ஏதோ ஒரு புத்தகத்தில படித்த மாதிரியான ஒரு ஞாபகம் . ஒரு பேமில இருக்கவங்க எல்லோரும் ஹோட்டலுக்கு சாப்பிட போறாங்க .

 

 

அதுல ஒருத்தவங்க மட்டும் சாப்பாட்டோட வந்த வெங்காயத்தை ரொம்ப அதிகமாகவே சாப்பிட்டாரு.

 

அவர் பேசும் போது அந்த வெங்காயா வாடை  பக்கத்துல இருந்தவங்களால தாங்கிக்க முடியாமா அவர் கிட்ட இருந்து ஒரு படி தள்ளி உட்காருறாங்க .

 

சாதாரண ஒரு வெங்காயம் அதை சாப்பிட்டனால , கூட வந்த ஒருத்தர் தானு நினைப்பு இல்லாமா  எல்லோரும் அவர்கிட்ட இருந்து தள்ளி உட்காருறாங்க.இத்தனைக்கும் அந்த நபர் வெளி ஆள் இல்லை அவுங்க  குடும்பத்துல ஒருத்தர்.சாதரண வெங்காய நாற்றத்தை கூட தாங்கிக்காத இந்த மக்கள் மனது  அவங்க  கூட பழகுறவங்களோ, கூட வாழறவங்களோ யாராச்சும் ஒருத்தர்  குயர் மக்களா தன்னை அடையாளப்படுத்திகிட்டா நூறு படி  தள்ளி தான் உட்கார்ந்துட்டு இருக்காங்க இப்ப வரை.

 

இந்த பூமியில ஒரு கிருமில இருந்து உருவான  மொத்த மனித கிருமி தொகுப்புங்க மனசு எப்பயுமே ஒரே மாதிரி யோசிக்க மாட்டாங்க தான் ,

ஆனால் எல்லாருக்குள்ளயும் உணர்ச்சி என்பது பொதுவானதுதான் .

 

 

அந்த உணர்ச்சிகள்ள இருக்க தன்மைகளை நம்ம ஈஸியா மாத்திக்க முடியும்.

வெங்காயம் சாப்பிடுவது சாதாரண விஷயம்.

 

வெங்காயம் சாப்பிட்டால் ஒரு மாதிரியான ஸ்மெல் வரும்கிறது சாதாரண விஷயம் ,ஆனால் அதுக்காக தள்ளி உட்காரனுங்குறது  நிர்பந்தம் கிடையாது.

 

எல்லாத்தையும் உங்க மூளை ஏத்துக்குற  மாதிரி தான் உங்கள் மூளையை பழக்கனும்.

 

எல்லாத்தையும் ஏத்துக்குற மாதிரி தன்மையை உங்களுக்குள்ள வளத்துக்கும் போது தான் எல்லார்கிட்டயுமே உங்களால பொதுவா பழக முடியும் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் .

 

 

அந்த மாதிரி பாகுபாடு இல்லாத மக்களை நீங்க சந்தித்து இருந்தீங்கன்னா நீங்களும் அதே மாதிரி வாழ்ந்துட்டு வரிங்கன்னு அர்த்தம்.

 

 

குயர் மக்களிடம்  இங்க வாழும் எல்லாரும் பொதுவா பழகணும்னு பல முன்னெடுப்புகளை செஞ்சுட்டு வர அணியும் அறக்கட்டளையின் பாழ்மனம் மின்னிதழ் மூன்றாவது தொகுப்பு நூல் வெளியிடும்   ஒரு நிகழ்வில் நான் கலந்துக்கிட்டேன் .

 

 

அங்க அந்த ஒரு நிகழ்வு மட்டும் நடக்கல அதையும் தாண்டி குயர் மக்களின் குரலாக ஒலித்த பால்பனம் மின்னிதழையும் தாண்டி இனிமே குயர் மக்களுக்குள்ள  இருக்க அனைத்து எழுத்தாளர்களையும் வெளியே கொண்டு வர அணியம் அறக்கட்டளைகளையின் அணயும் பதிப்பு கூடம் தொடக்க விழாவும் அன்னைக்கு தான் நடந்துச்சு.

 

அந்த விழா மற்ற விழாக்கள்ள  இருக்க மாதிரி எந்த ஒரு சமநிலை அற்ற விழா மாதிரி இல்லாம எல்லோரையும் சரிசமமாக பாக்குறதோட இல்லாமல் எல்லோரையுமே மதிக்குற உன்னதமான நிகழ்வு.

 

 

அந்த விழாவுல  இருக்க ஒரே நிபந்தனை என்ன தெரியுமா எல்லாரையுமே ஒரே மாதிரியான பார்வையில பார்க்கிறது  .

ஒரே மாதிரியான பார்வைனா உங்க கண்ணும் மனசும்  ஒருத்தங்க கண்களை பார்க்கும் பொழுது எந்த ஒரு பாகுபாடும் இல்லாம அவங்க இருக்கபடியே அப்படியே ஏத்துக்கிறது.

 

 

ஏதோ ஒரு விழாவிற்கு நீங்க போறீங்க அங்க உங்கள உங்க பெயர் சொல்லியோ இல்ல உங்கள அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஒரு pronoun சொல்லி உங்களை கூப்பிடுவாங்க.

 

ஆனா இந்த விழாவுல  உங்களை மத்தவங்க எப்படி கூப்பிடனும்னு நீங்க செல்ஃபா எல்லாருக்கும் தெரிவிக்கலாம்.

 

உங்களை எப்படி கூப்பிட்டால் உங்களுக்கு பிடிக்கும்னு உங்களால சுதந்திரமா அந்த கூட்டத்தில் சொல்ல முடியும் .

 

நம்ம இந்த உலகத்துல எப்படியாம் வாழுனுனு நினைச்சமோ அதுமாதிரி அங்க வாழ முடியும் நடந்துக்க முடியும்.

யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.

 

எல்லோரையும் வரவேற்கின்ற விதமா பெரும் சத்தத்தோட பறையிசையோடு அந்த நிகழ்வு தொடங்குச்சு .அந்த பறை இசையினால்  உடம்புல நரம்பு முறுக்கு ஏறி பலரும் டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க.

 

 

அந்த டான்ஸ் முடிஞ்ச பின்னாடி  தமிழர்களின்  வீரத்தை பரதம் மூலம் எல்லாரும் கண்களையும் கொண்டு வந்தாரு அந்த நடன கலைஞர்.

 

அதன் பின்னர் குயர் மக்களுக்கா எழுதப்பட்ட அந்த ராப் சாங்க மெல்லிய குரலில்  எல்லோரும் ரசிக்கும்படி பாடி காட்டினார் அந்த இசையமைப்பாளர் அதன் பிறகு ரொம்ப அமைதியாகவும் அழகாகவும் அந்த நிகழ்வு ஆரம்பிச்சது .

 

அந்த நிகழ்வுக்கு பல எழுத்தாளர்களும் வருகை தந்து இருந்தாங்க.

 

ஒருவர் இறந்த பின்னரும் அவரது உணர்ச்சிகள் வாழுமுனா அது எழுத்துக்கள் மூலமாகதான் மட்டும் தான்.அப்படிப்பட்ட எழுத்து களஞ்சியம் நிறைஞ்ச ஒரு புத்தகம் பத்தி தான் நான் பேச போயிருந்தேன்.

 

மொத்தம் நான்கு புத்தகங்கள்  வெளியிடப்பட்டது .

அந்த நான்கு புத்தகங்களும் குயர் மக்களுக்காக குயர் மக்களால் எழுதப்பட்ட அவர்களின் வலியின் வெளிப்பாடாகவே எல்லோரையுமே சென்றடைந்தது.

 

எல்லா புத்தக வெளியீட்டு நிகழ்வுளையும் இருக்கின்ற மகிழ்ச்சியான தருணங்களை விட இந்த நிகழ்வுல இருந்த மகிழ்ச்சியான தருணத்தில் நிறைய வலிகளின் தாக்கங்களும் கண்ணீரால் நிறைந்திருந்த எழுத்துக்களும் நிறைந்திருந்தது.

 

கண்ணீரில் நனைந்திருந்தாலும் அவை யாவும் அழியாத எழுத்துக்கள் தான்.

எப்பயுமே யாரையுமே எந்த ஒரு மனக்கசப்புக்கும் உள்ளாக்காத மனிதர்கள் வாழும் இந்த விழாவில் சிறு அளவு கூட முகசுலிப்புகளும் சமநிலையற்ற மனதுகளும் காணப்படவே இல்லை அனைத்து புத்தகங்களும் வெளியிட்டு முடிச்சதுக்கு பின்னர் எப்போதும் போல ஆனந்தமாய் எல்லாத்தையுமே மறந்து ஒரு நல்ல ஆட்டம் போட்ட பின் அந்த நிகழ்வு நிறைவு பெற்றது.

 

வருடம் தோறும் நடக்கும் அணியும் அறக்கட்டளையின் பால்மணம்ன நூலின் தொகுப்பு நூல் வெளியீடு இந்த வருஷம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தது அதுதான் அணியம் பதிப்புக்கூடம்.

 

அந்த அணியும் பதிப்பு கூட மூலம் வெளிவரும் அனைத்து புத்தகங்களும் குயர் மக்களின் குறவளையில் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளின்  மொத்த உருவமாக இருக்கும் என்று நம்புவோம்.

-அருண் தர்சன்

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன