடுத்த துவங்கினேன் எனக்கு கொஞ்சம் விவரம் தெரியல அப்போ. என்னிடம்  எங்க அம்மா சொல்லியிருக்கிறார் நான் சிறு வயதிலேயே புடவைகளை எல்லாம் இலுத்து போற்றிக்கொள்வேன் என்று. அப்போதான் புடவை மேலும் எனக்கு ஆசை வந்தது, பள்ளிகளில் கூட ஆண் பிள்ளைகளோடு அமர்வது பிடிக்காது பெண்பிள்ளைகளோடு சென்று உட்கார்ந்துக்கொள்வேன், ஆனா எனக்குள்ளே ஒரு கில்டா (Guilt) இருக்கும், இடம் மாறி உட்காந்தி இருக்கோம்னு.  பசங்களுக்கு சட்டை பேண்ட் தான் யூனிபாம் அதுகூட எனக்கு போட பிடிக்காது, பெண்களுக்கு சட்டை பாவாடை உடை தான் கொடுத்திருப்பாங்க அப்போ எனக்கு என்ன தோனும்னா நமக்கு இதுபோன்ற உடை கொடுக்க மாட்டாங்களானு நினைப்பேன். எனக்குள் இருந்த அந்த மாற்றங்களுக்கு மத்தியில் எங்க அப்பா மெக்கானிக்கல் ஆர்வத்தை தூண்டினார்.

இருந்தாலும் இந்த விசயத்தை பத்தி எங்க அம்மா அப்பா கிட்ட பேச நான் துவங்கவில்லை.

 

நீங்கள் உங்களுக்குள் உள்ளவற்றை தயக்கமன்றி கூறுங்கள், கண்டிப்பாக நீங்க இது பத்தியெல்லாம் பேசலாம், எப்போது இருந்து உங்களுக்கு இதுபோன்ற மாற்றம் ஏற்ப்பட்டது ?என்பதையும் பகிரலாம்.

 

எனக்கு நியாபகம் இருக்கு, என்ன அப்டினா பெண் குழந்தைகளுக்கு பொட்டு, பூ எல்லாம் வச்சி அலங்கரிப்பாங்கள்ள அப்போ, நானும் நினைப்பேன் நமக்கும் இப்படி அலங்காரம் பண்ணுவாங்களானு. வீட்டில் சிறு வயது புகைப்படம் எல்லாம் இருக்கு ஒரு மெமரியா வச்சிருக்காங்க. அம்மா வந்து பூ பொட்டு எல்லாம் வைக்கும் போது நான் கேட்டு அடம் புடிச்சிருக்கேனா அம்மா சொல்லி இருக்காங்க. கொஞ்ச நாட்களுக்கு முன்பு அம்மா அப்பா கிட்டபேசும்போது சொன்னாங்க.

 

நீங்க என்ன படிச்சீங்க? இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அதை பற்றி சொல்லுரீங்களா?

 

நான் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் எங்க பள்ளியில்  மேற்படிப்பிற்கு இரண்டு மூன்று பிரிவுகள் இருந்தது அப்பவே, ஆட்டோ மொபைல் பத்தின பிரிவும் என்னோட பள்ளியில் இருந்தது. என்னோட நண்பன் வந்துட்டு என்ன பிரைன் வாஸ் பண்ணினான் 1st குருப் எடுக்கலாம்னு அப்ப நானும் அவனும் கம்பியூட்டர் சைன்ஸ் குருப் எடுத்து படிச்சோம் ,  ஆனாலும்  எனக்கு ஆர்வம்  ஆட்டோமொபைல்ல தான் இருந்தது, அதுக்கப்பறம் செய்தித்தாளிள் கிடைக்க கூடிய வர்த்தக ரீதியான தகவல்கள், N TV அந்த தொலைக்காட்சியில் கார்& பைக் ஷோனு ஒரு ஷோ ஒளிப்பதிவாகும் அதுமட்டும் கொஞ்சம் கேர் எடுத்து பாப்பேன்.

 

அப்பறம் வந்துட்டு  மேனியூபேக்ஷர் (Manufacture) மேல அதிக ஆர்வம் வந்துடுச்சு, நான் +2ல எல்லாம் நல்லா படிக்கலா 10 ல  நல்லா படிச்சேன், 12ல அப்படியே மாறிட்டேன், ஏன்னா ஸ்கூல்க்கு போவேன் ஆனா அங்க போய்ட்டு நல்லா தூங்குவேன் காரணம் என்னனா அம்மாவும்,அப்பாவும் கடையில் தங்கிடுவாங்க. விட்ல வந்துட்டு நான்,தம்பி,பாப்பா  மட்டும் தான் இருப்போம் அவங்க எல்லாரும் தூங்கினதுக்கு அப்பறம் நான்  எழுந்திடுவேன் அப்போ வந்து அம்மாவோட துணிகள் எல்லாமே உடுத்தி பாப்பேன் சேலை எல்லாமே கட்டி பாப்பேன் இது வந்துட்டு தினமும் இரவு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அப்படி பண்ண மாட்டேன், ஏனா  அன்னக்கி அம்மா அப்பா எல்லாம் வீட்டில் இருப்பாங்க.  நமக்கு கல்யாணம்  நடந்தா எப்படி இருக்கும் அப்படி எல்லாம் நினைத்துப் பார்த்து தாலி கட்டி எல்லாம் அலங்கரித்து பாத்திருக்கேன், ஸ்கூல் படிக்கும்போதே.

 

+2 முடிச்சதுக்கு அப்பறம் நீங்கள் என்ன பண்ணுணீங்க?

 

+2 ல வந்துட்டு ஒரு அட்டம்டு கணிதப் பாடத்தை கொஞ்சம் கூட படிக்கவே இல்ல, அப்பா கிட்ட சொன்னேன் மேக்ஸ்ல நான் பெயில்னு; அப்பா அம்மா இரண்டுபேருமே எனக்கு ரொம்பவே சப்போட்(Support) பண்ணிணாங்க.ரொம்பவே ஒரு நல்ல அம்மா அப்பா. அப்பா கிட்ட சொன்னேன் நான் டியூஷன் போரேன்னு அட்டம்டு கிளியர் பண்ணணும் எனக்கு படிக்கனும்னு ஆசையா இருக்குனு, அப்பாவும் சேத்துவிட்டாங்க ஒரு வருடத்தில் படிக்க வேண்டியத நான் ஒரு மாசத்துல படிச்சேன்,  பாஸ் ஆகிட்டேன்.

 

சூப்பர் சூப்பர், உங்களோட கல்லூரி பருவத்தை பற்றி சொல்லுங்க.

 

பாண்டிச்சேரி யுனிவர்சிட்டில கௌன்சிலிங்(Councelling) நடக்கும் அங்க கௌன்சிலிங்க்கு எல்லாம் அப்லய்(Apply) பண்ணினேன் என்னோட அப்ளிகேசன் ரிஜக்ட் ஆகிருச்சு, அப்பறம் வேற காலேஜ் போடலாம் நெனச்சேன் எனக்கு வந்துட்டு மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் படிக்கனூனு ஆசை.  ஒரு இஞ்சினீயர் காலேஜ்ல  இருந்து போன் வந்தது நானும் போய் சேர்ந்து விட்டேன், எனக்கு கல்லூரி பீஸ்சே  வந்துட்டு ஒரு லட்சம் வரைக்கும் கேட்டாங்க. அப்பாவால அவ்லோ பணம் கட்ட முடியாது நாங்க  ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தான் அம்மா சமையல் பண்ணுவாங்க அப்பா பரோட்டா மாஸ்டர் இந்த வேலை பாத்துதான்  குடும்பத்தை நடத்திட்டு வந்தாங்க. நான் படிச்சது எல்லாமே தமிழ் மீடியம் ஸ்க்கூல்ல காலேஜ் ல பாத்தா எல்லாமே இங்கிலீஷ் ல தான் இருக்கு, எனக்கு கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்தது. என்னோட காலேஜ் பீஸ் கட்டுரதுக்கு அப்பா பணத்திற்காக அலஞ்சிகிட்டு இருந்தாரு, அப்பாவுக்கு என்னப்பத்தி நல்லா தெரியும் என்ன அவரு ரொம்ப நல்லாவே அனலைஸ்(Analyse) பண்ணிவச்சிருந்தாரு, நீ இஞ்சனீயரிங் படிக்க வேண்டாம் டிப்ளமோ படிப்பானு சொன்னாரு நான் தான் அடம் புடிச்சு இஞ்சினீயரிங்  சேந்தன்.

 

எனக்கு படிக்கவே பிடிக்கல, அப்பா எனக்காக ரொம்பவே கஷ்டப்பட்டாரு நான் காலேஜ் போகலனு சொல்லிட்டேன்,  அப்பா வந்துட்டு நீ காலேஜ் போ நான் உனக்கு பீஸ் கட்டுரனு சொன்னாரு, இருந்தாலும் எனக்குள்ள ஒரு கஷ்டம் அதனால நான் என்ன பன்னினேனா யாருக்கிட்டையும் சொல்லாம தாத்தா வீட்டுக்கு போய்டேன் , போய்டு நடந்த எல்லாத்தையும் தாத்தா கிட்ட சொல்லிட்டு ஒரு மாதம் அங்கயே இருந்துட்டேன், அப்புறம் கலேஜ் ல இருந்து டி சி வாங்கிட்டோம், டிசி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க எம்.எல்.ஏ சிபாரிசு இருந்துதான் தருவோம்னு சொல்லிடாங்கஅப்பாவும் எப்படியோ டி சி வாங்கிட்டாரு, என்னோட அப்பா தான் என்னோட ஹீரோ.

 

டிசீ வாங்கினதுக்கு அப்பறம் என்ன பண்ணுனீங்க?

 

அதுக்கு அப்பா  சொன்னது, சரிப்பா உனக்கு இங்கிலீஷ் தான் பிரச்சனை நீ ஸ்போக்கன் இங்கிலீஷ் கிலாஸ் போனு சொன்னாரு, எனக்கு விழுப்புரம் பக்கம் நானும் அங்க உள்ள சென்டர்ல சேந்திட்டு கிராமர் எல்லாம் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்ரம் அங்கேயே கம்யூட்டர் கோச்சிங் நடந்தது அப்பா கிட்ட கேட்டேன் அவரும் சேத்துவிட்டாரு கேட்னு (CAD) சொல்லுவாங்க கம்பியூட்டர் டிசைனிங் ஒரே நேரத்தில் இரண்டுமே முடித்தேன்.

 

ஒன்யியர் வேஸ்ட் பண்ணாம கொச்சிங் சென்டர் எல்லாம் போனேன், அடுத்த அகாடமி இயர் வரும்போது டிப்ளமோ காலேஜ் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன், 2 காலேஜ் மட்டும் தான் இருந்தது ஒரு காலேஜ் ல ரொம்பவே அதிகமாக பீஸ் கேட்டாங்க, வேற காலேஜ் ல விசாரிச்சாஅங்க அப்பா பட்ஜெட்கு ஏத்த மாதிரி இருந்தது எனக்கும் ஓகே னு தோனினது நான் அங்கேயே சேந்துட்டேன், நான் படிச்ச காலேஜ் பேரு  ஹயகிரிவா பாலிடெக்னிக் காலேஜ், காலேஜ் கும் வீட்டுக்கும் 5 -7 கிலோமீட்டர் இருக்கும் தினமும் சைக்கிள் ல தான் போவேன் டேரக்ட் 2nd யியர் தான் படிச்சேன் நல்லா கான்சன்டிரேட் பண்ணி படிச்சேன் அப்பவும் ஒரு அரியர் வந்துடுச்சுடேன் மேக்ஸ்ல தான் அதையும் அடுத்த செமஸ்டர்லயே கிளியர் பண்ணினேன். அட்டோமொபைல்ல கலேஜ் 1ச்டு வந்தேன், 6த் செமஸ்டர் நடக்கும் போது கலேஜ் ல கேம்பஸ் இண்டர்வியூ நடந்தது என்னோட பேரும் இருந்தது நானும் போயிருந்தேன் , சென்னைல உள்ள கம்பெனில இருந்து வந்திருந்தாங்க எப்படியாவது இந்த கம்பனிக்கு வேலைக்கபோகனும்னு ரொம்பவே ஹாட்வொர்க் பண்ணினேன், என்ன நானே ரெப்ரஷ் பண்ணிகிறத்துகாக புடவை கட்டிக்கிட்டு அலங்காரம் பண்ணிகுவேன்.

 

ஏன் நீங்கள் அந்த மாதிரி யெல்லாம் பண்ணிகிறீங்க?

 

எனக்கு பேண்ட்சட்டைலயே இருக்கிறது பிடிக்காது அதனாலதான்,  நம்ம மைன்ட் பிரியாகிருச்சுனா நம்ம அடுத்த அடுத்த வேளைய பாக்கலாம் அதான். நான் வந்து மென்டலி(Mentally) பெண் தான், நான் ஆண் கிடையாது . என்னோட மனசுல நான் பெணதான் அப்டின்னு ஓடி கிட்டு இருக்கும்.

 

இன்டர்வியூ க்கு 15 பேரும் போனோம் அதுல 2பேரு தான் செலக்ட் ஆனோம் அதுல நானும் ஒருத்தர். ஸ்டார்டிங்சேலரியே 11ஆயிரம் நல்ல ஒரு கம்பேனி எல்லாருமே என்கரேஜ் பண்ணிணாங்க, எனக்கு சென்னை போகனும்னு தான் ரொம்பவே ஆச, எங்க அப்பா என்ன பண்ணிடாருனா எங்க அம்மாவோட தங்கச்சி வீட்டுல விட்டுடாங்க கம்பெனி சென்னை ல இருக்கு. சித்தி வீடு மண்ணார்பேட்டைல இருக்கு கம்பெனிக்கு வாக்கிங் டிஸ்டன்தான் அதனால் சித்தியோ கட்டுப்பாட்டுக்குள்ளயே வளந்துட்டேன். சித்திக்கு 2 பெண்குழந்தைகள் அவங்க போடும் அந்த உடை அலங்காரம் எல்லாம் எனக்கும் பண்ணிக்கணூணு தோணும் இருந்தாலும் அப்பாவோட கவுரவம் அப்படினு என்ன நான் கட்டுப்படுத்திகிட்டேன்.

 

நீங்க ம ரீதியான ஒரு பெண் என்பதை உணர்ந்துடீங்க, ஆனா உடல் ரீதியா நீங்க ஒரு பெண் என்பதை எப்போ உணர்ந்தீங்க, நீங்க அதுக்கான முயற்சிகள் எப்போ எடுத்தீங்க?

 

6-7 படிக்கும் போதே தோனி இருக்கு நமக்கு ஒரு உறுப்பு இருக்கு அது எந்த ஒரு செயல்பாடும் இல்லாமலே இருக்குனு, அது மேலும் ஒரு வெறுப்பு, இருந்தாலும் என்ன பண்ணுறது கூடவே பிறந்துரிச்சு ஒன்னும் பண்ண முடியாது. எனக்கு இதனால் ரொம்பவே மன உளைச்சல் அதனால் 8 படிக்கும்போதே வீட்ட விட்டு போய்டேன் அப்பறம் தொரிஞ்சவங்க கொண்டு வந்து வீட்டுல விட்டுடாங்க. எனக்கு வந்து ஒரு மாதிரி இருக்கும் டெய்லி டெய்லி அது பாப்போம், பாத்துரூம் போகும் போது எல்லாம் பாப்போம் எனக்கு அது சுத்தமா பிடிக்காது, ஜென்ஸ் டாயிலட் தான் போவோம் எனக்கு கம்போர்ட்ஃபுல்லா(Comfortable) இருக்காது, அது ஏன்? தெரியல.

 

ஏனா நீங்க ஒரு பெண்.

 

உண்மை தான், அதனால எனக்கு ஒரு கம்போர்ட்ஃபுல் பீல் இருக்காது. நான் யூரின்காக போனாலும் பாத்துரூம் கதவ சாத்திகிட்டு தான் போவேன் அப்போ கொஞ்சம் எனக்கு ஓக்கே வா இருக்கும், நான் கம்போர்ட்ஃபுல்லா பீல் பண்ணுவேன்.

அப்பரம் கலேஜ் படிக்கும் போதே நான் இன்னர் வீயர்  எல்லாம் போட ஆரம்மச்சிட்டேன் பயந்து பயந்து தான் போடுவேன், எனக்குப் தனியா சேலை பிலவுஸ் இன்னர்வியர்ஸ் எல்லாமே வச்சிருக்கேன்.  என்னோட  தம்பி என்ன பயங்கரமான கண்காணிப்பான் வீட்டுல நிறைய தடவ சொல்லி இருக்கான்; அம்மா அண்ணா நைட் எல்லாம் தூங்க மாட்டான் புடவையை எடுத்து கட்டிக்குவான் அப்படினு நிறைய தடவ இது மாதிரி வீட்டுல சொல்லி இருக்கான்.

 

எனக்கு உடல் ரீதியா நான் எப்போ உணர்ந்தேன், நான் தாத்தா வீட்டில் திருத்தனில இருந்தபோது எனக்கு ஆட்டோமொபைல் இன்ட்ரஸ்ட் அதனால என்னோட சர்டிபிகேட் (Certificate) எல்லாம் எடுத்துகிட்டு அம்பத்தூரில் உள்ள ஒரு ஒரு ஆட்டோ மொபைல் ஆப்பிசா ஏரி இறங்கினேன். அப்போ எனக்கு முதல் முதலில் ஓரு சர்வீஸ் சென்டரில் வேளை கொடுத்தாங்க, அப்போ சம்பளம் 7000 ரூபாய் நான் அங்க சேந்துட்டேன். எனக்கு  இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் வரக்கூடாது நான் மன ரீதியா பெண்தான் ஆனா உடல் ரீதியா ஆணாக இருக்கனும், இது எனக்கு மன ரீதியான போராட்டம் இருந்தது.

 

இத எல்லாம் தகர்த்த திருத்தனிக்கும்  அம்பத்தூருக்கும் டெய்லி வந்துட்டு வந்துட்டு போவேன்,  என்ன காரணம்னா டிராவல் டைம்ல நான் அது பத்தி யோசிக்க மாட்டேன் டிராவல் ரொம்ப நேரம் அதனால தான். எனக்கு முகநூல் மூலமாக நண்பர்கள் கிடைத்தாங்க அவங்க சொன்னாங்க இங்க ரூம் இருக்கு நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம் வந்து சேலை கட்டிகலாம்னு சொன்னாங்க , அங்க போவேன் போய்டு டிரஸ் பண்ணிக்குவேன் இருந்தாலும் எனக்கு வெளியே வரத்துக்கு ஒரு பயம், திருத்தனி தாத்தா வீட்டுல இருந்து வந்துட்டு வந்துட்டு போவேன், எனக்கு கொஞ்சம் விவரம் தெரிஞ்சது என்னனா திருநங்கை னா பாலியல் தொழில் செய்வாங்க  இல்லனா கடைகளுக்கு போவாங்கனு எனக்கு அது மாதிரியான எண்ணம் வந்திட கூடாதுனு மட்டும் உறுதியா இருந்தேன். அப்படி போய்ட்டா நமக்கு, நம்ம பெற்றோர்களுக்கு உறவினர்களுக்கு தான் அசிங்கம்னு என்ன நான் வெளிப் படுத்திக்காமயே இருந்துட்டேன்.

 

எங்க கம்பேனிய 2 தடவ மாத்திட்டாங்க அதனால லொக்கேசன் எல்லாம் மாறிடுச்சு கடைசியாகப் கிண்டில டியுலாக்ஸ் மோட்டார் இருக்கு, தினமும் போயிட்டு போயிட்டு தான் வருவேன் அப்போ என்னோட எண்ணங்கள் மாறாது அப்படின்னு. அப்பறம் முகப்பேர்ல வீடு இருக்கிறதா போன் வந்தது நான் அங்கேயே தங்கிட்டேன், ஆப்பீஸ் முடிச்சிட்டு வரும்போது நான் பூ வாங்கிட்டு வருவேன், வீட்டுக்கு வந்துட்டு விக் வச்சிகிட்டு பூ வச்சி அலங்கரிச்சுப்பேன் ஒரு பெண்ணாகவே உணர்ந்தேன், நான் ஒரு கணவன் மனைவி வாழ்க்கை வாழ்ந்தேன் ஆனா அது சரியா முடியல, அவருக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையாகிருச்சு என்ன கிளம்புனு சொல்லிட்டாங்க, காரணம்என்னன்னு பாத்தா என்னோட பிரண்ட்ஸ் திங்க்ஸ் வைக்கிறத்துக்கு கொஞ்சம் அலோ பண்ணினேன். அப்பறம் வேற வீடு பாக்க ஆரம்பிச்சிட்டேன் தாம்பரத்தில் வீடு பாக்க ஆரம்பிச்சிட்டேன், வீடு பாக்கும் போது 5000ஆயிரம் தான் காசு வச்சிருந்தேன், எனக்கு ஒரு அண்ணா வீடு பாக்க ஹெல்ப் பண்ணினாங்க 1 வருசம் அங்க இருந்தேன், கிண்டில இருந்து அம்பத்தூருக்கு டிரான்ஸ்பர் பண்ணீடாங்க ஹைபிரீமியம்(High premium) வெகிக்கலாம் அந்த பிராண்ட், எனக்கு ஒரு அண்ணா ரொம்பவே உதவி பண்ணினாங்க.

 

இறுதியா நீங்க எப்போ வந்து, நான் முழுசா ஒரு பெண்ணா வாழனும்னு எப்போ நெச்சீங்க?

 

கிட்ட தட்ட நெருங்கிட்டேன், நான் வேலை செய்யும்போது திருநங்கை அம்மாவோட பழக்கம் கெடச்சது, நான் அவங்க கூட 7 மாதம் போனேன் அங்க எனக்கு வேலை வாங்கி கொடுத்தாங்க ஒரு பெண்ணாக அங்கிகரிச்சு, வேலைக்கு போறது பாத்தா சேலைல தான் போவோம், அப்பறம் கம்பெனி லாஸ் ஆகுற நிலைமைக்கு வந்துடுச்சு, அப்போ எனக்கு கொஞ்சம் கடன் பிரச்சினை நிறைய வர ஆரம்பிச்சிருச்சு. இன்னொரு பக்கம் எனக்கு சர்ஜரி பண்ணணும்னு ஒரு யோசனை. ரொம்பவே பிரஷ்ஷரா இருந்தது, அம்மா கிட்ட சொன்னேன் நான் சென்னை போறன் எனக்கு அங்க வேளை கிடைக்கும்னு சொல்லிட்டு நான் சென்னைக்கு கிளம்பிட்டேன் வேலை கிடைத்தது, நான் காப்பகத்தில் தங்கி இருந்தேன் 1 வாரம் தான் வேளைக்கு போனேன் அதுக்கு அப்புறம் எனக்கு ரொம்பவே மன உளைச்சல், அம்மா அப்பா தினமும் போன் பண்ணி பேச ஆரம்பிச்சுடாங்க, கடன் தொல்லை வேற.

 

கொஞ்ச காலகட்டங்களில் நீங்க அம்மா, அப்பா கிட்ட பேசாம இருந்தீர்களா?

 

ஆமா, ஆமாசரியா பேசுவது இல்ல; கொஞ்ச நாளைக்கு அப்பறம் அவங்க என்ன தேடி வந்துடாங்க.இதுக்கு முன்னாடி ஒரு சம்பவம் நடந்தது, நான் ஒரு திருநங்கை அம்மா வீட்டுல இருந்த போது அப்பா எனக்கு போன் பண்ணி தாத்தாக்கு உடம்பு சரியில்லை உன்ன பாக்கனூனு சொன்னாரு நீ உடனே கிளம்பி வானு

என்ன வரவைக்கிரதுக்காக பொய் சொன்னாரு, நானும் ஆப்பீஸ் முடிச்சிட்டு கிளம்பிட்டேன். என்ன சென்னை வடபழனிக்கு வரசொல்லிடாங்க அங்க ஒரு கார் ரெடியா இருந்தது, கார்ல் கடத்தீட்டு போற மாதிரி போராங்க, சித்தி வீட்டுக்கு கூட்டி டு போயிட்டாங்க எல்லாரும் ஒரே அழுக; நான் சொல்லிடேன் என்ன மன்னிசிருங்க அப்பா என்னால் இப்படி தான் இருக்க முடியும் நான் இப்படி தான் சொல்லிட்டு கிளம்பிட்டேன். அம்மா, அப்பா கிட்ட இப்படி நடந்துகிட்டோமேனு ஒரு மன உளைச்சல்.

 

ஆப்பீஸ் ஓனர் கிட்ட பேசினேன், நான் வீட்டுக்கு கிளம்புறேன் அம்மா, அப்பா வ பாக்கணும் முடிஞ்சா அங்கேயே தங்கிடுவேனு சொல்லீட்டு பாண்டிச்சேரிக்கு போயிட்டேன் வீட்டுக்கு போனா எல்லாரும் அழுறாங்க நானும் அழுறேன், அப்பா முடி யெல்லாம் வெட்ட சொல்லீடாரு மனசாற முடியெல்லாம் வெட்டிட்டு ஒரு ஆண்மாதிரி வாழ கத்துக்கிட்டேன். 1மாதம் அங்க இருந்தேன், மறுபடியும் என்னோட மனநிலை மாறுது, இயல்பான நிலைய தான் விரும்புகிறேன், என்னோட திருநங்கை நண்பர்கள் கிட்ட எல்லாம் போன் பண்ணி பேசுறேன் எனக்கு மன உளைச்சலா இருக்குனு தலையெல்லாம் வலிக்குது மெண்டல் பிரஷ்ர்ரா இருக்குனு. தெரியாதவர்கள் கிட்ட எல்லாம் பேசுவேன், முக நூல் மூலமா பழகினவங்கனு எல்லாருகிட்டயும் என்னோட ஆதங்கத்தை கொட்டி தீக்குறேன். அப்பா கிட்டசொல்லுறேன் நீங்க நினைக்கிற மாதிரி என்னால இருக்க முடியாது எனக்கு ஒரே மனஉளைச்சலா இருக்குனு. சிறு வயதுல இது மாதிரி பண்ணினப்போ பேய் பிடிச்சிருக்குனு நெனச்சுகிட்டு கோவிலுக்கு கூட்டிட்டு போனாங்க பேய் ஓட்டினாங்க; அது மாதிரியெல்லாம் பண்ணாதீங்க நாம மருத்துவ ரீதியாக போகலாம் சைக்கார்டிஸ்கிட்ட போகலாம்னு சொன்னேன். நானும் அப்பாவும் சைக்கியார்டிச்கிட்ட  போறோம் அப்பவும் எனக்கு ஒன்னும் சரியாகல அப்பறம் 2-3 டாக்டர் பாக்க போனோம், அப்பறம் எங்க வீட்டு பக்கத்துல இருந்த மெடிக்கல் காலேஜ் கேட்டு பாத்தோம்  அங்க சைக்கார்டிஸ்கிட்டபோயிட்டு என்னோட எல்லா பிரச்சனையையும் சொன்னேன், அப்பறம் அப்பாவ கூப்பிட்டு பேசினாரு டாக்டர் சொன்னாங்க இவங்களுக்கு மன ரீதியான பிரச்சினை தான் இது எங்களால் குணப்படுத்த முடியாது அவரால் மட்டும் தான் அது முடியும்னு அப்பா கிட்ட சொல்லிடாங்க, அப்பா டாக்டர் கிட்ட கேக்குறாரு  எப்படியாவது என்னோட பையன சரிபனீடுங்கனு.

 

அப்பறம்  டெஸ்ட் எல்லாம் எடுத்தாங்க மெடிக்கல் செக்கப் பண்ணினாங்க. எனக்கு பிளட் கவுண்ட் (Blood count)  ரொம்பவே கம்மியா இருக்குனு சொன்னாங்க, அதுக்கு அப்புறம் அப்பா என்ன பண்ண ஆரம்பிச்சுட்ராருனா மருத்துவ ரீதியாக மாத்த முடியுமானு மருந்து மாத்திரை கொடுத்து மாத்திடலாம்னு பாக்குறாங்கஅதுக்கு நிறைய டாக்டர்  தேடி அழையுராரு அதபாத்து எனக்கு கொஞ்சம் கஷ்டமாஇருந்தது,  எனக்கு தூக்க மாத்திரை கொடுத்திருந்தாங்க  நான் என்ன பண்ணிட்டேன் எல்லா மாத்திரையும் போட்டுகிட்டேன் பாக்ஸ் பக்கத்துல வச்சிகிட்டு ஒக்காந்திட்டேன்,தம்பி வீட்டுக்கு வந்தான் நான் கொஞ்சம் கான்சியஸ்சான(Conscious) நிலையில தான் இருந்தேன் தம்பி என் கிட்ட பேச ஆரம்பிக்குறான் நான் மயக்க நிலைக்கு கொஞ்ச கொஞ்சமா போறேன், தம்பி அப்பாக்கு போன் பண்ணி சொல்லிடான், நான் எந்த ஹாச்பிட்ல்ல  டிரீட்மன்ட் பாத்தேனோ அங்கேயே கூட்டிடு போய்டாங்க, ஓவர் டோசேஜ் னு போலீஸ்கு  சொல்லிட்டாங்க, மாத்திரை எல்லாம் வெளியே எடுத்தாசு. போலீஸ் கேக்குறாங்க நீங்க திருநங்கை, திருநங்கையா இருக்க விருப்பமாவிருப்பமானு கேட்டாங்க விருப்பம்னு சொல்லிட்டேன் மயக்க நிலையில தான் இருக்கேன், 20நாள் சைக்கியார்டிஸ்ட் வார்டு தான் இருக்கனும்னு சொன்னாங்க அங்கேயே இருந்தோம் அப்பறம். சென்னை போனா வேலை  கிடைக்கும்னு எப்படியாவது மறுபடியும் சென்னை வர முடிவு பண்ணிட்டு  மறுபடியும் சென்னை கிளம்பி வந்துட்டேன்.

 

ஓஓ.. அதுக்கு அப்புறம் நீங்க ஒரு திருநங்கையா வாழ தொடங்கிட்டீங்களா?

 

ஆமாம், நான் வந்து என்னோட அம்மா அப்பா க்கு ஒரு பெரிய துரோகம் பண்ணி இருக்கேன், அது என்ன பண்ணினாலும் மறக்கவே முடியாது.

 

இத நீங்க துரோகம்னு சொல்ல முடியாது, ஏனா இது இயல்பு உங்க பெற்றோர் தான் இத புரிந்துக்கொள்ள வேண்டும்.

 

அவங்களுக்கு தெரியும் நான் சின்ன வயசுல இருந்து இப்படி பன்னுறது எல்லாம் அவங்களுக்கு தெரியும் பொடவை கட்டுவது அலங்காரம் பண்ணுறது எல்லாமே தெரியும் ஆனால் அவங்கலால அது ஏற்றுக்கொள்ள முடியல. நான் ஒரு முழு திருநங்கையா இருந்தது. போலீஸ் திருநங்கை காப்பகத்தில்ல இருந்தப்போ திலோத்தம்மாவ பாத்தேன் அவங்க கிட்ட எல்லாமே சொன்னேன் ரெசியூமே(Resume) கொடுத்தேன் ஸ்பான்சர் க்கு வருவாங்க காப்பகத்துல அங்க வரவங்ககிட்ட எல்லாம் ரெசியூமே கொடுப்பேன், 100 ஜெராக்ஸ் காபி எடுத்து வச்சிருப்பேன் ரெசியூமே மட்டுமே. வேலைக்கு போகனூனு முடிவு பண்ணிடேன், நடந்த பிரச்சனை நான் ஒரு இஞ்சினீயர் பிரபஸ்னல் (Professional) அப்படிங்குறதயே மறந்துட்டேன். பெங்களூர்ல எனக்கு ஒரு வேலை கிடைச்சது அங்க போய்டேன். எனக்கு மெக்கானிக்கல் மேல ரொம்பவே ஆர்வம் ஆனா அதுல எனக்கு வேலை கிடைக்கலாம் 1 மாதம் எப்படியோ போயிருச்சு ஆனாலும் எனக்கு டிப்பிரசன்(Depression) தான், அப்பா போன் வாங்கி கொடுத்திருந்தாரு அது எல்லாம்  போட்டு ஒடச்சுடேன் கோவம் தாங்காமல், ஒடனே  ஒரு போன் வாங்கினேன் இப்ப வரைக்கும் அதுதான் வச்சிருக்கேன், போன் ஒடச்சிட்டு ஒரே அழுக அப்பறம் கொஞ்ச நேரத்துல நானே ரிலாக்ஸ் ஆகிடேன், கவர்மென்ட் திருநங்கைகளுக்கு எல்லாம் வேலை வாய்ப்புகள் இருக்குனு அறிவிச்சாங்க.

 

நான் என்ன நினைச்சேனா நாம ஏன் முன்னாடி வேலை செஞ்ச கம்பெனில வேலை பாக்க கூடாதுனு யோசிச்சேன் , அப்போ ஒரு ஆணா வேலைப் பாத்தேன் இனிமே திருநங்கையா வேலைப்பாக்கனூனு நெனச்சேன், நானும் என்னோட எல்லா டாக்குமன்டையும் எடுத்துகிட்டு எங்க ஆப்பீஸ் ஹெச்சார் கிட்ட சம்மிட் பன்றேன்.

 

அவரு என்ன சொன்னாரு நீங்க திருநங்கைனு நாங்க ஒத்துக்கிறோம் ஆனா இன்னம் கொஞ்ம் டாக்கிமன்ஸ் நீங்க சப்மிட் பண்ணனும்னு சொல்லிடாங்க, உங்களுக்கு வேளை எல்லாம் இருக்கு ஆனா நீங்க ரதிங்கிர பேரும் இன்னம் டாக்கிமன்ட்ஸ் சம்மிட் பண்ணனும்னு சொன்னாங்க. அப்பறம் எல்லாதுலயும் ரதினு பெயர் மாற்றம் செஞ்சிட்டேன். ஓடஐடியும் டிரைவிங் லைசென்ஸ் இரண்டு மட்டும் எடுக்க முடியல. பாண்டிச்சேரில கேன்சல் பண்ணிட்டு தமிழ்நாட்டில் எடுத்து கோங்க அப்படினு சொல்லிடாங்க, அப்புறம் இருந்த எல்லா டக்குயுமட்டும் சம்மிட் பண்ணிடேன், அவங்க சொன்னது நாங்க ஹையர் அபீஸ்கு மெயில் போடுறோம் அவங்க ரிப்பிலே பண்ணிணா நீங்க வேலைல சேந்துகலானு சொல்லீடாங்க. அப்பதான் எனக்கு ரொம்பவே பினாஸ்சியல் பிராப்ளம் இருந்தது, அப்போ எனக்கு உதவி பண்ணினது திலோத்தம்மா தான். நாங்க சாப்பிடும்  இடத்தில வேலையே இல்லாம இருந்தாலும் எனக்காக அவர்கள் அங்க ஒரு வேலைய வாங்கிக் கொடுத்தாங்க, கொஞ்ச நாளைக்கு அப்பறம் சமையலுக்கு ஆட்கள் இல்ல அப்பறம் சமையல் பண்ண சொல்லீடாங்க, நல்லா வேலை செஞ்சேன் நல்லா கேர் எடுத்துகிட்டு என்ன ரொம்ப நல்லா பாத்துகிட்டாங்க, கொரோன காலக்கட்டத்தில என்க்கு ரொம்பவே உதவி பண்ணினாங்க எனக்கு தேவையான எல்லாமே கிடைச்சது, அத வச்சிகிட்டு தான் எனக்கான தேவைகளையும் நான் பாத்துகிட்டேன்.

 

அந்த மெயில் ரிப்பிலே என்ன ஆச்சு?

 

நானும் போன் பண்ணி போன் பன்னி பேச ஆரம்மிச்சுடேன், ஹையர் ஆபிசர் போன் நம்பர் வரைக்கும் வாங்கிட்டேன், நான் தினமும் போக ஆரம்பிச்சுட்டேன் நான் திருநங்கை உங்க பழைய எம்பிலாய்னு சொல்லிடே இருந்தேன், அப்போ தான் அவங்க மனசுல பதியும்னு, கொரோனா காலகட்டத்தில் நான் கால்பண்ணிடே இருந்தேன், ரிப்பிலே வரல வெயிட் பண்ணுங்க இதே தான் சொன்னாங்க, நம்பிக்கையா பேசினாங்க. நான் முதல்ல வேலை ரிசைன் பண்ணும்போது மேனேஜர் காரணம் கேட்டாரு நான் அப்போதே எல்லா உண்மையும் சொல்லிடேன், நான் ஒரு திருநங்கை என்னால இப்போ வேலை பாக்க முடியல நான் வீட்டுக்கு போறேன் அப்படினு சொல்லிடேன், அவர் சொன்ன ஒரே வார்த்த உனக்கு எப்போ என்ன உதவினாலும் என்கிட்ட கேளு நான் செய்யுறேனு சொன்னாரு, அப்போ சொன்னது எனக்கு நியாபகம் வந்தது நான் அவர்கிட்ட போய்டு கேட்டேன் எனக்கு இப்போ வேலை வேணும் நான் உங்க பழைய எம்பிலாயிதான், நான் ஒரு திருநங்கை எனக்கு வேளை கொடுங்கள் உரிமையோடு கேட்டேன். அவங்களும் ஏத்துகிட்டாங்க, பணிவாவும் கேட்டேன் கொஞ்சம் தொல்லையும் பண்ணினேன்.

 

அப்பறம் உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா?

 

கொரோனா முடிஞ்சு தளர்வுகள் கொண்டு வந்தாங்கள்ள அப்போ மறுபடியும் தொல்ல பண்ண ஆரம்பிச்சுட்டேன். மேனேஜர்க்கு போன் பண்ண ஆரம்பிச்சுட்டேன், அப்பறம் கம்பெனிக்கும் போக ஆரம்பிச்சுட்டேன் திருநங்கையா என்ன யாரும் பார்த்தது இல்ல கம்பேனில, வாச்மேனும் உள்ள விட மாட்டாங்க அப்படி போனா அதனால, ஒரே ஒரு பேன்ட் சட்டை மட்டும் வச்சிருப்பேன் கம்பேனிக்குள்ள போய்டு வரதுக்குக் வச்சிருந்தேன் உள்ள போன உடனே எல்லாரும் என்ன பத்தி விசாரிச்சாங்க என்ன நடந்தது? ஏன் வேலைவிட்டு போனனு? நானும் எல்லாமே சொல்லிடேன். அங்க நான் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆகல, என்ன காரணம்னா மேனேஜர் கிட்ட நான் போனது க்கு அப்பறம் என்ன பத்தி கேட்டுருக்காங்க அவரும் நடந்த எல்லாத்தையும் சொல்லிடாரு. நான் கம்பேனி  போகும் போது யாருமே ஏன் கூட வேலை செஞ்சவங்கலே இல்ல எல்லாரும் புதுசு, ஒரே ஒரு பையன் இருந்தான் அவனும் புரிஞ்சுகிட்டான், நான் கம்பேனி விட்டு வெளியே போனப்போ எல்லாரு கிட்டையும் போன்ல பேசும் போது நான் ஒரு திருநங்கைனு சொல்லி இருக்கேன்.

 

உங்களுக்கு எப்போ வேலை கிடைத்தது?

 

நவம்பர் 5 எனக்கு வேலை கிடைத்தது,  இன்னமும் அதே வேளையில தான் இருக்கேன், கம்பேனில ஒரு சில விதிமுறைகள் மட்டும் வச்சிருக்காங்க நீங்க இப்படிதான் வரனூனு, ஏனா என்ன பையனா பாத்திருப்பாங்க திடீர்னு ஒரு திருநங்கையா பாக்க முடியாது அப்படினு, நான் என்ன பண்ணினேன் எல்லாருக்கிட்டையும் என்கூட வேலை பாக்குறாவங்க எனக்கு மேல் அதிகாரி னு எல்லாருகிட்டையும் நான் ஒரு திருநங்கை னு சொல்லி அவங்க மனசுல பதிய வைக்க ஆரம்பிச்சுட்டேன். அதையும் மீறி மூக்குத்தி எல்லாம் குத்தீட்டு போனேன், டிரஸ் கொஞ்சம் பிரச்சனை வந்துருச்சு, பாத்துரூம் பிரச்சனை வர ஆரம்பிச்சது, அப்புறம் கொஞ்சம் எல்லாருகிட்டயும் பேசி பாத்துரூம் பிரச்சனையையும் சரி பண்ணியாச்சு, நான் லேடீஸ் டாய்லட்டே யூஸ் பண்ண ஆரமச்சுட்டேன் அங்க இருந்தவர்களுக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது அவங்க என் கிட்ட எதுவுமே கேக்கல வேற ஒரு மேனேஜர் கிட்ட கேட்டாங்க அவங்க என்ன சொன்னாங்கனா, அவரு சொல்லிடாரு அவங்க அப்படி தான் அவங்க அப்படி தான் இருப்பாங்க னு சொல்லிடாங்க.

 

இப்போ ரதி என்னவாக வேலை செய்யுரீங்க?

 

டெக்னீசியன்  வேலை பாக்குறேன்.

 

திக்கு சிறுவயதில் ஏதேனும் வன்முறை நடந்துள்ளதா ? பாலியல் தொந்தரவு அது மாதிரி?

 

இல்ல அது மாதிரி எதுவும் நடந்தது இல்ல,  நான் யாருகூடையும் பேச மாட்டேன் பசங்க கூடும் பொண்ணுங்க கூடும் யாரு கிட்டையும் பேச மாட்டேன் தனிமையிலதான் இருப்பேன், எல்லாருக்கும் தெரியும் நான் தனிமைய விரும்பக்கூடிய ஒரு கேரக்டர்னு, இல்லனா செவனேனு தூங்கிடுவேன்.

 

அடுத்த கேள்வி உங்களின் வாழ்கையில் காதல்?

 

3வயசுலயே காதலிச்சிருக்கேன், என்னோட முதல் காதல் நான் முன்னாடி சொன்னேனே நான் ஒருத்தர் கூட இருந்தேனு அதுதான். அவரு இப்ப பேசுவாரு ஆனா காதல் எல்லாம் கிடையாது, அப்ப அப்ப மின்னல் மாதிரியெல்லாம் காதல் வந்திருக்கு ஆனா எனக்கு அப்ப தான் புரிந்து நாம ஏமாற்றம் அடைஞ்சிருக்கோம்னு. அப்பரம் எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தவங்க அவங்களே வந்து பிரப்போஸ்  பண்ணிணாங்க கொரோனாகாலக்கட்டத்தில்தான் தினமும் போன் பண்ணி பேசுவாங்க நாளாக நாளாக எல்லாமே கொரஞ்சுருச்சு, அவங்க போன் பண்ணலனாலும் நானே பண்ணுவேன் ஆனா அவங்க எடுக்கலனாக, அப்பறம் நானே புரிஞ்சுகிட்டேன் சரினு விட்டுடேன்.

 

திருமணம் பத்திசொல்லுரீங்களா, அதாவது திருநங்கை வாழ்கையில் திருமணம் என்பது சாத்தியமா?

 

கற்பனை வளர்ச்சி தான், ஒருவர் கூட திருமணம் நடந்து தாலி எல்லாம் கட்டினார், அதுதான் முதல் திருமண வாழ்கை முதல் காதல் அது சரியா அமையலாம், அப்பறம் நான்  அத அப்படியே விட்டுடேன் நம்ம வாழ்கை இப்படிதானு நானே ஏத்துகிட்டேன்.

 

காதல் தோல்விகள் அதனால பல திருநங்கைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

 

நாம ஒரு திருநங்கைனு தெரிஞ்சு நம்ம பெற்றோர்கள் எல்லாம் விட்டுச் நமக்கான வாழ்கையை வாழ்வதற்காக தான் வெளியே வறோம் அப்படி தைரியத்தோட வர தெரிஞ்ச நமக்கு யாருமே தெரியாத ஒருத்தர்காக அவள் நாள் பக்கமாக இருந்தாலும் சரி அவர்களுக்காக உயிர எல்லாம் விடக்கூடாது, நம்மை கேலி கிண்டல் பண்ணினவங்க முன்னோடி எல்லாம் நல்லா வாழ்ந்து காட்டனும், காதல் எல்லாம் அடுத்த விசயம், நம்ம பெற்றோர்கள் பெருமையா நினைக்கும் எங்க இருந்தாலும் நம்ம பிள்ளை நல்ல படியாக வேலை செஞ்சு நல்லா வாழ்றானு நினைக்கனும். தவறான வேலைக்கு போகாம நல்ல வேலைல இருக்காங்க அதுதான், நான் என்ன வேலை செய்யுறேன் எங்க வேலை பாக்குறேன் எல்லாமே எங்க வீட்டிக்கு தெரியும்.

 

உங்க வாழ்க்கையில் ரொம்ப வருத்தப்பட்டஒரு நிகழ்வு அது என்னனு சொல்ல முடியுமா?

 

எங்க அம்மா, அப்பாவ  விட்டுட்டு  வந்தது அதுதான்.

 

அதே மாதிரி சந்தோசமான தருணம் எது உங்களுக்கு?

 

முதல் காதல் முதல் வாழ்க்கை அதுதான், ரொம்பவே நல்ல சந்தோசமான தருணம். அது சரியா அமையலாம் இப்பவும் அந்த ஏக்கம் இருக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமையலையேனு ஒரு வருத்தமும் இருக்கு.

 

நீங்க ஒரு திருநங்கையா இருக்கீங்க, இப்போ உங்க திருநங்கை சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்குறீங்க, தாவது ஒரு விடயம் இருக்கும் அதே சொல்லுரீங்களா?

 

தன்னம்பிக்கை வேணும், சுய கௌரவம் யாரு கிட்டையும் கையேந்தகூடாது நம்ம உடலை விற்று நம்ம வாழனம்னு அவசியமில்லை, படிப்பு ரொம்பவே முக்கியம்.

 

நீங்க பலருக்கு முன்உதாரணமா இருக்கீங்க, அதுமாதிரி நீங்க யார பாத்து இன்ஸ்பையர் ஆகி இருக்கீங்க?

 

எங்க அத்தை திலோத்தம்மாவ, என்னோட சகோதரி அக்னிஷா, மதுரா என் கூட இருக்கும், ஜெயா ஆன்டி அவங்க ரொம்பவே ஒரு உதாரணமாக இருந்தாங்க, அப்பறம் கமலி, ஆதித்தியா சிவசாமி.

 

நீங்க சொன்ன ஐந்து பெயரையும் நான் நேர்காணல் பண்ணி இருக்கேன், எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு இவங்க எல்லாம் உங்க ரொல்மாடல்னு சொல்லுரப்போ. நான் அடுத்து வேற யாரையாவது இன்டர்வியூவ் பண்ணும்போது உங்களபத்தி சொல்லுவேன்.

 

அவங்களும் போராடி வந்தவங்க தான், கார்பிரேஷன்ல முதல் திருநங்கையாக வேலைப்பாக்குறாங்க வாழ்க்கையவும் ரன் பன்னுராங்க.

என்னோட முதல் அறிமுகம் கமலிதான், திருநங்கை காப்பகத்துல கிடைத்த ஒருவர்.

என்ன வழிநடத்தினவங்க என்னோட நல்ல ஒரு துணையாவும் இருந்தாங்க. என்ன வேலைக்கு தூண்டினது  என்னோட நண்பன் ஆதித்தியா சிவசாமி என்ன ரொம்பவே மோட்டிவேட் பண்ணினான். சில நேரத்துல சில பேரு நமக்கு ஒரு உறுதுணையா இருப்பாங்கள்ள அப்படிதான் இவங்க எல்லாரும்.

 

இந்த பொது சமூகத்திற்கு திருநங்கை இல்லாமஇந்த சமூகத்திற்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

 

திருநங்கையாக இருந்தாலும்யாரா இருந்தாலும் அவங்கள ஒருமனிதரா பாருங்க.திருநங்கை, திருநம்பி யாருமே வேற கிரகத்துல இருந்து வரல அவர்களையும் மனிதர்களாக பாருங்கள். சமூகம்மேலையும் நிறைய தரவுகள் இருக்கு பெற்றோர்கள் ஏத்தக்கலனா சமூகம் ஏத்துகனும், அது இப்போ கொஞ்சம் மாறிட்டு வருது படிச்ச திருநங்கை வேலைக்கு போறாங்க, வேலைகள் தேடுறாங்க.

சமூகமும் மாறனும் திருநங்கை சமூகமும் மாறனும்.

 

ரொம்பவே நல்லா இருந்தது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது உங்க கூட பேசினது. எங்களுக்காக நேரம் ஒதுக்கி பேசினதுக்கு ரொம்பவே நன்றி, எப்பவும் அனியனோட இணைந்து இருங்க.

 

— சஜீதா

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன