பகுதி-2

அது ஒரு அழகிய மாலை பொழுது உகாண்டா நாட்டின் மத்திய கம்பாலா நகரத்தில் நடன விடுதியில் ஒரு அழகான திருநங்கை பெண் கிகாண்டா பாரம்பரிய நடனத்தை ஆடிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் கூறியது “திருநங்கை பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது உகாண்டாவில் மிக அறிதான ஒன்று மத்த பால்வெறுப்பு (QUEERPHOPIC) கொண்ட நாடுகளில் திருநங்கை பெண்களுக்கு என்ன நிலையோ அதுதான் உகாண்டாவிலும், வேறு வழியின்றி பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறோம். இப்படியாக அவ்வப்போது கிடைக்கும் நடன வேலை தான் ஒரு நம்பிக்கை கொடுக்கிறது பாலியல் தொழிலில் இருந்து வெளியேற ஒரு வாய்புள்ளது, என்னுடைய ஆசையெல்லாம் ஒரு நடன மையம் தொடங்க வேண்டும் என்பதே, அது எனக்கு, எங்களுக்கு மிக உதவியாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
சரியாக இரண்டு வருடத்திற்கு பின் மீண்டும் அவரை காணுகையில், கடந்த முறை சந்தித்தபோது கூறியதை நினைவுப்படுத்தி கூறினார். எனக்கு வேலை வேண்டு என கூறினேன் ஆனால் கிடைக்கவிலை மீண்டும் நான் பாலியல் தொழிலிலேயே நிலைத்து தள்ளப்பட்டுள்ளேன். ஏனேன்றால் இங்கு திருநர்களுக்கு ஒருபோதும் வேலை வாய்ப்புகள் இல்லை, வேலை தர யாரும் தயாராக இல்லை, அப்படி இருக்க உயிர்பிழைத்தலுக்கு உணவுக்கு பாலியல் தொழில் ஒன்று மட்டுமே எங்களுக்கு உள்ளது. நாங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் கூட எங்களது உடலை விற்று தான் தண்ணீர் வாங்க வேண்டும் இதுதான் எங்களின் நிலை என்றார்.
இதில் பாலியல் குற்ற மசோதா ஒன்றை நிறைவேற்றியது உகாண்டா அரசு அது மேலும் திருநர் மற்றும் பால்புதுமையினர் மக்கள் மீதான் வன்முறையை ஊக்கப்படுத்தியது. அந்நாட்டின் சட்டம் மற்றும் நாடளுமன்ற தலைவர் கூறினார் இச்சட்டம் இயற்கைக்கு எதிரான விசயங்களை ஒழிக்க பைபிலில் இருந்து உருவாக்கப்பட்டது என.
பியான்ஸே கராங்கி உகாண்டா நாட்டின் திருநர் சமத்துவ அமைபின் நிர்வாக இயக்குநர் மட்டுமல்லாது பாலியல் தொழிலாளர் உரிமை செயல்பாட்டாளர், குயர் பெண்ணியவாதி, மனித உரிமை காப்பாளரும் ஆவார்.
கராங்கி கூறுகையில் ஏற்கனவே திருநர்/பால்புதுமயின மக்கள் மீது வெறுப்பு கொண்டிருக்கும் உகாண்டா மக்களுக்கு வன்முறை செய்ய இச்சட்டம் எளிய வழியை உருவாக்கி தந்துள்ளது மேலும் திருநர், பாலுதுமையின மக்களுக்கு தங்கள் உயிரின் மீதான நம்பிக்கைழை இழக்க செய்துள்ளது. இருந்த போதும் இதை விடப்போவதில்லை எனக்கூறி தங்களுக்கான உரிமைகளை பெறவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் வழக்கறிஞர்களை திறட்டி மசோதாவிற்கு எதிராக போராடி வருகிறார் பியான்ஸே கராங்கி.
இது உகாண்டா எனும் ஒரு நாட்டின் பால்வெறுப்பு மனநிலை மட்டுமல்ல ஆதிக்க நாடிகளின் அரசியலும் தான் இந்த உலக ஆதிக்க அரசியல்வாதிகளுக்கு எதிராக திருநர், பால்புதுமையினர் மக்களின் உரிமை அரசியலிற்காக போராடிக் கொண்டிருக்கிறார் பியான்ஸே கராங்கி.
இன்று கருப்பின திருநங்கை பெண்ணாக போராடிக் கொண்டிருக்கும் பியான்ஸே முன்பே ஒடுக்குமுறையில் பலகட்ட ஒடுக்குமுறைகளுடன் பாலாதிக்க பால்வெறுப்பு சமூகத்தை எதிர்த்து அரசியல் களமாடியுள்ளனர் கறுப்பின திருநர்/பால்புதுமையினர் வரலாற்றில்.
பயார்ட் ரஸ்டீன் 1953-ல் இவர் GAY- என தெரியவந்து கைது செய்யபட்டார், 1960-களில் அமெரிக்க சிவில் உரிமைகளுக்காக போராடியவர் மார்டின் கிங் லூதர் அவர்களின் முக்கியமான ஆலோசகர் ஆவார், நிறவெறிக்கு எதிரான பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியவர். பின் பொது வழக்கறிஞராக (GAY) தற்பாலீர்ப்பினருக்கான பல வழக்குகளில் வாதாடியுள்ளார் 2013-ல் ஓபாமா குடியரசு தலைவர் விருது வழங்கி சிறபித்தார். ஆனா போதும் GAY என்பதால் அரசியல் வரலாற்றில் மறைக்கபட்ட முக்கிய அரசியல்வாதியாவார்.
லோரி லைட்புட் சிக்காகோவின் முதல் கறுப்பின லெஸியன் மேயர் ஆவார்.
ஸ்டார்மே டிலவாரே இவர் BIRASICAL எனும் இரட்டை நிறவெறி ஒடுக்குமுறையை சந்தித்த லெஸ்பியன் நடிகர் ஆவார் 1950 களில் இருந்து LGBTQAI+ செயல்பாட்டாளராக இருந்தவர், பல லெஸ்பியன் பார்களில் பவுன்ஸராக இருந்தவர். இவரை “GUARDIAN OF LESBIANS” என ஊர் மக்கள் அழைப்பார்கள். இவர் பல நிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவி செய்து வந்துள்ளார்.
மார்ஷா பி ஜான்சன் திருநங்கை ஆர்வலர் ஆவார். 1969 ஸ்டோன்வால் பால்புதுமையினர் புரட்சியின் முக்கிய நபராவார். STAR எனும் தீவிர அரசியல் அமைப்பை உறுவாக்க உதவியவர் ஆவார்.
ராய் ஓடான் முதல் வெளியடையான கறுப்பின GAY மேயர் ஆவார்.
இப்படியாக வரலாற்றில் மறைக்கப்பட்ட புறந்தள்ளப்பட்ட பேசப்படாத பல கறுப்பின திருநர் பால்புதுமையின அரசியல் தலைவர்கள் ஆளுமைகள் ஏராளமாக உள்ளனர்,
ஆனால் காலம் காலமாக நாட்டின் சுதந்திரத்திற்கும் பிற புரட்சிகளுக்கும் சிஸ் ஜெண்டர் மக்கள் மட்டுமே புரட்சியார்களாக கூறிக் கொண்டு LGBTQAI+ புரட்சியாளர்களை, அரசியல் ஆளுமைகளை மறைத்து வஞ்சித்து வருகிறது ஆணாதிக்க பாலாதிக்க சமூகம்.
உண்மையும், உழைப்பும் ஒருபோதும் மறைக்க முடியாதது என்பது போல் பால்புதுமையின மக்களின் அரசியலும், அரசியல் முன்னெடுப்புகளும், அரசியல் நுழைவுகளையும், பதவி ஏறுவதையும் ஒரு போதும் தடுக்க இயலாது.
பாலுதுமையினரின் அரசியலை பேசியாக வேண்டும் எனும் நிலைக்கு இவ்வுலகை அழைத்து செல்வதே உலக அரசியலில் பால்புதுமையினர் நோக்கம்.
“நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கு யாரும் அடிமையில்லை”
-அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர்

-தொடரும்…

-ம.கிஷோர்குமார்.

இதழ்கள்
புதிய பதிவுகள்
இணைந்திடுங்கள்
மின்னஞ்சல் பதிவு
By checking this box, you confirm that you have read and are agreeing to our terms of use regarding the storage of the data submitted through this form.

மேலும் படிக்க

Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன