வணக்கம் கிளாரா எப்படி இருக்கீங்க வணக்கம் தினேஷ் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க.  வானவில் சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு அன்னியம் அறக்கட்டளை முன்னெடுப்பில் செயல்பாட்டில் இயங்கி வரும் தாய் மன மாதாந்திர மின்னிதழ் இந்த மாத இதழுக்காக உங்களை நேர்காணல் காண வந்துள்ளேன்……

 

நேர்காணலின் முதல் கட்டமாக எங்களின் வாசகர்களுக்கு உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள் கிளாரா விக்கி.

 

வணக்கம் என் பெயர் கிளாரா விக்கி நான் ஒரு இருப்பால் ஈர்ப்பலர்….  நான் BCA படித்துவிட்டு quality incharge ஆக LLS நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கை துணையின் பெயர் விக்னேஷ்வரி என்னும் விக்கி.  விக்கி தனியார் நிறுவனத்தில் accountant ஆக பணி செய்து வருகிறார்…

எங்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்..

 

மூத்த மகள் ஆறாம் வகுப்பு படிக்கிறால்  இளையமகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறால்..

எங்களின் மூத்த மகள் மிகவும் பொறுப்பான மற்றும் சமாதான குழந்தை…  என்றும் என்னை ஒரு தாய் போல் கவனித்துக் கொள்பவள்…..

இரண்டாவது மகள் பாசமும் குறும்புத்தனமும் நிறைந்த ஒரு விளையாட்டு குழந்தை…..  இவளின் குறும்புத்தனத்தை என்னால் என்றுமே கையாள முடிவதில்லை காரணம் அவள் விக்கியின் செல்லப்பிள்ளை…  மூவரும் சேர்ந்து செய்யும் குறும்புத்தனத்தை என் வாழ்வில் ஏற்பட்ட பல போராட்டங்களுக்கு கிடைத்த அன்பளிப்பு இதை யாராலும் எதைக் கொடுத்தாலும் வாங்கி விட முடியாது…  காரணம் இது ஒரு பாசப் பிணைப்பில் உருவான குடும்பம்……

 

இன்று கிளாரா என்ற ஒரு சுதந்திர பறவை சிறகடித்து பறப்பதற்கு இவர்கள் மூவரின் அன்பும் அரவணைப்பும் தான் காரணம் என்று நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் மனநிறைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் இவர்கள் தான்.

 

ஆனால் விக்கி என் வாழ்வில் வருவதற்கு முன் வாழ்க்கை வலிகளும் வேதனைகளும் நிறைந்த ரத்தத்தை வீசிக்கொண்டிருந்த போர்க்களமாக இருந்தது.  காரணம் எனது பெற்றோரும் மற்றும் அவர்களால் எனக்கு திருமணம் என்ற பெயரில் இழைத்த சமூக அநீதி தான் காரணம்…..

 

எனது குழந்தைப் பருவம் வண்ணங்களும் வாதங்களும் பூத்துக் குலுங்கிய ஒரு பருவம்….

அது எண் 14 வயது வரை தான் என்னை தொடர்ந்தது…  14 வயது நிரம்பிய பின் பாலைவனத்தில் தோன்றும் கானல் நீர் போல் மாறத்தொடங்கியது என் வாழ்க்கை.  என் பெற்றோர்கள் என் மீது வன்முறையை தொடங்கினார்கள் அதுவும் காரணம் எதுவும் இன்றி.  எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்த காயங்களுக்கும் வழிகளுக்கும் என் மீது வீசப்பட்ட கொச்சையான சொற்களுக்கும் நான் என்ன தவறு செய்தேன் என்று.  சில நாட்களுக்குப் பிறகு புரிந்தது எனக்கு பெண்கள் மீது ஈர்ப்பு உள்ளதை நன்கு அறிந்துதான் என்மீது வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று….

அன்றிலிருந்து என் வாழ்வில் சிதைந்துபோன சிலையாக உருக்குலைந்து நின்றேன்…

 

எனது பன்னிரண்டாம் வகுப்பை நான் முடித்த பிறகு கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கிழக்கு படிப்பதற்கு விருப்பம் இருந்த நிலையிலும் என் ஈர்ப்பு திருமணத்திற்கு பின்பு மாறிவிடும் என்பதை இவர்களே முடிவு செய்து என்னை ஒரு நரகத்திற்கு அனுப்பி வைத்தார்கள்…..

 

காலத்தின் கட்டாயம் யாரிடமும் என் எண்ணங்களை கூறாமல் அடிபணிந்து சென்றுவிட்டேன்….

 

திருமணத்திற்குப் பின் என் வாழ்க்கையில் இன்பம் என்பது வரண்டுபோன நதியாக மாறியது… திருமண வாழ்வில் அவன் எனக்கு கிடைத்த என்னால் சொல்லக்கூட முடியாத அளவுக்கு கீழ்த்தரமான செயல் என்னால் இன்றும் மறக்க இயலவில்லை….

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவன் எனக்கு இழைத்த வன்கொடுமைகள் அவன் பெயரைக் கூட உச்சரிக்கக் நாக்கு கூசுகிறது…..

 

இருப்பினும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்ற நிலையில் செய்வதறியாமல் என் குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டிருந்தேன்…  ஒரு பெண் எதை வேண்டுமானாலும் சகித்துக் கொள்வாள் தன் மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பாதிப்பு என்றால் எந்த ஒரு பெண்ணும் சகித்துக் கொள்ள மாட்டாள்…  அதுபோல என் வாழ்வில் ஒரு சூழ்நிலையில்…

 

இன்று அதைப் பற்றி நினைத்தால் கூட என்னால் கண்ணீரை அடக்க முடியாமல் கண்ணீர் விடுகின்ற…

 

ஆம் சந்தேகம் மற்றும் நீங்கள் கற்பனையில் கூட நினைக்க முடியாத எனக்கு நிகழ்ந்த திருமணம் என்னும் பெயரில் பாலியல் வன்கொடுமையின் அடையாளமாக உடைந்து சிதறிய உதிரங்கள்  வாசம் வீசிக்கொண்டிருக்கும்… ஒரு கட்டத்திற்குப் பின் என்னால் இதை சகித்துக்கொள்ள முடியாமல் தாங்கிக் கொள்ள முடியாமல் சட்டபூர்வமாக அந்த மிருகத்தை பிரிந்து மீண்டும் ஒரு சிறைவாசம் சென்றேன் என் பிறந்த வீட்டிற்கு.

 

என் இரு குழந்தைகளுடன் சேர்ந்து நான் மீண்டும் என் பெற்றோர்களாலும் என் சகோதரர்களும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு….  என் குழந்தைகளுக்காக என் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தேன்…

 

இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஒரு தோழமை கிடைத்ததும் அந்த தோழமை நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியதால் இந்த காதல் கிடைத்த பின்பு தான் மலர் இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கு ஒரு தோழமை கிடைத்தது அந்த தோழமை நாட்கள் செல்ல செல்ல காதலாக மாறியது இந்த காதல் கிடைத்த பின்பு தான் மனம் வீசும் மலர் வனம் ஆக மாறியது என் வாழ்க்கை…

 

நானும் விக்கியும் சேர்ந்து வாழ்வதற்கு எதிராக இந்த சமூகம் எழுப்பிய சுவரை உடைத்து எறிவதற்கு நாங்கள் இருவரும் பட்ட துயரங்கள் பல.

 

எங்கள் இருவரின் காதல் எங்கள் பெற்றோர்களுக்கு தெரிந்து பிறகு அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்னால் என்றும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு…. காவல் நிலையத்தில் எங்கள் மீது புகார் கொடுத்து காவலர்கள் எங்களை பெற்றோர்கள் முன்பு கொச்சையாக கேள்வி எழுப்பி எங்கள் இருவரின் மீது நடந்த தாக்குதலை என்னால் மறந்துவிட வே முடியது….  ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் படுக்கையறையில் என்ன செய்து கொள்வீர்கள் என்று கொச்சையாக கேட்ட அந்த காவல் அதிகாரியை இன்றும் நினைத்தாலும் வெட்கி தலை குனிகிறேன்…

 

2018 ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி LGBT மக்கள் குற்றவாளிகள் அல்ல என்ற கஷ்டத்தை இந்திய நீதித்துறை கூறிய அன்று மினி எங்களை எவராலும் பிரிக்க முடியாது என்று வீட்டை விட்டு என் இரு குழந்தைகளுடன் வெளியேறினேன். என் விக்கி உடன் இணைந்து வாழ்ந்த கொண்டிருக்கிறேன்..

 

இந்த சட்டம் வந்த அந்த நொடி என்னால் கட்டுக்குள் அடங்க முடியாத ஆனந்தம் ஆரவாரமும் என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது… ஆனால் சூழ்நிலை காரணமாக அனைத்தையும் என் மனதுக்குள் புதைத்துக்கொண்டு மௌனமாக புன்னகைத்து சிரித்துக்கொண்டே சென்று விட்டேன்..

 

துன்பத்தையும் இன்பத்தையும் வெளிப்படையாக காட்ட இயலாத அந்த தருணங்கள் என் வாழ்வின் போர்க்களம் ஆகும்

 

 

வானவில் சுயமரியாதை பேரணி இன்று வரை என்னால் அங்கு செல்ல இயலவில்லை.. காரணம் ஊரடங்கு உத்தரவின் காரணமாக நடைபெறாமல் இருக்கிறது…  இந்தப் பேரணியில் சாதி மதம் இனம் மொழி பாலினம் மற்றும் பாலீர்ப்பு வேறுபாடு இல்லாமல் ஒரு மனிதனின் உணர்வை சகமனிதன் புரிந்துகொண்டு ஒன்று சேரும் ஒரு கோலாகலமான விழிப்புணர்வு கொண்டாட்டம் இந்த கொண்டாட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் ஒரு தளமாகும்…  கண்டிப்பாக அடுத்த வருடம் வானவில் சுயமரியாதை பேரணியில் எனது இரு குழந்தைகளுடன் சேர்ந்து நான் தலை நிமிர்ந்து நடை போடுவேன் என்று உறுதியாக கூறுகிறேன்…

என் குழந்தைகளுக்கும் இதைப்பற்றி நான் கூற கடமைப்பட்டுள்ளேன் யாருக்கு தெரியும் என் குழந்தைகளும் ஓர் குயர் மக்களை சார்ந்த குழந்தையாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம் ஆனால் சகமனிதனின் உணர்வை புரிந்து கொள்ள அனைத்து மனிதனும் முயல வேண்டும் அதற்கு முதல் படியாக என் குழந்தைகளுக்கு இந்தச் சமூக மக்களை பற்றி நான் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருப்பேன்..

 

காதல் என்பது இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் உரிமை உள்ள ஒன்று.  யாருக்கு யார் மீது காதல் வரும் என்பதை எவராலும் கணிக்க இயலாது ஏனென்றால் காதல் என்பது ஒரு கோட்பாடுகள் அடங்க மறுப்பது ஒருவேளை அது கோட்பாடுகளுக்கு அடங்கி அடங்கிவிட்டாள் அது காதல் அல்ல வியாபாரமாகும்…..  எனவே அனைவரும் காதல் செய் வீர்கள் அவரவர் விருப்பம்போல் வாழ்வீர்கள்…  என் வாழ்வில் எனக்கு கிடைத்த காதல் என்னை மேலும் மேலும் வலிமையாக்கி கொண்டே சென்றது…  ஒருவேளை விக்கி என் வாழ்வில் வராமல் போயிருந்தால் என் நிலை என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

 

விக்கி தந்த பாசமும் நேசமும் அன்பும் மற்றும் ஊக்கமும் என்னை உத்வேகமாக முன்னேறி செல்ல செய்தது…  அனைவரும் எனக்கு இரண்டு குழந்தைகள் என்று கூறுகிறார்கள் ஆனால் எனக்கு விக்கி உடன் சேர்த்து மூன்று குழந்தைகள்.  விக்கி என்னையும் குழந்தைகளையும் அரவணைக்கும் விதம் தாய்மையை உணர்ந்து இன்பத்தில் ஏற்பட்ட அனைத்து வழிகளையும் மறந்தது புன்னகைத்துக் கொண்டே இருக்கிறோம்…

 

திருமணம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று அது அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் நடக்க வேண்டுமே தவிர கட்டாயத்தின் பெயரில் அல்ல. திருமணத்தின் போது நமக்கு கிடைக்கும் வாழ்க்கைத்துணை சரியான நபராக இருந்தால் அந்தத் திருமணம் வெற்றி பெறும்..

 

அதிலும் தன் வாழ்க்கைத் துணையின் விருப்பு வெறுப்பு தெரிந்து அவர்களின் சுயமரியாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்பவர்களுக்குத்தான் திருமணம் வெற்றியாகும்…. இதில் படுக்கை அறையும் உள்ளடங்கும் தன் வாழ்க்கைத் துணையின் விருப்பமில்லாமல் தாம்பத்தியத்திற்கு கட்டாயப்படுத்துவது கூட ஒருவிதமான வன்கொடுமை தான்….

 

தாம்பத்தியம் என்பது காதலாக இருக்க வேண்டுமே தவிர வன் கொடுமையாக இருக்கக்கூடாது….  இந்த விதத்தில் நான் தேர்ந்தெடுத்த என் வாழ்க்கை துணை என்றுமே என்னை புரிந்து கொண்டு தான் நடந்து சொல்கிறார்…

 

பால் புதுமை மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் நீங்களாக இருப்பதை வெளிப்படையாக தைரியமாக உறுதியாக இருந்தால் நீங்கள் நிச்சயம் சாதிக்க முடியும் ஏனென்றால் நாம் அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள்….  எப்பொழுது நீங்கள் உங்களின் அடையாளத்தை சொல்வதற்கு தயங்கி தயங்கி நிற்கிறார்களோ அப்பொழுது உங்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளும் வன்கொடுமைகளும் அதிகரிக்கும்..  சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஏதுவாக இருக்கும் பொழுது உங்களின் அடையாளத்தை  பற்றி நீங்கள் கட்டாயம் சொல்லிவிட வேண்டும் என்பது எனது கருத்து….

 

பொதுவாக நான் அனைவருக்கும் சொல்ல விரும்புவது அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கு  அவர் அவர்களுக்கு உரிமை உண்டு அதுவும் அவர்கள் விருப்பத்திற்கேற்ப போல். அதில் நீங்கள் கருத்து என்ற பெயரில் திணிப்பை ஏற்படுத்துவது அவர்கள் படுக்கையை அறையின் தாய்ப்பாலை திறக்க நினைப்பதற்கு சமமாகும்..

 

நீங்கள் இதை செய்ய மாட்டீர்கள் ஏனென்றால் நாகரீக போர்வையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதி மதம் கௌரவத்தை பறைசாற்றும் வெறி பிடித்த மிருகங்கள் இத்தகைய செயலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்…

 

அனைவருக்கும் இனிய வானவில்-சுயமரியாதை மாத வாழ்த்துக்கள்

 

அணியும் அறக்கட்டளை சார்பாக நீங்களும் விக்கியும் மற்றும் குழந்தைகளும் ஆரோக்கியமாக வாழ்க்கையையும் பல உயரங்களை யும் சென்று அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்தி விட்டு கொள்கிறோம்

 

நன்றி கிளாரா விக்கி..

 

-வேம்பரசி

 

 

 

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன