பகுதி-1

உலகம் முழுவதும் பல்வேறு விதமான ஒடுக்குமுறையை, ஒடுக்கப்படும் மக்கள் சந்தித்து வருகிறார்கள. இதில் பல நாடுகளில் ஒடுக்கப்படும் மக்கள் தங்களின் உரிமைகளை போராடி பெற்றுக் கொண்டு வருகிறார்கள், அவர்களுக்கு குரல் கொடுக்கவும் சமூகம் முன்வருகிறது ஆனால் பாலின ஒடுக்குமுறையில் மட்டும் இன்றுவரை உலகம் முழுவதுமே பெரும்பான்மையான நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது. பால்புதுமையினர் (LGBTQAI) மக்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை என்பது பெரிய அளவில் ஏதும் மாற்றம் காணவில்லை. உலகம் புறக்கணிக்கும் ஒடுக்கப்படுவோரில் ஒடுக்கப்படும் கடைநிலை சமூகமாகவே பால்புதுமையின சமூகம் உள்ளது.

பால்புதுமையின மக்கள் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை பெறவே பெரும்பாடாக உள்ள நிலையில் அரசியல் என்பது மிகப்பெரிய மையில் கல். ஆனால் தங்களுக்கான உரிமைகளை பெறவும் பாலாதிக்க சமூகத்தின் தங்கள் மீதான கொலைகள்/ஆணவகொலைகளை தடுக்கவும், சம உரிமையை நிலைநாட்டவும் அரசியல் அதிகாரம் தேவை ஆதலால் தொடர்ந்து அந்த இலக்கை நோக்கி உலகம் முழுவதும் பால்புதுமையின மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அதை நோக்கியே ‘உலக அரசியல் பால்புதுமையினர்’ இக்கட்டுரையில் மூலம் நாம் பயணிக்க போகிறோம்.

வரலாற்றில் LGBTQAI+ அரசியலின் துவக்கம்

1924-ல் GAY RIGHT MOVEMENT-ற்கான தொடக்க நிகழ்வாக சிகாகோவில் ப்ரெண்ட்ச் & பிரிடம் எனும் முதல் கேய் செய்திதாளை தொடங்குகிறார் ‘ஹேன்ரி கேப்பர்’ எனும் ஜெர்மானியர். சிலபிரதிகள் வினியோகிக்கப்பட்ட நிலையில் 1925-ல் காவல்துறையினரால் அக்குழு கலைக்கப்பட்டு செய்திதாள் தடைச் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 1990-களில் அமெரிக்க அரசாங்கம் ஹேன்ரி கேப்பர் வீட்டினை வரலாற்று இடமாக அறிவித்தது.

உலக போர் சூழ்நிருந்த நேரத்தில் பெரிதும் எந்த ஒரு பால்புதுமையினர் நிகழ்வும் ஏற்படவில்லை அப்படியிருந்தும் சிலர் சர்ச்சைகுளாகி கவனத்தை ஈர்த்தனர். அந்த வகையில் ஆங்கில கவிஞரும், எழுத்தாளருமான ராட்கிளிப் ஹால் 1928-ல் தனது தி வெல் ஆஃப் லோன்லினஸ் எனும் லேஸ்பியன் நாவலை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இரண்டாம் உலக போரில் நாஜிகள் GAY-தற்பாலின ஆண்களை கொண்டு வந்து வதை முகாம்களில் அடைத்து அவர்களுக்கு தனித்துவமான முத்திரையை குத்தியது அதுதான் தீ பிங்க் ட்ரையாங்கள், இது தற்பாலினத்தவரை பாலாதிக்கத்தினர் வேட்டையாட உருவாக்கப்பட்ட ஒன்று.

1950-களில் ஹாரி என்பவரால் மெட்டாச்சின் நிருவனம் தொடங்கப்பட்டது. இது அமெரிக்க நாட்டின் முதல் GAY –தற்பாலினத்தவர் உரிமைகள் கோரும் இயக்கமாகும். இவர்கள் தற்பாலினத்தவர்களில் நலன் சார்ந்த திட்டங்கலை முன்வைபதில் கவனம் செலுத்தினர்.

1960- உலகை ஈர்த்த முதல் GAY RIGHT MOMENT இது வரலாற்றில் தற்பாலினத்தவர்களின் அரசியல் நகர்விற்கு மூலமான ஒன்று என கூறலாம். இந்த புரட்சிக்கு பின் 1961-ல் இல்லியொனஸ் அதன் சோடோமி எதிர்ப்பு நீக்கிய முதல் மாநிலமானது. பின்னர் கலிபோர்னியா உள்ளூர் தொலைக்காட்சி தற்பாலினத்தவர் பற்றிய முதல் ஆவணபடத்தை வெளியிட்டது. இதன் மூலம் தற்பாலின மக்களின் புரட்சி உறுதியானது.

1970-களில் பால்புதுமையினரின் முயற்சிகளும், வெளியே வர தொடங்கியதின் புரட்சி நிலையாக 1977-ல் நியார்க் உச்சநீதிமன்றம் திருநங்கை ரெனி ரிச்சர்ட்ஸ் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஓபனில் விளையாடலாம் என தீர்ப்பளித்தது.

1992-ல் தற்பாலினத்தவர்கள் தங்களது இணையருடன் இணைந்து வாழ பதிவு செய்து கொள்ளும் சட்டத்தை கொலம்பியா நீதிமன்றம் வழங்கியது பின்னர் அதில் திருமண சட்ட சலுகைகளையும் அளித்து பிற மாகானங்கள் அதை நீட்டிக்க செய்ததது.

சர்வதேச கோட்பாடு மற்றும் LGBTQAI+ அரசியல்

 

இன்று உலகம் முழுவதுமே மக்கள் ஏற்க மறுத்தாலும், புறக்கணிக்கப்பட முடியாத விசயமாக பால்புதுமையின அரசியல் உலகரங்கில் வளர்ந்து வலுத்து வருகிறது. இதனை கோட்பாடாய் முன்வைத்தவர் ஆராய்ச்சியாளர் பால் ஈநாம் பார்க் ஹாக்லேண்ட். 1990-களின் பிற்பகுதியில் இருந்து ஒரு கட்டுரையில் மூலம் பால்புதுமையினர் அரசியல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச உறவுகளின் கோட்பாடு ஆகியவற்றை ஒன்றினைத்து கொண்டுவரத் தொடங்கினார். அவரது முயற்சி இதற்கான ஆரம்ப முயற்சிகளில் ஒன்றாகும். அந்த நேரத்தில் மனித உரிமை பேசுபவர்களே இந்த ஒடுக்கப்படும், ஓரங்கட்டப்படும் மக்களின் உரிமைகளை அலட்சியமே செய்தனர். ஆராய்சியாளர் ஹாஜ்லேண்ட் தனது கட்டுரையில் கோவத்துடன் எழுதுகிறார். ‘உலகில் பால்புதுமையின (LGBTQAI+) உரிமைகளை மதிக்கும் ஒரு நாடு கூட இல்லையென’ ஆனால் இன்று செவிக் கொடுத்து ஆக வேண்டும் என்ற நிலையை உலக அரசியலில் நிருவியுள்ளனர் பால்புதுமையின மக்கள்.

பால்புதுமையின மக்களின் வாக்கும் அரசியலும்

கடந்த ஆண்டுகளில் பால்புதுமையின மக்களின் வாக்கு என்பது உள்ளாட்சி மாகான தேர்தல் தொடங்கி பிரதமர், குடியரசு தலைவர் தேர்தல் என அனைத்தையும் தாக்கம் செய்ய தொடங்கியுள்ளது. ஆகவே பால்புதுமையினரின் உரிமைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உலக அரசியல் தள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த நிலையாக தங்களின் உரிமைகளை முன்னிருத்த தங்களில் ஒருவர் அரசியல் சபையில் பங்கு பெற வேண்டும் எனும் தீர்மானங்களுடன் பதவிகளை பிடிக்க தொடங்கியுள்ளனர்.

 

தொடரும்…

மேலும் படிக்க

Comments

  • Avatar

    Seshasalam

    08/02/2023 at 4:25 காலை

    பால் புதுமை பற்றிய சர்வதேச நிலை குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் அதிகமாக உள்ளது….

    Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன