காலத்துக்குக் ஏத்த மாதிரி மனுசங்க மனசு மாறுதோ இல்லையோ ஆனால் போடுகிற உடையும் நடையும் மாறிக்கிட்டேதான் இருக்கும் ஆனாலும் என்னவோ அவங்களுக்கு சில விசயங்களை மாத்திக்க மட்டும் மனசு வரவே வராது.ஏனு கேட்டா அதான் இந்த உலகத்தோட நியதினு கிளாஸ் எடுப்பாங்க.

அந்த மாதிரி ஒரு நடைமுறை தான் குழந்தை பெத்துக்குறதும்.

நாகரிகம் அடையறதுக்கு முன்னாடி இப்போ இருக்க மாதிரி அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி அக்கா தம்பி அம்மா அப்பா போன்ற எந்த ஒரு உறவுமே இருந்ததில்லை மாறாக அவங்களுக்கு புடிச்சவங்க கூட குழந்தை பெத்துக்கலாம்.

 

இப்படி பல நடைமுறைகளில் இருந்து கடந்து நம்ம இப்ப இருக்க இந்த உலகத்துல வாழ்ந்து வந்துட்டு இருக்கோம்.

 

இந்த உலகத்துல இப்ப என்ன மாதிரியான விதிமுறைகள் இருக்குனா

ஆணும் பெண்ணும் குழந்தை பெத்துக்கறதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்.

அதே நேரத்துல ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் போது அவங்களுக்கு குழந்தை பிறக்கலனா எஅந்த ரெண்டு பேர பொதுவான மக்கள் எல்லோரும் ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல நடத்துவாங்க .

 

ஒரு காலகட்டத்துல அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு ஆணுக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வைக்கவும் செஞ்சாங்க .

அந்த செயல் இன்னமும் நடைமுறையில் இருந்து தான் இருக்கு .

இப்போ ஏதோ கொஞ்சம் முன்னேறி அறிவியல் கைகொடுத்து கருத்தரிப்பு மையம் அப்படிங்கற ஒரு மருத்துவமனைக்கு போயி டெஸ்ட் டியூப் பேபி போன்ற நடைமுறைகளில் குழந்தையை பெத்துக்குறாங்க.

 

ஆண் பெண் இரண்டு பேரில் யாருக்கு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு அதை சரி செஞ்சுக்கிட்டு சந்தோஷமா வாழுறாங்க .

கருத்தரிப்பு மையம் போனா குழந்தை பெத்துக்கலாம் அப்படிங்கற ஒரு ஐடியாலஜி பொதுவான மக்களுக்கு வந்துருச்சு.

 

ஆனா இதே நடைமுறையை ஒரு பால் புதுமையின மக்கள் செஞ்சா அவங்கள இந்த அக்செப்ட் பண்ணிக்கவே மாட்டாங்க.

 

 

ஏன் ஒரு ஆணும் ஆணும் சேர்ந்து வாழும் போது ஒரு பெண் மூலம் இவங்களோட விந்தணுக்களை வைத்து அவங்களுக்கு புடிச்ச மாதிரியான ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது ஏன் இந்த உலகம் ஏத்துக்க மறுக்கிறது.

 

 

நீங்க என்னவோ பண்ணுங்க பா அப்படின்னு ,

 

 

இந்த உலகமே ஆண் பெண் என்ற இரு உயிரிகள் இணைந்ததால் தான் உருவாகியது.

அந்த ஆண் மற்றும் பெண்ணை படைத்தது இந்த உலகை படைத்த கடவுள் ‌

அவரின் கட்டளைப்படி ஆண் பெண் இணைந்து தான் இனவிருத்தி நடைபெற வேண்டும் என்று கூறியவர்களின் சொற்களை காதில் போட்டுக்காம தனது மகனின் ஆசையினை நிறைவேற்றி அவருக்கா ஒரு குழந்தையையும் பெற்றெடுத்த தாயையும் இந்த உலகம் தாங்கிதனே நிற்கின்றது.

 

அட ஆமாங்க தன்னோட பையனுக்காக தான் பையனும் சுமந்த அதே வயித்துல தன்னோட பேர குழந்தையை பெத்து எடுத்திருக்காங்க அமெரிக்காவின் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தைச் சேர்ந்த செசிலி எலெட்ஜ் .

 

இவரோட மகன்தான் மேத்யூ எலெட்ஜ் அவர் ஆசிரியராகப் பணியாற்றிற்ட்டு இருக்காரு.

அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் .அவருக்கு அதே பகுதியில வாழுற  hair stylist  இலியட் டாஃபெர்ட்டி என்பவரோய காதல் மலர்ந்தது.

 

அந்த காதலின் தொடர்ச்சி நீண்டு ரெண்டு பேரும் கல்யாணம் பன்னிக்க முடிவு செஞ்சாங்க.அதை மேத்யூ வேலை பார்க்கிற ஸ்கூல்ல சொல்லும் போது

ஸ்கூல்ல இருந்து அவரை வேலையை விட்டு நிப்பாட்டிட்டாங்க.

 

இது அவர் வாழ்க்கையில விழுந்த பெரிய ஒரு துயரமான சம்பவமா மேத்யூக்கு அமைந்தது.

 

ஏன்னா ரொம்ப வருஷமா வேலை பார்த்துட்டு இருந்த ஸ்கூல்ல இருந்து தான் ஒரு ஆண கல்யாணம் பண்ணிக்இ போறதால  தன்ன வேலையை விட்டு நீக்கிட்டாங்களே அப்படிங்கிற மனம் வருத்தம் இறுதியாக அவரை என்ன பண்ணுச்சுன்னா பொதுவெளியில் அவரை போராட தூண்டிவிட்டுச்சு.

இத பத்தி பொது வெளியில் அவர் கூறும் பொழுது அவருக்கு ஆதரவாக பல பேர் குரல் கொடுத்தாங்க.

 

கையெழுத்து இயக்கம் மூலம் பெரிய சப்போர்ட் மேத்யூக்கு கிடைத்தது.

 

இறுதியா அவங்களோட திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது .

 

திருமணம் முடிந்த ஆறு மாசத்துல அவங்க இருவரும் ஒரு முடிவு எடுக்குறாங்க.

அது எந்த முடிவுன்னா ஒரு குழந்தை பெத்துக்கணும் அப்படிங்கிற முடிவு .

 

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கர்ப்பப்பை வேணும்ல .

அவங்க ரெண்டு பேருக்கும்தான கர்ப்பப்பை இல்லையே.

 

அதனால என்ன வாடகை தாய் மூலம் குழந்தை பெத்துக்கலாமே அப்படிங்கற முடிவுக்கு இரண்டு பேரும் இறுதியா வந்தாங்க.

 

இந்த குழந்தை வேணும்கிற ஒரு தகவல மேத்யூயோட  அம்மா கிட்ட போய் சொல்றாரு.

அவங்க அம்மாவும் தான் மகனுக்காக என்ன வேணா செய்ய நான் காத்திருக்கேன் அப்படிங்கிற ஒரு நம்பிக்கையை  கொடுத்தாங்க .

 

மேலும் நானே உங்களுக்கு வாடகை தாயா வந்து குழந்தை பெத்து தரேன் அப்படின்னு தன்னோட முடிவை மேத்யூ கிட்ட சொல்ல மேத்யூ அவரோட இணைரும் அந்த முடிவை கேட்டு சிரித்ததா மேத்யூ ஒரு இன்டர்வியூல பதிவு செஞ்சிருக்காங்க.

மேலும்

அவருடைய உடல்நிலை இதுக்கு ஒத்து வருமா அப்படிங்கறது ஒரு பெரிய கேள்விக்குறி.

 

ஆனாலும் அவர்கள் எடுத்து அந்த முடிவு வந்து தன்னோட மகன் மேல உள்ள அந்த உணர்வுபூர்வமான பிணைப்பதான் எல்லாருக்குமே வெளிப்படுத்தி இருக்கும் .காரணம் அந்த வயதுலயும் அவரோட அந்த ஒரு முடிவு அவரோட உயிருக்கே ஆபத்தான அமையலாம் அத தாண்டி அந்த இடத்துக்கு தான் மகனுக்காக வர சம்மதிக்கிற தாயே இந்த உலகத்துல இருப்பாங்களா அப்படிங்கற ஒரு கேள்வியின் பதிலா தான் அந்த முடிவு அமைஞ்சிருக்கு.

 

 

மேத்யூ  தன்னோட அம்மாவே எனக்கு வாடகைதாயா வர

விருப்பம் தெரிவிக்க

அவரோட தாயான செசிலியோட உடல்ல பல சோதனைகள் மேற்கொண்டு இறுதியாக டாக்டர் எல்லாரும் ஓகே இவங்களே உங்களுக்கு வாடகைதாயா வரலாம் என சம்மதம் தெரிவிக்க,

இறுதியாக மேத்யோட அந்த விந்தணுக்கள் எடுத்து செசிலியோட அந்த கருப்பைகுள்ள செலுத்தி டெஸ்ட் பேபிய வளர வச்சு இறுதியா ஒரு மகளை பெற்றெடுக்குறாங்க.

 

 

 

இந்த முடிவுக்காக செசிலி தன்னோட மற்ற இரண்டு பிள்ளைகளிடம் இருந்தும் பல எதிர்ப்பை வாங்கிக்கிறாங்க.

 

அது மட்டும் இல்ல அவங்க வசிக்கிற இடத்தில் இருக்க மக்கள் எல்லாரும் தன்னோட மகனுக்காக தாய் குழந்தை பெற்றாளா அப்படிங்கற பல வெருப்பின் வெளிப்பாட்ட கொட்டி தீர்த்து இருக்காங்க.

 

அதெல்லாம் கொஞ்சம் கூட காதுல போட்டுக்காம தன்னுடைய மகனோட எதிர்காலம் தான் முக்கியம் அவனோட அந்த மகிழ்ச்சி தான் முக்கியம் அப்படிங்கிற ஒரு எண்ணத்திலிருந்து கொஞ்சம் கூட மாறாம ரொம்ப மகிழ்ச்சியாகவே அந்த மகளை ரொம்ப ஆரோக்கியமா பெற்றெடுத்து தன்னோட மகனோட கைல கொடுத்தாங்க.

மத்தவங்க சொல்றதெல்லாம் ஏன் நம்ம காதுல வாங்கிக்கனும் நமக்கு நம்மளோட நம்ம பிள்ளைகளோட வாழ்க்கை தான் முக்கியம் சந்தோஷம் தான் முக்கியம் அப்படிங்கிற ஒரு நிலைப்பாட்ட அவங்க எடுத்து அன்பு பாசம் நிறைந்த ஒரு குடும்பம் என் கிட்ட இருக்கு மேலும் எனக்கு ஒரு பேர பிள்ளையும் பிறந்து இருக்கு.

 

அவள வளக்கறதுக்கே எங்களோட வாழ்க்கை போதும்குற மகிழ்ச்சியோட இந்த உலகத்துல வாழ்ந்து வந்துட்டு இருக்காங்க.

 

 

-அருண்தர்சன்

 

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன