அன்புள்ள பேரன்பாளரே,

உன் வலிகளை மறைக்க நீ முயற்சிப்பதையும் உன் சுவாசம் கூட உனக்கு கனமாக இருப்பதையும் நான் அறிவேன். உன் ஒவ்வொரு இதயத்துடிப்பும் உனக்கு வலிக்கிறது உன் அழுகையை விழுங்கையில் உன் தொண்டை அனலாய் எரிகிறது. இதை நீ எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை ஆனால் இது வலிக்கிறது. இந்த ஆழ்ந்த பெருந்துயரில் இருந்து நீ மீள்வாயா என்று உனக்கு தெரியாது. உன் மனவலியின் ஆழத்தை நான் அறிவேன். உன் இரத்தத்தை உறைய வைக்கும் இந்த அச்சத்தில் இருந்து நீ மீண்டு வர முயற்சி செய்கிறாய். இந்த பயம் உன்னை நிரந்தரமாக அழுத்துகிறது. இந்த வலி உன்னை மூழ்க முயற்ச்சிக்கிறது.உன் வலிகளிடம் இருந்து நீ விலக முயற்சிக்கிறாய். உன்னை மூழ்கச் செய்யும் இந்த துயர் குளத்தில் நீ மூச்சுக்காற்று பெற போறாடுகிறாய்.இருப்பினும் இந்த விதிகள் தரும் தனிமை உனக்கு ஆறுதலாக இருக்கிறது.

 

ஆம் உன் உணர்வுகளில் உன் துயரில் நீ மூழ்கிக்கொண்டு இருக்கிறாய். இந்த துயர் உன்னை எளிதில் வீழ்த்திவிடும் என்று எண்ணுகிறாய். மன நிம்மதி என்னும் கறை மிக அருகில் உன் பார்வைபடும் தொலைவில் தான் உள்ளது என்பது உனக்கு தெரியும். ஆனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் மனிதனைப்போல் நீயும் பீதிகொள்கிறாய். இனிமேல் சுவாசிக்கவே முடியாது என்ற பயம்.உருவமில்லா விசை ஒன்று உன்னை ஆட்கொண்டு கரையை எட்டவிடாமல் உன்னை ஆழத்திற்கு இழுத்துச்சென்றுவிடும் என அஞ்சுகிறாய்.உன் வலிகள் உன் உணர்வுகள் உன்னை மெல்ல மெல்ல கரைத்துக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிவேன். மிதவை உன் கையில் இருந்தாலும் நீந்திச்செல்லும் முயற்சியை விட இந்த துயர் கடலிலே மிதந்து கொண்டிருப்பது எளிதாக தெரிகிறது. அன்பு என்ற போர்வையில் உன்னை கட்டி அணைத்துக் கொள்ள கரையில் நான் காத்திருக்கிறேன் . கரைக்கு நீந்திச்செல்வது மிக மிக கடினம் என்று நீ எண்ணலாம்.இந்த வலியில் இந்த தனிமையில்  அமைதியாக மிதப்பது உனக்கு எளிதாக இருக்கலாம்.ஆனால் விரைவில் அது உன்னை மூழ்கடையச்செய்துவிடும்.

உன் நண்பர்கள் கரையில் நின்று கொண்டு உன்னை அழைக்கிறார்கள். இந்த வலியை நீ தனிமையில் எதிர்கொள்ள தேவையில்லை என்று ஆறுதல் கூறுகிறார்கள். ஆனால் நீ அவர்களை புறக்கணிக்கிறாய். வலியில் தலைகுனிந்து வேதனையில் அழுதுகொண்டு இருக்கிறாய். உன் நண்பர்களின் துணையை கண்டும் அஞ்சுகிறாய். உன் தனிமையின் இனிமையைக் கண்டும் அஞ்சுகிறாய். உன் அழுகையும் உன் வலிகளும் உனக்கு பழகிவிட்டது. உன் விழிகள் என் விழிகளிடம் கேள்வி கேட்கிறது. கரையில் நின்று கொண்டு ஆறுதல் வார்த்தைகள் கூறும் நீ, ஏன் கடலுக்குள் நீச்சல் செய்து என்னை காப்பாற்றி என் வலிகளை போக்கக்கூடாது என்று .காரணம் என்னவென்றால் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவரின் கைகளை பற்றிகொள்ளும்போது அவர்களின் பயமும் பதற்றமும் இருவரையும் மூழ்கச்செய்து விடும். பேரன்பாளரே உனக்காக கரையில் அன்பு கரங்களோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.

 

இப்போது நீ உன் கால்களை உதைத்து, மிதந்து கொண்டு இருக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து கரையை நோக்கி வா. உன் கைகளை பற்றிக்கொள்ள நான் இருக்கிறேன். உன் வலிகளையும் அழுகையையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள இங்கே காத்திருக்கிறேன். இருவரும் சேர்ந்து உனக்கான விடையை தேடுவோம். இங்கே நீந்தி வா. நான் உன்னை வழி நடத்துகிறேன். சற்றே அருகில் வந்து விட்டாய். நீ நீந்தியது போதும், உன் கால்கள் கரை தொடும் தொலைவில் தான் உள்ளது. ஆம் உன் இடைவரை தான் நீரின் அளவு உள்ளது, என்னிடம் பேசிக்கொண்டே  மெல்ல நடந்து வா. உன் நேர்மறையை கண்டறிய நான் உதவுகிறேன். இந்த வலியில் இருந்து உன்னை ஏன் ஆற்ற வேண்டும் என்ற காரணங்களை நான் சொல்கிறேன், இந்த வலியை கடந்து வா. இப்போது உன் முட்டி அளவு ஆழம் தான் உள்ளது.

உன் வலிகள் உண்மை என்பதை நான் அறிவேன். ஆனால் கரையை கடப்பதில் உள்ள பலன்கள் சற்றே அதிகம். இப்போது உன் கணுக்கால் அளவு தான் ஆழம் உள்ளது. இனிமேல் உனக்கு  மிதவை தேவையில்லை. மிதவையுடன் உன் வலிகளையும் வேதனைகளையும் தூக்கி எறிந்து விடு. என் கண்களை மட்டும் பார். உன் வலிகள் உன் நினைவில் மட்டும் இருக்கட்டும். அது உன்னை மீண்டும் உள்ளே இழுத்து  செல்ல விடாதே. என்னிடமும் உன் நண்பர்களிடமும் பெரும் ஆறுதல் உண்ணுள் உணர்ந்திடு.

என் அண்பென்ற போர்வையில் உன்னை அனைக்கிறேன், இருவரும் சேர்ந்து அன்பான தருணங்களை உருவாக்குவோம். இருவரும் சேர்ந்து உன் வலிகளின் உண்மையை ஒப்புக்கொண்டால் அதற்கான தீர்வுகளை கண்டறிவோம். உனக்கு வலிகள் தரும் அத்துணை விஷயங்களையும் வரிசை படுத்த உன்னை ஊக்குவிக்க, அதை கடந்து நிம்மதி பெருமூச்சு அடைய நான் உதவுகிறேன். உன் வலிகளுக்கு காரணம் நீ இல்லாமல் இருந்தாலும் ஒன்றை மட்டும் நீ ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த துயர் கடலில் நீ மிதந்து கொண்டிருக்க முடிவு செய்தது நீ மட்டுமே. அது ஆபத்து என்று அறியாமல் அக்கடலில் நீ சுகம் கண்டு விட்டாய். ஆனால் அது நிரந்தர சுகம் அளிக்காது என்பது நீ உணர வேண்டும்.

இருப்பினும் உன்னை கரையில் இருந்து அக்கடல் உள்ளே இழுத்து செல்ல முயற்சித்தால், உன் கைகளை பற்றிக்கொள்ள நான் இருக்கிறேன். உன்னை மீட்க நான் இருக்கிறேன். உன் பலத்தை உன் நேர்மறை எண்ணங்களை உனக்கு உணர்த்த நான் இருக்கிறேன். ஒரு நாள் என்னிடத்தில் நீ இருந்து உன்னை போல் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவரை காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன்.  என் அன்பு அந்நியரே உன் கால்களை உதைத்து நீந்தி கரைக்கு வா. உனக்காக நான் காத்திருக்கிறேன். நான் உனக்கு உதவுகிறேன். என்னை நோக்கி வா.

 

உன் புதிய விடியல் காத்திருக்கிறது.

நன்றி

வணக்கம்

 

-கௌதம் ராஜ்

(மொழிபெயர்ப்பு)

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன