வனம்

 

 

 

இவ்வுலகமே கடலால் குழப்பட்ட அன்பும், ஆனந்தமும், அழகும் நிறைந்த சோலை வனமே. வனம் முழுவதும் பூக்களும், விளங்குகளும், அழகு கொஞ்சும் பறவைகளும், பெயர் தெரியாதப் பூச்சிகளும் போன்ற எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்கள் நிறைந்தவை. இந்த உயிரினங்களுள், அந்த வனச்சோலையை அழகு படுத்தும் ஒரு முக்கிய உயிரினத்தின் மேல் எனக்குள்ள புரிதலைப் பற்றி கீழ் வரும் பத்திகளில் வரைய தொடங்க போகிறேன்.

 

உயிரினம் என்று மேலேக் கூறியவுடன் நான் ஏதோ ஒரு புதுமையான உயிரனத்தைப் பற்றி கூறப் போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள். நான் இங்கு கூறவிருப்பது மனிதன் என்ற உயிரனத்தைப் பற்றி தான்.  ஆம் நாம் ஒரு உயிரினமா என்றால், நிச்சயம் நாம் ஒரு உயிரினம் தான்.

 

ஆனால் இந்த உயிரினத்திடம் உள்ள சிக்கலான ஒன்று என்னவென்றால் இந்த உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியில், இந்த உயிரினம் ஆண், பெண் என்ற இரண்டையே பெருமளவில் கண்டுவிட்டதல், இவை தன்னோடு உடல் செயற்பாட்டாலும், மன எண்ணத்தாலும் வோறுபட்டு உள்ள மற்ற உயிர்களை (LGBTQ+] ஏற்க மறுக்கிறது.

 

ஏற்க மறுத்தால் மட்டுமல்ல, அவ்வுயிரிகளை இவை ஏளனப்படுத்தி, துயரப்படுத்தி, நீ மனித உயிரே இல்லை என்று கூறும் வகையில் உதாசினப்படுத்தி வருகிறது. இவ்வாறு உதாசினப்படுத்துதல் தவறா என்றால், நிச்சயம் தவறு தான். ஆனால் நான் முதலிலே கூறியது போல் இவ்வாறு மாறுபட்ட மனிதர்களை பெறுமளவில் பார்க்காததும், அவர்களுக்கும் அழகான மனம் என்ற ஒன்று உண்டு என்பதை அறியாததால் தான் இவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

 

அதுமட்டுமின்றி நான் தொடக்கத்திலேயே கூறியது போல் இவ்வுலகம் என்பது ஒரு வனம், நமக்கு இங்கு வாழ எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதில் சிறிதளவும் குறையாமல் இவர்களுக்கும் [LGBTQ] வாழ உரிமை இருக்கிறது.

 

இதை ஏற்க முடியாதவர்கள் உங்கள் மனதைச் சிறிது திறந்து பாருங்கள், அவர்களுக்கும் வயிறு என்ற ஒன்று இருக்கிறது, பசி என்பது ஏற்படும், கண் என்ற ஒன்றுள்ளது, அதில் கண்ணீர் என்பது அவர்களுடைய வலியாய் வழியும், மனதென்று ஒன்றுள்ளது அதில் அன்பு ,காதல், இரக்கம், உணர்ச்சிப் போன்றைவைப் புதைத்து கிடக்கின்றது;என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

 

நடந்து முடிந்தவை, முடிந்தவைதான் ! அதைப் பற்றி எண்ண வேண்டாம். பல கொடுமைகள் இவர்களுக்கு அரங்கேறியுள்ளன. இவை மறுக்க முடியாதவை தான். இவர்களைப் பற்றி இப்பொழுதாவது நமக்கு சிறிய புரிதல் இருக்கிறதே என்று நான் மகிழ்ச்சியடைகிறேன் . இந்த புரிதலின் உச்சக்கட்ட வெளிப்பாடே நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் நிவேதா என்ற திருநங்கை மாணவித் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இவர் பத்தாம் வகுப்பிலிருந்தேப் பள்ளியில் சேர்ந்து சராசரி மாணவிகள் போல் பள்ளிக்குச் சென்று தேர்ச்சிப் பெற்றுள்ளார் என்பவை மாற்றத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாக நம் கண் முன்னே நிற்கிறது. இவை இச்சமுதாயத்தில் அரும் பெரும் காரியமாக பார்க்கப்பட வேண்டியவை ஆகும். இவ்வாறான  மாற்றத்தின் சுவாசத்தை நம்மோடு வைத்துக் கொள்ளாமல் எழுத்தின் மூலமும், ஊடகங்களின் வழியாலும் காற்றைப் போல பயணிக்க அனும்பதிப்போம். இந்த அழகு நிறைந்த வனத்தில் அவர்களையும் வசந்த காலத்தை இரசிக்க அனுமதிப்போமாக.

 

நன்றி.

 

இப்படிக்கு,

 

பொ.சரவண குமார்.

(PSG ARTS AND SCIENCE -COIMBATORE)

 

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன